8th Tamil Refresher Course Topic 4 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் )

8th Tamil Refresher Course Topic 4 - Answer key (புத்தாக்க பயிற்சி கட்டகம் )

  • எட்டாம் வகுப்பு - தமிழ் 
  • புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
  • செயல்பாடு - 4
  • செய்யுளின் நயங்களை அறிதல்

திறன்/ கற்றல் விளைவு

6.11 ஒலியியைபு. சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுகள், மரபுத் தொடர்கள் போன்ற மொழியின் மரபு, நடை, நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கதைகள், கட்டுரைகளின் நயம் பாராட்டல்

கற்பித்தல் செயல்பாடு

அறிமுகம்

  • செய்யுளில் இடம்பெறும் எதுகை, மோனை, இயைபு போன்ற தொடை நயங்களை அறிதல்.

மோனை

  • செய்யுளில் முதல் எழுத்து ஒன்றி வருமாறு அமைவது மோனை எனப்படும்.

(எ.கா.) சொல்லுக சொல்லிற் பயனுடய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல். (குறள் -200)

எதுகை

  •    இரண்டாம் எழுத்து ஒன்றி வருமாறு அமைவது எதுகை எனப்படும்.

(எ.கா.) இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

ன்னயம் செய்து விடல். (குறள் - 314)

இயைபு

  • செய்யுளின் இறுதி எழுத்தோ அசையோ ஒன்றி வருவது இயைபு எனப்படும்.

(எ.கா.) புதுமைகள் செய்த தேசமிது

பூமியின் கிழக்கு வாசலிது

கவிஞர் தாராபாரதி

எடுத்துக்காட்டு

சாந்தம் உடையோர் பேறு பெற்றோர் எனத்

தத்துவமும் சொன்னார்- இந்தத்

தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது

தலைவர்கள் அவர் என்றார்!

மாந்தரின் வாழ்வில் தேவைப் படுவது

சாந்தம் தான் என்றார்- அது

மண்ணையும் ஆளும் விண்ணையும் ஆளும்

மகத்துவம் பார் என்றார்.

                                     கவிஞர் கண்ணதாசன்

வினாக்கள்

1. மேற்குறிப்பிட்ட பாடலில் உள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

  • மாந்தர், சாந்தம், மண்ணையும் விண்ணையும்

2. மேற்கண்ட பாடலில் இடம்பெறும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

  • தத்துவம், தாரணி, மண்ணையும், மகத்துவம்

3. மேற்கண்ட பாடலில் உள்ள இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக

  • பெற்றோர், சொன்னார். என்றார்,


மதிப்பீட்டுச் செயல்பாடு

நடிப்புச் சுதேசிகள்

நெஞ்சி லுரமுமின்றி

நேர்மைத் திறமுமின்றி

வஞ்சனைசொல்வாரடீ -கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடீ

கூட்டத்தில் கூடிநின்று

கூவிப் பிதற்ற லின்றி

நாட்டத்தில் கொள்ளாரம - கிளியே

நாளில் மறப்பாரடீ.


                                     - கவிஞர் பாரதியார்


1 . மேற்கண்ட பாடலில் இடம்பெறும் மோனைச்சொற்களை எடுத்து எழுதுக,

நெஞ்சில் , நேர்மை

வஞ்சனை , வாய்ச்சொல்

கூட்டத்தில் , கூவிப்

நாட்டத்தில் , நாளில் 

2 . மேற்கண்ட பாடலில் இடம்பெறும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

நெஞ்சில் , வஞ்சனை 

கூட்டம் , நாட்டம் 

3 . மேற்கண்ட பாடலில் உள்ள இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

  • சொல்வாரடீ , வீரரடி , கொள்ளாரடீ , மறப்பாரடீ 

4 . மேற்கண்ட பாடலின் தலைப்பு மற்றும் ஆசிரியரின் பெயரை எழுதுக.

  • பாடலின் தலைப்பு - நடிப்புச் சுதேசிகள்

ஆசிரியர் - கவிஞர்.பாரதியார்

Read Also:  

8th Standard Refresher Course Module Books and Answer key Tamil Medium and English Medium Download PDF

7th Standard Refresher Course Module Books and Answer key Tamil Medium and English Medium Download PDF

    Post a Comment

    கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

    குறிப்பு:

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
    4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
    -அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

    Previous Post Next Post