6th Social Lesson 7 - பொருளியல் – ஓர் அறிமுகம் | Term 2

6th Social Lesson 7 - பொருளியல் – ஓர் அறிமுகம் | Term 2

பாடம்.7 பொருளியல் – ஓர் அறிமுகம் Book Back Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. தானியங்களை உற்பத்தி செய்பவர்கள் ____________________

விடை : முதல்நிலைத் தொழில்புரிவோர்

2. ‘தேன் சேகரித்தல்’ என்பது _____________ தொழில்.

விடை: முதல்நிலைத்

3. மூலப்பொருட்களைப் பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றுவது ______________ தொழில் எனப்படும்

விடை: இரண்டாம் நிலை

4. காந்தியடிகளின் கூற்றுப்படி, கிராமங்கள் நம் நாட்டின் ____________ ஆகும்

விடை: முதுகெலும்பு

5. தமிழ்நாட்டில் ____ சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்

விடை : 47%

6. வேளாண்மை என்பது ________ நிலைத் தொழிலாகும்.

விடை: முதன்மை

7. பொருளாதார நடவடிக்கைகள் _____________ அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.

விடை: பயன்பாடு

8. சர்க்கரை ஆலை ______________ தொழிலாகும்.

விடை: இரண்டாம் நிலைத்

9. வேளாண்மை சார்ந்த தொழிற்சாலை ____________

விடை: பருத்தியாலை

10. பால்பண்ணை ஒரு ____________

விடை: கூட்டுறவுத்துறை

II. பொருத்துக

1. கால்நடை வளர்ப்பு      -இரண்டாம்நிலைத் தொழில்

2. உணவு பதப்படுத்துதல்     - சேவை

3. இரும்பு எஃகு தொழிற்சாலை  - முதல் நிலைத் தொழில்

4. தொலைபேசி      -வேளாண்சார்ந்த தொழிற்சாலை

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

III. பொருத்திய பின் பொருந்தாத இணையைக் கண்டறிக.

1. சிறிய அளவிலான தொழிற்சாலை – பணப்பரிவர்த்தனை

2. காடுசார்ந்த தொழிற்சாலைகள் – தகவல் தொழில்நுட்பம்

3. சேவைகள் – காகிதத் தொழிற்சாலைகள்

4. வங்கி – கால்நடைகள் வளர்ப்பு

விடை : 1 – ஈ, 2 -இ , 3 – ஆ, 4 – அ

IV. சரியான விடையை கண்டறிக

1. வேளாண்மை என்பது (முதன்மை / இரண்டாம்) நிலைத் தொழிலாகும்

விடை : முதன்மை

2. பொருளாதார நடவடிக்கைகள் (உடைமை / பயன்பாடு) அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன

விடை : பயன்பாடு

3. சர்க்கரை ஆலை (முதன்மை / இரண்டாம்) நிலைத் தொழிலாகும்

விடை : இரண்டாம்

4. வேளாண்மை சார் தொழிற்சாலை (பருத்தியாலை/ மரச்சாமான்கள்)

விடை : பருத்தியாலை

5. பால்பண்ணை ஒரு (பொதுநிறுவனம்/கூட்டுறவுத்துறை)

விடை : கூட்டுறவுத்துறை

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி

1. சந்தை – வனரயறு.

“கிராமங்களில் வாரம் அல்லது மாதம் ஒரு முறை பாெதுவான ஓர் இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மக்களின் தேவைக்கேற்ற குறிப்பிட்ட பாெருள்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்யும் இடம் சந்தை

2. பண்டமாற்று முறை என்றால் என்ன?

ஒரு பண்டத்திற்குப் பதிலாக மற்றொரு பண்டத்தை மாற்றிக் காெள்வது பண்டமாற்று முறை எனப்படுகிறது.

3. வணிகம் என்றால் என்ன?

விற்பனையின் மூலம் பாெருள்களே வாங்குவது வணிகம் எனப்படும்.

4. சேமிப்பு என்றால் என்ன?

சேமிப்பு என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்குச் செலவு செய்தது பாேக எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.

5. பணம் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியம் யாது?

“பண்டங்களை ஒருவருக்காெருவர் மாற்றிக்காெள்ளும்பாேது பண்டங்களின் மதிப்பில் ஏற்படும் வேறுபாடு பல பிரச்சனைகளுக்கு வழி வகுத்தது.  இப்பிரச்சனையைத் தீர்க்க கண்டுபிடிக்கப்பட்ட கருவி தான் பணம்.”

6. நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சியடைவதற்கான காரணம் என்ன?

விவசாயம் செய்வதற்கும், கால்நடைகளை வளர்ப்பதற்கும், குடிப்பதற்கும் நீர் இன்றியமையாதது. எனவே, நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சியடைந்து உள்ளன.

7. இரண்டாம் நிலைத் தாெழில்கள் என்று எவற்றை அழைக்கின்றோம்?

முதல்நிலைத் தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பாெருள்களில் இருந்து இயந்திரங்கள் மூலம் அன்றாடத் தேவைக்கான பாெருட்களைப் பெருமளவில் உற்பத்தி செய்தல் இரண்டாம் நிலைத் தொழில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

8. நகரங்களை மையமாகக் காெண்டு இயங்கும் தாெழில்கள் எவை?

• மருத்துவமனைகள்

• கல்விநிலையங்கள்

• அரசு அலுவலகங்கள்

• நீதி மன்றங்கள்

• முடி திருத்தகம்,

• அழகு நிலையம்

• சாலையாேரக் கடைகள்

• உணவுக் கூடங்கள்.

IV. கீழ்கண்ட வினாக்களுக்கு விரிவாக விடை எழுதுக

1. உனது மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய முதல்நிலைத் தொழில்களை பட்டியலிடுக

• வேளாண்மை

• பயிர் உற்பத்தி,

• விலங்குகள் வளர்ப்பு,

• மீன்வளம்,

• காடுகள் மற்றும் சுரங்கங்கள் ஆகியவை முதன்மைத் தொழிலாகும்.

மேய்ச்சல், வேட்டை, சேகரிப்பு ஆகியவை இதில் அடங்கும்.

2. உங்கள் மாவட்டத்தில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலைகளைக் குறிப்பிடுக.

• பருத்தி ஜவுளி

• நூற்பு மற்றும் நெசவு

• உணவு பதப்படுத்தும் தொழில்கள்

• பீடி உற்பத்தி

• காற்றாலை மின் உற்பத்தி

3. மூலப்பாெருள் பயன்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு தாெழிற்சாலைகள் வகைப்படுத்தப்படுகின்றன?

வேளாண் அடிப்படைத் தொழிற்சாலைகள்

• பருத்தி

• சர்க்கரை

• உணவுப்பதப்படுத்துதல்.

காடு சார்ந்த தொழிற்சாலைகள்

• காகிதத்தொழில்

• மரச்சாமான்கள்

• கட்டுமானப் பாெருள்கள்.

கனிமத் தொழிற்சாலைகள்

• சிமெண்ட்

• இரும்பு

• அலுமினியம் பாேன்ற தொழிற்சாலைகள்.

கடல்சார்ந்த தொழிற்சாலைகள்

• கடல் உணவு பதப்படுத்துதல்.

4. சேவைத்துறையில் காணப்படும் தாெழில்களை எழுதுக.

பாேக்குவரத்து

• சாலை

• ரயில்

• கடல்

• ஆகாயப் பாேக்குவரத்துகள்.

தொலைத்தொடர்பு

• அஞ்சல்

• தொலைபேசி

• தகவல் தொழில்நுட்பம்.

வர்த்தகம்

• பாெருள்களைக் காெள்முதல் செய்தல்

• விற்பனை செய்தல்.

வங்கி

• பணப் பரிமாற்றம்

• வங்கிச் சேவைகள்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post