+2 பொதுத்தேர்வு சொந்த நடையில் பதில்; மதிப்பெண் வழங்க உத்தரவு

 
+2 பொதுத்தேர்வு சொந்த நடையில் பதில்; மதிப்பெண் வழங்க உத்தரவு!




பிளஸ் 2 தேர்வில், புத்தகத்தில் உள்ளது போன்று இல்லாமல், சொந்த நடையில் எழுதினாலும், மதிப்பெண் வழங்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு உத்தர விடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 13ல் துவங்கி, ஏப்.,3ல் முடிந்தது; 8.25 லட்சம் பேர் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தம், 280 மையங்களில் இன்று துவங்க உள்ளது. இந்த பணியில், 50 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

ஒவ்வொரு ஆசிரியரும், தினமும், 24 விடைத்தாள்களை திருத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. விடை மதிப்பீட்டு பணிகளை, ஏப்.,21ல் முடிக்க, அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. விடை திருத்தம் செய்ய, பாடவாரியான விடை குறிப்புகள், அரசு தேர்வு துறையில் இருந்து, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

விடைக்குறிப்பு 'லீக்'

கணித தேர்வில், ஒரு ஐந்து மதிப்பெண் கேள்வி தவறாக இருந்ததாக கூறப்பட்டது. இந்த கேள்விக்கு மாணவர்கள் பதில் எழுத முயற்சித்திருந்தால், 5 மதிப்பெண் வழங்கலாம் என, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

ஒரு மதிப்பெண் வினாக்களை தவிர மற்ற பிரிவில், மாணவர்கள் சொந்த நடையில் பதில் எழுதியிருந்தால், முழு மதிப்பெண் வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம் செய்வதற்கான விடைக்குறிப்புகள், ஆசிரியர்களுக்கு 'ஆன்லைன்' வழியில் வழங்கப்பட்டன. இதனால், அந்த விடைக்குறிப்புகள், 'வாட்ஸ் ஆப்' வழியே, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கும் பரவியது குறிப்பிடத்தக்கது

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts