6th Social Lesson 2 - இந்தியா – மெளரியருக்குப் பின்னர் | Term 3

6th Social Lesson 2 - இந்தியா – மெளரியருக்குப் பின்னர் | Term 3



பாடம்.2 இந்தியா – மெளரியருக்குப் பின்னர் Book Back Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. கடைசி மௌரிய அரசரைக் கொன்றவர் ________ 

a. புஷ்யமித்ரர்

b. அக்னிமித்ரர்

c. வாசுதேவர்

d. நாராயணர்

விடை : புஷ்யமித்ரர்

2. சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்_____

a. சிமுகா

b. சதகர்ணி

c. கன்கர்

d. சிவாஸ்வதி

விடை : பல்லவர்

3. குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______

a. கனிஷ்கர்

b. முதலாம் கட்பிசஸ்

c. இரண்டாம் கட்பிசஸ்

d. பன்-சியாங்

விடை : கனிஷ்கர்

4. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் _____ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.

a. தக்காணம்

b. வடமேற்கு இந்தியா

c. பஞ்சாப்

d. கங்கைப் பள்ளத்தாக்கு சமவெளி

விடை : தக்காணம்

5. சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.

a. சிர்கப்

b. தட்சசீலம்

c. மதுரா

d. புருஷபுரம்

விடை : சிர்கப்

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து சரியான விடையைக் கண்டுபிடிக்கவும்

1 கூற்று : இந்தோ-கிரேக்கர்களின், இந்தோ-பார்த்தியர்களின் குடியேற்றங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிறுவப்பட்டன.

காரணம் : குடியேறிய பாக்டீரியர்களும் பார்த்தியர்களும் படிப்படியாக உள்ளூர் மக்களுடன் திருமண உறவுகொண்டு இரண்டறக் கலந்தனர்

a. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

b. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

c. கூற்று சரி; காரணம் தவறு.

d. கூற்றும் காரணமும் தவறானவை.

விடை : கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

1 கூற்று 1 : இந்தோ-கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு முறையை அறிமுகம் செய்து சின்னங்களும், உருவங்களும், பெயர்களும் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டனர்.

கூற்று 2 : இந்தோ-கிரேக்கர்களின் ஆட்சியைக் குஷாணர் முடித்துவைத்தனர்.

a. கூற்று ‘1’ தவறு , ஆனால் கூற்று ‘2’ சரி

b. கூற்று ‘2’ தவறு , ஆனால் கூற்று ’1’ சரி

c. இரண்டு கூற்றுகளுமே சரி

d. இரண்டு கூற்றுகளுமே தவறு

விடை : கூற்று ‘2’ தவறு , ஆனால் கூற்று ’1’ சரி

2. பொருந்தாததை வட்டமிடுக

புஷ்யமித்ரர், வாசுதேவர், சிமுகா,    கனிஷ்கர்

விடை : ‘கனிஷ்கர்

3. ஒரு வார்த்தையில் பதில் எழுதவும்

1. கடைசி சுங்க அரசர் யார்?

விடை : தேவபூதி

2. சாகர்களில் மிக முக்கியமான, புகழ் பெற்ற அரசர் யார்?

விடை : ருத்ரதாமன்

3. மகதத்தில் கன்வ வம்சத்தை நிறுவியர் யார்?

விடை : வாசுதேவர்

4. கோண்டோ பெர்னஸைக் கிறித்துவ மதத்திற்கு மாற்றியவர் யார்?

விடை : புனித தாமஸ்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. இந்தோ-பார்த்திய அரசை நிறுவியவர் __________________

விடை : கோண்டோ பெர்னஸ்

2. தெற்கே __________________ இறப்பிற்குப் பின்னர் சாதவாகனர் சுதந்திர அரசர்களாயினர்.

விடை: அசோகரின்

3. ஹாலா எழுதிய, நூலின் பெயர் __________________

விடை: சட்டசாய் (சப்தசதி)

4.  ___________ கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.

விடை: கசர்மன்

5. குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் __________________ஆகும்.

விடை: பெஷாவர் (புருஷபுபரம்)

IV. சரியா ? தவறா ?

1. மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பௌத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது

விடை : சரி

2. காரவேலரைப் பற்றி அதிகமான செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்.

விடை : சரி

3. குந்தல சதகர்ணி, சாதவாகன வம்சத்தின், பத்தாவது அரசராவார்.

விடை : தவறு

4. ‘புத்த சரிதம்’ அஸ்வகோஷரால் எழுதப்பட்டது

விடை : சரி

V. பொருத்துக

1. பதஞ்சலி      -கலிங்கம்

2. அக்னிமித்ரர்      -இந்தோ-கிரேக்கர்

3. அரசர் காரவேலர்      -இந்தோ-பார்த்தியர்

4. டெமிட்ரியஸ்     - இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்

5. கோண்டோ பெர்னெஸ்      -மாளவிகாக்னிமித்ரம்

விடை : 1- ஈ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 – இ

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:

1. கடைசி மெளரிய அரசருக்கு என்ன நேர்ந்தது?

மெளரியப் பேரரசின் கடைசி அரசர் பிருகத்ரதா அவரது தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார்.

2. காளிதாசரின் ‘மாளவிகாக்னிமித்ரம்’ குறித்து சிறு குறிப்பு வரைக.

அக்னிமித்ரர் காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னிமித்ரா நாடகத்தின் கதாநாயகன் எனக் கருதப்படுகிறார்.

3. கன்வ வம்சத்தின் அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுக

கன்வ வம்சம் நான்கு அரசர்களை மட்டுமே பெற்றிருந்தது. அவர்களின் ஆட்சி 45 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.

கன்வ அரசர்கள்

• வாசுதேவர்

• பூமிமித்ரர்

• நாராயணர்

• சுசர்மன

4. சாதவாகனர்களின் இலக்கியச் சாதனைகளை எடுத்து கூறுக.

• சாதவாகன அரசர் ஹாலா ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞர்.

• கி.மு .(பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டில், தக்காணப் பகுதிகளில் கண்டரா மொழிப்பள்ளியைச் சார்ந்த சமஸ்கிருதம் செழித்தோங்கியது.

• பிராகிருத மொழியில் 700 பாடல்களைக் கொண்ட சட்டசாய் (சப்தசதி) எனும் நூலை எழுதியதன் மூலம் அரசர் ஹாலா புகழ் பெற்றிருந்தார்.

5. சாதவாகனர்களின் நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை?

• காந்தாரம், மதுரா, அமராவதி, புத்த கயா, சாஞ்சி, பாகுத் ஆகிய இடங்கள் கலைகளுக்கும் அற்புதமான கட்டடங்களுக்கும் பெயர் பெற்றவையாகும்.

• மதுரா சிற்பக் கலைப்பள்ளி பௌத்த, சமண, வேதமதக் கடவுளர்களின் பிம்பங்களையும் முழு உருவச் சிலைகளையும் வடித்தது.

6. முதலாம் கட்பிசஸ்ஸின் சாதனைகளைக் குறிப்பிடுக.

• குஷாணர்களில் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் இராணுவத் தளபதி

இவரேயாவார்.

• அவர் இந்தோ-கிரேக்க, இந்தோ-பார்த்திய அரசர்களை வெற்றிகொண்டு பாக்டீரியாவில் இறையாண்மையுடன் கூடிய அரசராக தன்னை நிலைநிறுத்தினார்.

• தன்னுடைய ஆதிக்கத்தை முதலில் காபூல், காந்தார தேசம் தொடங்கி, பின்னர் சிந்து வரையிலும் பரப்பினார்.

7. கனிஷ்கரின் அவையை அலங்கரித்த துறவிகள், அறிஞர்கள் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிடுக.

• கனிஷ்கர் கலை, இலக்கியங்களின் மிகப்பெரும் ஆதரவாளர் ஆவார்.

• அஸ்வகோஷர், வசுமித்ரர், நாகார்ஜுனர் போன்ற எண்ணற்ற பௌத்தத் துறவிகளாலும் அறிஞர்களாலும் அவருடைய அவை அலங்கரிக்கப்பட்டது.

VII. கீழ்க் காண்பதற்கு விடையளிக்கவும்

1. மெளரியப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தியாவின் மீது படையெடுத்தவர் யார்?

• மெளரியப் பேரரசின் வீழ்ச்சியின் விளைவாக வடமேற்கிலிருந்து சாகர்கள், சைத்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ-கிரேக்கர்கள் அல்லது பாக்டீரிய-கிரேக்கர்கள், குஷாணர்கள் போன்றோர் இந்தியாவின் மீது படையெடுத்தனர்.

• அசோகரின் மறைவுக்குப் பின்னர் தெற்கே சாதவாகனர்கள் சுதந்திர அரசர்களாயினர்.

• குப்தப் பேரரசு நிறுவப்படுவதற்கு முன்னர் வடக்கே சுங்கர்களும் கன்வர்களும் ஆட்சி புரிந்தனர். கலிங்கத்தில் சேடிகள் தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினர்.

2. புஷ்யமித்ர சுங்கரின் வெற்றி பற்றி எழுதுக.

• புஷ்யமித்ர சுங்கர் மகதத்தில் தனது சுங்க வம்சத்தை நிறுவினார்.

• புஷ்யமித்திரர் பாடலிபுத்திரத்தைத் தனது தலைநகராக்கினார்.

• புஷ்யமித்திரரின் அரசு மேற்கு நோக்கி விரிவடைந்து உஜ்ஜைனி, விதிஷா ஆகியவற்றை உள்ளடக்கியதானது.

• பாக்டீரியாவின் அரசன் மினான்டரின் படையை புஷ்யமித்ரர் வெற்றிகரமாக முறியடித்தார். ஆனால் மினான்டர் காபூலையும் சிந்துவையும் தன்கைவசம் வைத்துக் கொண்டார்.

• கலிங்க அரசர் காரவேலனின் தாக்குதலையும் புஷ்யமித்ரர் முறியடித்தார்.

• மேலும் விதர்பாவையும் அவர் கைப்பற்றினார். புஷ்யமித்ரர் வேதமதத்தைத் தீவிரமாகப் பின்பற்றியவர்.

• அவர் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக இருமுறை அஸ்வமேத யாகம் நடத்தினார

3. கௌதமிபுத்திர சதகர்ணியைப் பற்றிக் குறிப்பெழுதுக.

• சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர் கௌதமிபுத்திர சதகர்ணியாவார்.

• இவரது அன்னை கௌதமி பாலஸ்ரீயால் வெளியிடப்பட்ட நாசிக் மெய்க்கீர்த்தியில் (பிரசஸ்தியில்) இவர் சாகர், யவனர் (கிரேக்கர்) பகலவர் (பார்த்தியர்) ஆகியோரை அழித்து ஒழித்தார் எனக் கூறப்பட்டுள்ளது.

• பேரரசின் எல்லைகளும் இம்மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

• இவர்களின் பேரரசு மகாராஷ்டிரா, வடக்கு கொங்கன், பெரார், குஜராத், கத்தியவார், மாளவம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.

• கப்பலின் வடிவம் பொறிக்கப்பட்டுள்ள வசிஸ்டபுத்திர புலமாயி நாணயங்கள் ஆந்திரர்கள் கடல்சார் நடவடிக்கைகளில் பெற்றிருந்த திறன்களையும். அவர்களது கப்பற்படை வலிமையையும் உணர்த்துகின்றன.

• போகர் கல்வெட்டானது தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அரசு உருவாக்கத்தில் தென்னிந்தியா வகித்த முக்கியப் பங்கைப் பற்றிக் கூறுகிறது

4. கோண்டோபரித் அரச வம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன?

• இந்தோ-கிரேக்கர், இந்தோ-சைத்தியர் ஆகியோருக்குப் பின்னர் இந்தோ – பார்த்தியர் வந்தனர்.

• அதனைத் தொடர்ந்து இவர்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டின் பிற்பாதியில் குஷாணர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.

• இந்தோ-பார்த்திய அரசு அல்லது கோன்டோபரித் வம்சம் கோண்டோ பெர்னஸால் நிறுவப்பட்டது.

• இந்தோ- பார்த்தியர் ஆட்சி செய்த பகுதி காபூல், காந்தாரா ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

• கோண்டோ பெர்னெஸ் எனும் பெயர் கிறித்துவ உபதேசியார் புனித தாமசுடன் தொடர்புடையதாகும்.

• கிறித்துவ மரபின்படி புனித தாமஸ் இந்தியவிற்கு வருகை புரிந்தார்.

• கோண்டோ பெர்னெஸின் அரசவைக்கு அவரது வருகையால் மன்னர் கிறித்துவத்தை தழுவினார்.

5. இந்தோ-கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர் யார்? ஏன்?

• மினான்டர்: இவர் நன்கறியப்பட்ட இந்தோ-கிரேக்க அரசர்களில் ஒருவராவார்.

• வடமேற்குப் பகுதியில் பெரியதொரு அரசை இவர் ஆண்டதாகக் கூறப்படுகிறது.

• இவர் வெளியிட்ட நாணயங்கள் பரந்து விரிந்த பகுதியில் கிடைக்கின்றன. காபூல் பள்ளத்தாக்கில் தொடங்கி சிந்துநதி கடந்து மேற்கு உத்தரப்பிரதேசம் வரையிலான பகுதிகளில் கிடைத்தன.

• மிலிந்த பன்கா எனும் நூல் ஒன்று உள்ளது.

• பாக்டீரிய அரசன் மிலிந்தா என்பவருக்கும் பௌத்த அறிஞர் நாகசேனாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலே அந்நூலாகும். இந்த மிலிந்தாவே மினான்டர் என அடையாளப்படுத்தப்படுகிறது.

• மினான்டர் பௌத்தராக மாறி பௌத்தத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றியதாகக் கருதப்படுகிறது.

6. சாகர்கள் யார்?

• இந்தியாவில் இந்தோ-கிரேக்கரின் ஆட்சிக்குச் சாகர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.

• நாடோடி இனத்தவரான இவர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவுக்குள் நுழைந்து வடக்கு மற்றும் மேற்கிந்தியா முழுவதும் பரவினர்.

• இவர்கள் துருக்கிய நாடோடிப் பழங்குடியினர்க்கு எதிரானவர்கள்.

• சாகர்கள் பண்டைய நாடோடி இன ஈரானிய சைத்தியர்கள் ஆவர். சமஸ்கிருத மொழியில் இவர்கள் சாகர்கள் என அறியப்பட்டனர்.

• சாகர்களின் ஆட்சியானது மாவோஸ்  அல்லது மோகா என்பவரால் காந்தாரப்பகுதியில் நிறுவப்பட்டது.

• அவருடைய தலைநகர் சிர்காப் ஆக இருந்தது.

• மோரா கல்வெட்டில் அவருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

• அவருடைய நாணயங்களில் புத்தர், சிவன் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

7. கனிஷ்கருடைய மதக் கொள்கை பற்றி எழுதுக.

• கனிஷ்கர் ஒரு தீவிர பௌத்தராவார்.

• கனிஷ்கரின் பேரரசு ஒரு பௌத்தப் பேரரசு.

• பாடலிபுத்திரத்தைச் சேர்ந்த பௌத்தத் துறவியான அஸ்வகோஷர் என்பவரின் போதனைகளால் அவர் பௌத்தத்தைத் தழுவினார்.

• கனிஷ்கர் மாபெரும் வீரராகவும் பேரரசை உருவாக்கியவராகவும் இருந்தபோதிலும் அதே அளவிற்கு மகாயான பௌத்தத்தை ஆதரிப்பவராகவும் அதைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்பவருமாக விளங்கினார்.

• கனிஷ்கர் பௌத்தத்தை அரசமதமாக்கினார்.

• மேலும் பல ஸ்தூபிகளையும் மடாலயங்களையும் மதுரா, தட்ச சீலம் மற்றும் பேரரசின் இதரபகுதிகளிலும் கட்டினார்.

• புத்தரின் நற்செய்திகளைப் பரப்புவதற்காகப் பௌத்தச் சமயப் பரப்பாளர்களைத் திபெத், சீனா மற்றும் மத்திய ஆசியாவின் பலநாடுகளுக்கும் அனுப்பிவைத்தார்.

• பௌத்தமதப் பிரிவுகளிடையே நிலவிய கருத்துவேறுபாடுகளைக் களைவதற்காக நான்காவது பௌத்தப் பேரவையை ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள குந்தல வனத்தில் கூட்டினார்.

• இப்பேரவையில்தான் ஹீனயானம், மகாயானம் எனப் பௌத்தம் பிளவுற்றது


Share:

0 Comments:

Post a Comment

Popular Posts