🔥 6th to 12th Quarterly Question Papers 2026 Question Papers • Important Questions • Answer Keys CLICK HERE NEW +
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

மாணவர்களுக்கு 2024 – 2025 ம் கல்வியாண்டிற்கான பாடத்திட்டம் வெளியீடு!

CBSE 2024 – 2025 ம் கல்வியாண்டிற்கான பாடத்திட்டம் வெளியீடு!

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ 2024-25-ம் கல்வியாண்டு வருகிற ஏப்ரல் 1-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் 2024 – 25-ம் கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ளது.


2023-24-ம் கல்யாண்டு முடிவடைந்த நிலையில், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ), 2024-25-ம் கல்வியாண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்குகிறது.


இந்நிலையில், சி.பி.எஸ்.இ பாடத் திட்டப் பள்ளிகளுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 2024-25-ம் கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புக்கான பாடத்திட்டத்தில், 2 மொழிப்பாடம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகியவை கட்டாய பாடங்களாக சேர்க்கப்பட்டு உள்ளன. மேலும், 3-வது மொழி (தமிழ் உள்பட உள்ளூர் மொழிகள்) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடம், திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவை விருப்பப்பாடமாக சேர்க்கப்பட்டு உள்ளன.

மேலும், கலை படிப்பு, உடற்கல்வி, உடல் நலம், தொழிற்பயிற்சிகள் ஆகியவற்றை உள்மதிப்பீட்டுக்காக பள்ளிகளே தேர்வு செய்து கொள்ளலாம் என்று சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பாடத்திட்டத்தில், 9 பாடங்கள் இடம் பெற்றுள்ளன. இதில், 5 கட்டாயப்பாடங்களும், 4 விருப்பப் பாடங்களும் இடம் பெற்றுள்ளன. 3-வது மொழியாக தமிழ் உள்பட 34 மொழிகளை தேர்வு செய்யலாம் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.

Share:

0 Comments:

Post a Comment