🔥 6th to 12th Quarterly Question Papers 2026 Question Papers • Important Questions • Answer Keys CLICK HERE NEW +
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

மார்ச் 2026 மேல்நிலை பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 30.07.2026 அன்று முதல் வழங்கப்படும்



மார்ச் 2026 மேல்நிலை பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 30.07.2026 அன்று முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் அசல் மதிப்பெண் (Original Mark Certificates) / மதிப்பெண் பட்டியலினை (Statement Of Marks) பெற்றுக்கொள்ளலாம். மேலும், விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது சமர்ப்பித்த பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இதுவரை அவர்கள் பெற்றுக்கொள்ளாமல் இருப்பின் அவரவர் தேர்வெழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share:

0 Comments:

Post a Comment