> Tamilnadu Samacheer guide 6th Tamil Solutions Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி ~ Kalvikavi - Educational Website - Question Paper

Tamilnadu Samacheer guide 6th Tamil Solutions Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி

Samacheer guide 6th Tamil Solutions Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி

 Students can Download 6th Tamil Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி Questions and Answers, Summary, Notes,

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 7.2 தமிழ்நாட்டில் காந்தி

கற்பவை கற்றபின்

Question 1.

காந்தியடிகளின் பொன்மொழிகளைத் திரட்டுக.

Answer:

காந்தியடிகளின் பொன்மொழிகள் :

(i) எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு உய்த்திருக்கிறது.

(ii) நீ என்ன செய்கிறாய் என்பது முக்கியமல்ல; நீ செய்கிறாய் என்பதுதான் முக்கியம்.

(iii) அமைதியை அடைவதற்கென எந்தப் பாதையும் கிடையாது. அமைதியேதான் பாதை.

(iv) எல்லாவற்றுக்கும் அறம்தான் அடிப்படை. அந்த அறத்திற்கே உண்மைதான் அடிப்படை.

(v) பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ முதலில் அதுபோல நீ மாறு.

(vi) பொறுமையும், விடாமுயற்சியும் இருந்தால் சிரமங்கள் எனும் மலையை வென்றுவிடலாம்.

(vii) குணநலனும், புனிதத்தன்மையுமே பெண்ணின் உண்மையான ஆபரணம்.

(viii) சாதுவான வழியில், உன்னால் உலகத்தையும் அசைக்க முடியும்.

(ix) உடலின் வீரத்தைவிட உள்ளத்தின் வீரம் மிகவும் உயர்வானது.

(x) எல்லாச் சமயங்களுக்கும் பொதுவானது அகிம்சை.

(xi) தோல்வி மனச்சோர்வைத் தருவதில்லை. மாறாக ஊக்கத்தையே தருகிறது.

Question 2.

காந்தியடிகள் நடத்திய அறவழிப் போராட்டங்களின் பெயர்களைத் தொகுக்க.

Answer:

காந்தியடிகள் நடத்திய அறவழிப் போராட்டங்கள் :

(i) கத்தியின்றி இரத்தமின்றி கண்டனப் போராட்டம்

(ii) வரிகொடா இயக்கம்

(iii) ஒத்துழையாமை இயக்கம்

(iv) உண்ணாவிரதம்

(v) உப்பு சத்தியாகிரகம்

(vi) சட்டமறுப்பு இயக்கம்

(vii) தனியாள் அறப்போராட்டம்

(viii) வெள்ளையனே வெளியேறு.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.

காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்

அ) கோவை

ஆ) மதுரை

இ) தஞ்சாவூர்

ஈ) சிதம்பரம்

Answer:

ஆ) மதுரை

Question 2.

காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்?

அ) நாமக்கல் கவிஞர்

ஆ) திரு.வி.க

இ) உ.வே.சா.

ஈ) பாரதியார்

Answer:

இ) உ.வே.சா

பொருத்துக

1. இலக்கிய மாநாடு – பாரதியார்

2. தமிழ்நாட்டுக் கவிஞர் – சென்னை

3. குற்றாலம் – ஜி.யு.போப்

4. தமிழ்க் கையேடு – அருவி

Answer:

1. இலக்கிய மாநாடு – சென்னை

2. தமிழ்நாட்டுக் கவிஞர் – பாரதியார்

3. குற்றாலம் – அருவி

4. தமிழ்க் கையேடு – ஜி.யு.போப்

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. ஆலோசனை – நாம் எச்செயலைச் செய்தாலும் பெரியவர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகு செய்ய வேண்டும்.

2. பாதுகாக்க – நம் நாட்டைப் பாதுகாக்க அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

3. மாற்றம் – பருவமழை பொய்த்ததால் பூமியின் தட்பவெப்பநிலை மாற்றம் அடைகிறது.

4. ஆடம்பரம் – நாம் ஆடம்பரமாக வாழ்வதைத் தவிர்த்து எளிமையாக வாழவேண்டும்.

குறுவினா

Question 1.

காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முதலில் ஏன் நுழையவில்லை ?

Answer:

காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முதலில் நுழையாததற்குக் காரணம் :

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல எல்லா மக்களுக்கும் அனுமதி இல்லை என்பதால் காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்லவில்லை.

Question 2.

காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிகழ்வைக் கூறுக.

Answer:

1937ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். உ.வே.சாமிநாதர் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார். உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார். “இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும்ஆவல் உண்டாகிறது” என்று கூறினார் காந்தியடிகள்.

சிறுவினா

Question 1.

காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வினை எழுதுக.

Answer:

காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வு :

(i) காந்தியடிகள் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார்.

(ii) செல்லும் வழியில், வயலில் வேலை செய்யும் உழவர்களைக் கண்டார். அவர்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருந்தனர்.

(iii) அப்போது, காந்தியடிகள் நீளமான வேட்டி, மேல்சட்டை, பெரிய தலைப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

(iv) பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள். தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா? என்று சிந்தித்தார்.

(v) அன்று முதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார். அந்த எளிமைத் திருக்கோலத்திலேயே தம் வாழ்நாள் முழுவதும் இருந்தார்.

Question 2.

காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை எழுதுக.

Answer:

(i) தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் கூறியுள்ளார்.

(ii) ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

(iii) திருக்குறள் அவரைக் கவர்ந்த நூல்.

(iv) 1937 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். உ.வே.சாமிநாதர் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார்.

(v) உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்து, “இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறினார். இந்நிகழ்வுகளே காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றன.

சிந்தனை வினா

Question 1.

காந்தியடிகளிடம் காணப்படும் உயர்ந்த பண்புகளாக நீங்கள் கருதுபவை யாவை?

Answer:

காந்தியடிகளிடம் காணப்படும் உயர்ந்த பண்புகள் :

(i) உண்மை பேசுதல்

(ii) நேர்மை

(iii) இன்னா செய்யாமை

(iv) பிறர் துன்பம் தீர்க்கும் திறம்

(v) அகிம்சை வழிப் போராட்டம்

(vi) ஆடம்பரத்தை எதிர்த்து எளிமையைப் போற்றியமை

(vii) தீண்டாமையை எதிர்த்தமை

(viii) ஒற்றுமையைப் போற்றியமை.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :


1. மதுரையில் காந்தியடிகளின் பெயரில் …………………… உள்ளது.

2. ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு ………………………..

3. ரௌலட் சட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்கான கருத்தாய்வுக் கூட்டம் ……. வீட்டில் நடைபெற்றது.

4. எளிமையை ஓர் அறமாகப் போற்றியவர் ………………..

5. காந்தியடிகளைப் “பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்க முடியுமா?” என்று கேட்டவர் ………………..

6. பாராதியாரை “இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்” என்று கூறியவர் …………………

7. “பாரதியாரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்” என்று கூறியவர் ……………..

8. தமிழகம் வந்த பிறகு காந்தியடிகளின் கோலம் …………….

9. காந்தியடிகள் மனிதர்களிடம் ……………………….. பாராட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

10. காந்தியடிகளைக் கவர்ந்த நூல்கள் ……………

11. சென்னையில் இலக்கிய மாநாடு நடைபெற்ற ஆண்டு …………………

12. சென்னையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டிற்கு வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தவர் …………………….

13. காந்தியடிகள் செல்வதற்கு முதலில் மறுத்த இடங்கள் ………………,……………..

Answer:

1. அருங்காட்சியகம்

2. 1919

3. இராஜாஜி

4. காந்தியடிகள்)

5. பாரதியார்

6. இராஜாஜி

7. காந்தியடிகள்)

8. எளிமைத் திருக்கோலம்

9. உயர்வு தாழ்வு

10. ஜி.யு.போப் எழுதிய தமிழ்க் கையேடு, திருக்குறள்

11. 1937

12. உ.வே.சாமிநாதர்

13. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குற்றால அருவி

வினாக்கள் :

Question 1.

காந்தியடிகளுக்கும் பாரதிக்கும் இடையே ஏற்பட்ட சந்திப்பின் போது நிகழ்ந்த உரையாடல் யாது?

Answer:

(i) 1919 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ரௌலட் சட்டத்தை எதிர்த்து இராஜாஜியின் வீட்டில் கருத்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பாரதியார் விரைந்து சென்று காந்தியடிகளின் அருகில் அமர்ந்தார்.

(ii) “திரு. காந்தி அவர்களே! நான் இன்று மாலை ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதற்குத் தாங்கள் தலைமை தாங்க முடியுமா?” என்று கேட்டார்.

(iii) “இன்று எனக்கு வேறு பணி இருக்கிறது. உங்கள் பொதுக்கூட்டத்தை நாளை நடத்த முடியுமா?” என்று கேட்டார் காந்தியடிகள்.

(iv) “அது முடியாது, திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும். தாங்கள் தொடங்கப்போகும் இயக்கத்துக்கு என் வாழ்த்துகள்” என்று கூறிய பாரதியார், “நான் போய் வருகிறேன்” என்று கூறி எழுந்து சென்றுவிட்டார்.

Question 2.

பாரதியார் பற்றிக் காந்தியடிகளின் மதிப்பீடு யாது?

Answer:

(i) ஒருமுறை பாரதியார், காந்தியடிகளை ஒரு பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்க அழைத்தார். அவர் ‘வேறு பணி இருப்பதாகவும் அடுத்த நாள் நடத்த முடியுமா’ என்று கேட்டார். அதற்குப் பாரதியார் மறுத்துவிட்டுத் திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் காந்தியடிகளின் இயக்கத்திற்கு வாழ்த்துகள் என்றும் கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

(ii) அவர் சென்றதும் “இவர் யார்?” என்று காந்தி வியப்புடன் கேட்டார். “இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்” என்றார் இராஜாஜி.

(iii) “அப்படியா? இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்” என்றார் காந்தியடிகள். இந்நிகழ்ச்சியின் மூலம் பாரதியார் பற்றிய காந்தியடிகளின் மதிப்பீட்டை அறியலாம்.

Question 3.

காந்தியடிகள் ஆடம்பரத்தை எதிர்ப்பவர் என்பதற்கு சான்று ஒன்று தருக.

Answer:

(i) காந்தியடிகள் தமிழ்நாடு வந்தபோது காரைக்குடியைச் சுற்றியுள்ள ஊர்களுக்குச் சுற்றுப்பயணம் சென்றபோது கானாடுகாத்தான் என்னும் ஊரில் ஒரு பணக்காரர் வீட்டில் தங்கி இருந்தார். அந்த வீடு மிகவும் ஆடம்பரமாக இருந்தது.

(ii) வீட்டில் எங்குப் பார்த்தாலும் வெளிநாட்டு அலங்காரப் பொருட்கள் நிறைந்து இருந்தன. காந்தியடிகள் அந்தப் பணக்காரரிடம், “உங்கள் வீட்டை வெளிநாட்டுப் பொருள்களால் அழகு செய்து இருக்கிறீர்கள். அதற்குச் செலவு செய்த பணத்தில் பத்தில் ஒரு பங்கு பணத்தை என்னிடம் கொடுத்தால் போதும். இதைவிட அழகாக செய்துவிடுவேன்” என்று கூறினார். பணக்காரர் தலைகுனிந்தார்.

(iii) அந்த வீட்டுக்குக் காந்தியடிகள் மறுமுறை வந்தபோது அங்கே வெளிநாட்டுப் பொருள்கள் ஒன்றுகூட இல்லை. காந்தியடிகள் மகிழ்வுடன் அவரைப் பாராட்டினார்.

Question 4.

காந்தியடிகள் குற்றால அருவியில் நீராட முதலில் ஏன் மறுத்தார்?

Answer:

(i) குற்றால அருவியில் நீராட அனைவருக்கும் உரிமை அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அருவிக்குச் செல்லும் வழியில் ஒரு கோவில் இருந்தது. அதன் வழியாகச் செல்ல ஒருசாராருக்குத் தடை இருந்தது.

(ii) எனவே அனைவரும் அருவியில் நீராட முடியாத நிலை இருந்தது. அதனை அறிந்த காந்தியடிகள் குற்றால அருவியில் நீராட மறுத்துவிட்டார்.

(iii) மனிதர்களிடம் உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்தார்.

Question 5.

உ.வே.சாமிநாதர் பற்றிக் காந்தியடிகள் கூறியது யாது?

Answer:

(i) 1937 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டிற்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். உ.வே.சா அவர்கள் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார். அப்போது உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ச்சியடைந்தார்.

(ii) ” இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று காந்தியடிகள் கூறினார்.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts