> ஆன்லைனில் நீட் தேர்விற்கான பயிற்சி- தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார் ~ Kalvikavi

10,11,12th New Study Material 2025 - 2026

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ஆன்லைனில் நீட் தேர்விற்கான பயிற்சி- தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்

ஆன்லைனில் நீட் தேர்விற்கான பயிற்சி- தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழக அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய  மாணவர்கள் நீட் பயிற்சிக்கு தயாரா கும் வகையில் இலவச நீட் பயிற்சி வகுப்புகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிக் கல்வித்துறை நடத்தி வருகிறது. 

இந்த ஆண்டுக் கான நீட் பயிற்சி பெற இதுவரை 7420 மாணவ, மாணவியர் பதிவு செய் திருந்தனர். அவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறையின் மூலம் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. 

அதற்காக Amphisoft Technologies என்ற நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.

 இந்த நிறுவ னம் 7420 மாணவர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி அளிக்க தற்போது முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளது

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆன் லைன் பயிற்சியை நேற்று தொடங்கி வைத்தார். 


நீட் பயிற்சி பெற
பதிவு செய்துள்ள மாணவ, மாணவியருக்கு மேற்கண்ட நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக Laptop வழங் கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மாணவர்கள் தங் கள் வீடுகளில் இருந்தே நீட் பயிற்சி பெற்றார் கள். இந்த பயிற்சி நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் என்ற அடிப்படையில் நடத்தப் படும். அதன் தொடர்ச்சியாக 4 மணி நேரம் பயிற்சி தேர்வு ளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்

அதன்படி, 

🔴இயற்பி யல், 

🔴வேதியியல், 

🔴தாவரவியல்

🔴விலங்கியல் 

பாடங்களில் தலா ஒரு மணி நேரம் வீதம் மணி நேர பயிற்சி நடக் கும், பயிற்சி முடிந்ததும் அதே நாளில்
ஒவ்வொரு பாடத்துக்கும் 1 மணி நேரம் வீதம் 4 மணி நேரம் பயிற்சி தேர்வுகள் நடத் தப்படும். 

இதுதவிர
🔴80பயிற்சி தேர்வுகள்,
🔴80 வளரறி தேர்வுகள்,
🔴5அலகு தேர்வுகள்,
🔴12 திருப்புதல் தேர்வுகள்
நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel