🔔 பொதுத்துறை வங்கிகளில் 10,277 எழுத்தர் (கிளார்க்) பணியிடங்கள் அறிவிப்பு!
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் 10,277 எழுத்தர் (Clerk) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை IBPS வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 2025 ஆகஸ்ட் 21க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
📌 பணியின் விவரங்கள்:
- பணி: Customer Service Associates (Clerk)
- மொத்த காலியிடங்கள்: 10,277
- தமிழ்நாடு: 894 இடங்கள்
- புதுச்சேரி: 19 இடங்கள்
- சம்பளம்: மாதம் ₹24,050 - ₹64,480
- தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம்
- வயது வரம்பு: 20 முதல் 28 (21.8.2025 தேதியின்படி)
📝 தேர்வு முறை:
- முதல்நிலை எழுத்துத் தேர்வு (100 மதிப்பெண்கள்)
- முதன்மைத் தேர்வு (200 மதிப்பெண்கள்)
- நேர்முகத் தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
ஆங்கிலப்பாடத்தை தவிர மற்ற அனைத்துப் பாடவினாக்களுக்கும் தமிழில் பதிலளிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
📍 தேர்வு மையங்கள்:
முதல்நிலை தேர்வு: சென்னை, கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விருதுநகர்
முதன்மைத் தேர்வு: சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்
💰 விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST/மாற்றுத்திறனாளிகள்: ₹175
- மற்றவர்கள்: ₹850
- கட்டணம் ஆன்லைனில் செலுத்தப்பட வேண்டும்.
🌐 விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த பிறகு, அதனை பிரிண்ட் எடுத்துக் கைவசம் வைத்துக் கொள்ளவும்.
🔚 கடைசி தேதி: 21.08.2025
👉 முழு அறிவிப்பைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்! உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
0 Comments:
Post a Comment