12th Tamil Revision Exam Question

12th Tamil Revision Exam Question 

 திருப்புதல் தேர்வு - 3

4th Revision Answer : Click here

தமிழ்.        

பகுதி-1


1. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேர பேசுகின்ற இலக்கண நூல்

அ). யாப்பருங்கலக்காரிகை 

ஆ) தண்டி அலங்காரம் 

இ) தொல்காப்பியம் 

ஈ) நன்னூல்

2. இன்று என்ற கவிதை குறும்படத்தை இயக்கியவர்

அ)சிற்பி பாலசுப்ரமணியன் 

ஆ)அய்யப்ப மாதவன் 

இ) ஜலாலுதீன் ரூமி 

ஈ)சுரதா

3. இவற்றை வாயிலுக்கு சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ரூமி குறிப்பிடுவது

அ) வக்கிரம் 

ஆ) அவமானம் 

இ) வஞ்சனை 

ஈ) இவை அனைத்தும்

4. வையகமும் வானகமும் ஆற்றல் அரிது எதற்கு?

அ) செய்யாமல் செய்த உதவி 

ஆ) பயன்தூரக்கார் செய்த உதவி 

இ) நிணைத்துணை நன்றி 

ஈ) செய்நன்றி

5.கருத்து 1. இயல்பு வழக்கில் தொடரமைப்பு என்பது எழுவாய் பயனிலை என்று வருவதே மரபு.

கருத்து 2: தொடரமைப்பு சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது

அ) கருத்து 1 சரி 

ஆ) கருத்து 2 சரி 

இ) இரண்டு கருத்துக்களும் சரி 

ஈ) கருந்து 1 ஈரி 2 தவறு

6. எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிவே என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது

அ) தனிக் குடும்ப முறை

இ) தாய்வழிச் சமூக முறை

ஆ) விரிந்த குடும்ப முறை

ஈ) தந்தைவழிச் சமூக முறை

7. தமிழர் மானிடவியல் எல்னும் நுவைப் படைத்தவர்.

அ) பக்தவத்சல பாரதி 

ஆ) திசு நடராசன் 

இ) உ வே சா 

ஈ) மகாதேவன்

8.உவமை கவிஞர் என்று சிறப்பிக்கப் படுபவர்.

அ) பாரதி

ஆ) பாரதிதாசன்

இ)சுரதா

ஈ) கண்ணதாசன்

9. யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து உணர்த்தும் திணைகள் முறையே

அ).அஃறினை உயர்திணை

ஆ) உயர்திணை அஃறிணை

இ)விரைவுத்திணை அஃறிணை 

ஈ)விரைவுத்திணை உயர்திணை

10." உயர்திணை என்மனார் மக்கட்கட்டே

அஃறிணை என்மனார் அவரல பிறவே"

- இத்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல்

அ)நன்னூல்

 ஆ) அகத்தியம் 

இ)தொல்காப்பியம் 

ஈ) இலக்கண விளக்கம்

11. நன்கலம். இலக்கணக் குறிப்பு தருக

அ) வினைத்தொகை 

ஆ) பண்புத்தொகை 

இ) உவமைத்தொகை 

ஈ) உம்மைத்தொகை 

12.உரிமைத் தாகம் என்னும் சிறுகதையின் ஆசிரியர்

அ)பாலச்சந்திரன் 

ஆ)பாரதி 

இ)பூமணி 

ஈ) முகமது மீரான்

13 பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தேர்வு செய்க.

அ)அவருக்கு நல்லது கெட்டது நல்லா தெரியும்.

ஆபுத்தக கண்காட்சி நடைபெறுகிறது

இ)வரட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது

ஈ)மயில்கள் விரலியரைப்போல் ஆடுகின்றன.

14 அருங்கானம் புணர்ச்சி விதி தருக

அ) ஈறுபோதல், இனமிகல்

ஆ)ஈறுபோதல், ஆதிநீடல்

இ)ஈறுபோதல், தன்னொற்றிரட்டல் 

ஈ)ஈறுபோதல்

பகுதி-//

பிரிவு /

எவையேனும் முன்றனுக்கு விடைதருக்

15.நிலையானா குறித்து சவரி உரைக்கும் கருத்து பாது?

Answer:

  • நிலையாமை என்பது உலக வாழ்வு நிலை இல்லாதது என்பதைக் குறிக்கும்.
  • “என் பொய்யான உலகப்பற்று அழிந்தது; என் பிறவி ஒழிந்தது” என்று சவரி நிலையாமை குறித்துக் கூறுகிறாள்.

16. மறக்கக் கூடாதது மறக்கக் கூடியது எவற்றை?

Answer

  • ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது கூடாது. அவர் செய்த தீமையினை அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது 

I8.கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்."

Answer: 

  • செந்நிறத்து வானம் போல் சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் மீது வீற்றிருக்கும் வியர்வை முத்துக்களைப் பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி

பிரிவு-2

எவையேனும் இரண்டனுக்கு விடைதருக

19.புக்கில், தன்மனை - சிறுகுறிப்பு எழுதுக?

Answer

  • ‘புக்கில்’ என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிப்பதாகும்.

“துகள் அறுகேள்வி உயர்ந்தோர் புக்கில்” என்ற புறநானூறு பாடல் (222 : 6) சான்றாகும்.

தன்மனை :

  • திருமணத்திற்குப் பின் கணவனும், மனைவியும் பெற்றோர்களிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் ‘தன்மனை’ என அழைக்கப்பட்டது.

20 நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் கூறும் கருத்தை குறிப்பிடுக?

Answer

  • நடைபெற்றியலும் (கிளவியாக்கம், 26) என்றும் நடை நவின்றொழுகும் (செய் 135) என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.
  • கவிதையின் இயங்காற்றல்தான் நடை என்கிறது தொல்காப்பியம்.
  • மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே நடை எனப்படும்.

21.சங்ககாலத்தில் தாய்வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?

Answer

  • தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும், வளங்களும் பெண்களுக்கே போய்ச் சேர்ந்தன.
  • தாய்வழிக் குடும்பங்களில் பெண்களே குலத் தொடர்ச்சிக்கு உரியவர்களாக இருந்தனர்.

பிரிவு 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருத

23 உவமை தொடர்கள் சொற்றொடரில் அமைத்து எழுதுக

அ)எலியும் பூனையும் போல

Answer:

ரகுவும் ரவியும் எலியும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொண்டனர்.

ஆ)தாமரை இலை நீர் போல

Answer:

இவ்வுலக ஆசைகளின் மீது தாமரை இலை நீர் போல பற்று இல்லாமல் இருத்தல் வேண்டும்.

23 மயங்கொலி சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக

1.கலை களை,கழை

Answer

கலை, களை, கழை

கழை காட்டில் தீப்பிடித்ததால் களைகளுடன் கலைமான்களும் செத்து மடிந்தன.

24 வல்லின மெய்கள் இட்டும் நீக்கியும் எழுதுக

அ) நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தை பொறுத்தே இருக்கிறது.

Answer

  • நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தைப் பொறுத்திருக்கிறது. 

ஆ)புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்த கவனம் அறிவை பெறுவதற்கு அடிப்படைத் தேவையாகும்

Answer

புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்த கவனம் அறிவைப் பெறுவதற்கு அடிப்படைத் தேவையாகும்.

25 பொருத்தமான வேற்றுமை உருபுகளை சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக

அ)மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.

Answer

மாறனின் பேச்சுத்திறனை யாரால் வெல்ல முடியும்.

ஆ)போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுகள் குவிந்தன

Answer

போட்டியில் வெற்றி பெற்ற கலைசெல்விக்கு பாராட்டுகள் குவிந்தன.

26. இலக்கணக் குறிப்பு எழுதுக.

1.அன்பும் அறமும்

Answer

1.எண்ணும்மை

27. செல்லிடத்து - புணர்ச்சி விதி கூறுக

செல்+இடத்து 

  • விதி 1 : தனிக்குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும்
  • விதி 2 : உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே

28.தமிழாக்கம் தருக

1. Lobby - ஓய்வறை

2.Biography - வாழ்க்கை வரலாறு

29ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம்

அ)பொலிந்தான்

Anwser  பொலிந்தான் 

பொலி+த்(ந்)+த்+ஆன்

பொலி-பகுதி

த் - சந்தி ; ந் ஆனது விகாரம்

த் - இறந்த கால இடைநிலை

ஆன்- ஆண்பால் வினைமுற்று விகுதி

ஆ)விளங்கி

Answer

விளங்கு+இ

விளங்கு - பகுதி

இ - வினையெச்ச விகுதி

30.பொருளை அறிந்து தொடரமைக்க

அ)கறி தின்றான்

ஆ) கரி தின்றான்

பகுதி:!!

பிரிவு

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக

31.எங்கொலிதீர் ஞாலத்து இருளகற்றும் இடம் சுட்டி பொருள் விளக்குக

Answer

இடம் :

இப்பாடலின் அடி தண்டியலங்காரம் என்னும் அணி இலக்கண நூலின் பொருளணியியலில் இடம் பெற்றுள்ள உரை மேற்கோள் பாடலாகும். இதன் ஆசிரியர் தண்டி ஆவார்.

பொருள் :

மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே பொதிகையில் பிறந்து, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் இருளைப்போக்கும் தமிழே உனக்கு நிகர் இல்லை என்கிறார்.

32.ஜடாயுவை தந்தையாக ஏற்று ராமன் ஆற்றிய கடமையை எழுதுக

answer

இராமன் ஆற்றிய கடமைகள் :

  • இராவணன் சீதையைச் சிறையெடுத்த போது தடுத்துச் சண்டையிட்டுக் காயப்பட்டவன் சடாயு.
  • அவன் இராவணனோடு சண்டையிட்டுத் தன் உயிரை இழந்ததை அறிந்த இராமன் தன் தந்தையாகவே சடாயுவைக் கருதினான்.
  • ஒரு தந்தைக்கு மகன் எவ்வாறு இறுதிச் சடங்குகளைச் செய்வானோ அதைப் போன்று இராமன் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டான்.
  • பார்ப்பவர்கள் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும் சந்தனக் கட்டைகளையம் இராமன் கொண்டு வந்தான்.
  • தேவையான தருப்பைப் புற்களை ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் தூவினான். மணலினால் திருத்தமான மேடை அமைத்து, நன்னீரும் கொண்டு வந்தான்.
  • இறுதிச்சடங்கு செய்யப்படக்கூடிய மேடைக்குத் தன் தந்தையாகக் கருதிய சடாயுவைத் தன் பெரிய கைகளினால் தூக்கிக் கொண்டு வந்தான்.

33. இவற்றையெல்லாம்விட நன்றி உயர்ந்தது குறள் வழி விளக்குக


34" செம்பரிதி மலைமேட்டில் தலை சாய்ப்பான் செந்நிறத்துப் பூகாடாம் வானமெல்லாம் -  தொடர்வெளிப்படுத்தும் காட்சி தயத்தை விளக்குக

பிரிவு-2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக

3.5.தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்திற்கு செய்யும் உதவிகள் யாவை?

Answer:

  • காலையில் 4 மணிக்குப் படிக்க வேண்டிய தேவைகள் அனைத்தையும் செய்து முடித்துவிடுவேன்.
  • அவர்களுக்கு நானே தேநீர் தயார் செய்து கொடுப்பேன். தாயுடன் சேர்ந்து உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவேன்.
  • தாய், தந்தை பணிக்கு ஆயத்தம் ஆவதற்குள் மூன்று பேருக்கும் உணவு எடுத்து வைப்பேன்.
  • பள்ளிக்கு என் பெற்றோர் உதவியில்லாமல் நானே மிதிவண்டியில் செல்வேன். வீட்டிற்குத் திரும்பியவுடன் வீட்டைச் சுத்தம் செய்து, பெற்றோருக்குத் தேநீர் தயார் செய்து வைப்பேன்.
  • பெற்றோர் வந்தவுடன் மறுநாளுக்குத் தேவையான பொருள்களை கடைக்குச் சென்று வாங்கி வருவேன்.
  • பிறகு சிறிது நேரம் படித்து விட்டு இரவு உணவை உண்ட பிறகு 10.00 மணி வரை படிப்பேன்.

36.சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் விளக்குக

Answer:

  • எந்தத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும் தான் தோன்றுகிறது.
  • சங்கப்பாடல்களில் ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன.
  • இதனையே அந்தப் பனுவல் பாடல்களின் ஒலிப்பின்னல் என்கிறோம். இந்த ஒலிக்கோலங்கள் உணர்ச்சிகளைக் காட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன.

கடந்தடு தானை மூவிருங் கூடி

உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே;

முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன்னாடு;

முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;

  • உயிர் ஒலிகள் குறிப்பாக நெடில் ஒலிகளின் வருகையும், சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பவரல் தன்மை பெற்றிருப்பதும், இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாக விளங்கியதை உணர்த்தும்.

சான்று : ‘படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை கடாஅ யானைக்’ – இவ்வரிகள் ஒலிக்கோலத்தின் பண்பை உணர்த்துகிறது.

37 தனிக்குடும்ப வகை விளக்கம் தருக

தனிக்குடும்பம்:

தனிக்குடும்பம் என்பது படிமலர்ச்சியில் இறுதியில் ஏற்பட்டது. இது இன்று தொழிற் சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. தனிக்குடும்பம்,

ஆதிக்குடிகளிடமும் இருந்தது என்று இனவரைவியல் ஆய்வுச் சுட்டுகிறது.

38 தொடரியல் போக்குகளை நடை அழகியல் வழிநின்று விளக்குக

தொடரியல் போக்குகள் :

  • ஒலிக்கோலமும், சொற்புலமும் சொற்றொடர் நிலையும் பாடலின் தளத்தை ஏர் நடத்திப் பண்படுத்திப் போகின்றன என்றால், பாத்தி கட்டி வரப்புயர்த்தும் பணிகளைத் தொடரியல் வடிவம் செய்கின்றது. பரிமாறப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்பத் தொடர்கள் ஏறியும் இறங்கியும் திரும்பியும் சுழன்றும் இயங்குகின்றன.

பிரிவு-3

எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடை தருக

34நிரல் நிறை அணி (அல்லது) ஏகதேச உருவக அணியைச் சான்றுடன் விளக்குக

4பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

(அல்லது)

யானைக்கும் அடி ஈறுக்கும்

41.தமிழாக்கம் தருக

i) A new language is a new life

ii) knowledge of languages is the doorway to wisdom

iii) The limits of my language are the limits of my world.

iv) Learner is a treasure that will follow its owner everywhere

1. A new language is a new life. (Persian Proverb).

புதிய மொழி புதிய வாழ்க்கை.

2.Knowledge of languages is the doorway to wisdom. (Roger Bacon).

மொழிகளின் அறிவு ஞானத்தின் வழித்தடம்.

3.The limits of my language are the limits of my world. (Willgenstin).

என் மொழியின் எல்லை என் உலகத்தின் எல்லை.

4.Learning is a treasure that will follow its owner everywhere. (Chinese Proverb).

கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

42.பின்வரும் பாடவின் மையக் கருத்தை எழுதி ஏற்புடைய மூன்று நயங்களைச் சுட்டுக

மூச்சங்கூட்டி

முதுபுலவர் தமைக் கூட்டி

அச்சங்கத்திலே

அளப்பரிய பொருள் கூட்டி

சொற்கங்கமாகச்

சுவைமிகுந்த கவி கூட்டி

அற்புதங்களெல்லாம

அமைத்த பெருமாட்டி

-கண்ணதாசன்

முன்னுரை :

  • இப்பாடலைப் பாடியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார். புகழ்பெற்ற தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

திரண்ட கருத்து :

  • தமிழன்னையானவள், மூன்று சங்கங்கள் அமைய காரணமானவள். முச்சங்கங்களிலும் நல்ல அனுபவமும் நல்ல அறிவும் கொண்ட புவர்களை ஒன்றாகக் கூட்டியவள். அச்சங்கத்திற்குள் அளவிடமுடியாத பொருள்களைக் கூட்டி நீ உன்னுடைய சொற்களை அதிகரித்து அதே நேரத்தில் சுவை மிக்க கவிதைகளை எல்லாம் ஒரே இடத்தில் கூடிவருமாறு புதுமைகள் எல்லாம் அமைந்த பெருமகளே! தமிழன்னையே!

தொடை நயம் :

மோனை :

காட்டுக்கு யானை

பாட்டுக்கு மோனை

முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும்.

சான்று:

முச்சங்கங்

அச்சங்கத்

சொற்சங்க

அற்புதங்க

முதுபுலவர்

அளப்பரிய

சுவைமிகுந்த

அமைத்த

எதுகை :

மதுரைக்கு வைகை

செய்யுளுக்கு எதுகை

முதலெழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகையாகும்.

சான்று:

முச்சங்க - அச்சங்க

சொற்சங்க - அற்புதங்க

இயைபு : கடைசி எழுத்தோ ஓசையோ ஒன்றி வருவது இயைபு ஆகும்.

சான்று:

  • பெருமாட்டி - பொருள்கூட்டி
  • கவிகூட்டி - பொருள்கூட்டி

அணி நயம் :

அணியற்ற பாக்கள்

பிணியுள்ள வணிதை

தமிழ் மொழியானது சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழி என்று இயல்பான வார்த்தைகளால் இப்பாடல் அமைந்துள்ளதால் இயல்பு நவிற்சியணி இடம் பெற்றுள்ளது.

சந்த நயம் :

சந்தம் தமிழுக்குச் சொந்தம்

ஏற்ற கருவியுடன் பாடினால் கேட்போருக்கும், பாடுவோருக்கும் இனிமையத் தரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது இப்பாடல்.

சுவை நயம் :

நா உணரும் சுவை ஆறு

மனம் உணரும் சுவை எட்டு

என்ற வகையில் இப்பாடலில் சொற்சங்க மாகச் சுவைமிகுந்த கவிகூட்டி பெருமிதச் சுவை மிகுந்துள்ளது.

முடிவுரை:

கற்றாருக்கும், கல்லாருக்கும் ஏற்ற வகையில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.

43.சொல்லை பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.

அ) பலகை

இ) தலைமை

ஆ)கோவில்

ஈ)தாமரை

பகுதி - }}

44. அ)சினத்தை காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும் இக்கூற்றை முப்பால் வழி நின்று விளக்குக

Answer:

சினமானது அருள் உள்ளத்தை அழித்து மெய்யுணர்வை அடையாது செய்துவிடும். சினத்தைக் காத்தால் வாழ்வு மேன்மையடையும் சினத்தைக் காப்பான்.

சினம் செல்லுமிடம் :

“செல் இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்

காக்கின்என் காவாக்கால் என்?”

தன் சினம் செல்லுபடியாகும் தன்னை விடவும் மெலியாரிடத்தில் சினம் கொள்ளாமல் சினத்தைக் காத்துக் கொள்பவனே உண்மையில் சினத்தைக் காப்பவனாவான்.

மறத்தல் நன்று :

“மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய

பிறத்தல் அதனான் வரும்”

ஒருவனுக்குத் தீமையான விளைவுகள் சினத்தாலேயே ஏற்படும் என்பதால் யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதனை மறந்துவிடுவது நன்மையாகும்.

சினம் எனும் பகை :

“நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோப் பிற?”

சினம் எனும் பகை, முகத்தில் அழகு கூட்டுகின்ற சிரிப்பையும், உள்ளத்தின் அருளுக்கு அழகு கூட்டுகின்ற மகிழ்ச்சியையும் கொல்லும்.

தன்னைக்காக்க சினம் தவிர் :

“தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்”

சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்துவிடும். எனவே, தன்னைக் காத்துக் கொள்ள விரும்புகிறவன் சினத்தைக் காக்க வேண்டும்.

சுற்றம் பேண சினத்தைத் தவிர் :

“சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

ஏமப் புணையச் சுடும்”

சினமானது, தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பாகும். அஃது ஒருவனுடைய சுற்றம் என்கின்ற பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழித்து விடும். எனவே, சினத்தைக் காத்தோமென்றால், எளியவரோடு பகை மேற்கொள்ளமாட்டோம்; யாரிடத்தும் சினம் கொள்ள மாட்டோம்; முகமலர்ச்சியும், அகமகிழ்ச்சியும் அதிகமாகும்; தன்னையே காத்துக் கொள்வோம்; சுற்றத்தையும் காப்பாற்றுவோம். இதனால் வாழ்வு மேன்மைப்படுத்தப்படும் என்று முப்பால் கூறுகின்றது.

(அல்லது)

ஆ) பண்பின் படிமமாக படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையை பாடப்பகுதி வழி நிறுவுக

Answer:

குகனுடன் கொண்ட உறவுநிலை :

(i) தன்மீது அளவற்ற அன்பு கொண்ட குகன் தன்னைப் பிரிய விருப்பமின்மை என்பதை உணர்ந்து ‘என் உயிர் அணையாய்’ என்றான். “நீ என் உயிர் போன்றவன்’ என்று கூறியது மட்டுமல்லாது, நீ சொல்லும் வேலைகளைச் செய்யும் பணியாளனாய் இருக்கின்றேன்.

(ii) குகனின் அன்பால் தன்னை அவனுடைய பணியாளாய்’ கருதும் உரிமையை இராமன்குகனுக்குக் கொடுத்திருந்தான். சகோதரனாக ஏற்றுக் கொள்கிறான் இராமன்.

சடாயுடன் கொண்ட உறவு நிலை :

(i) தனது மனைவிசீதையை இராவணன் சிறையெடுத்தபோது தடுத்து, சண்டையிட்டுக் காயப்பட்டு இறந்தான் சடாயு என்பதை அறிந்து அவனது உயிர்த்தியாகத்தின் உத்தமத்தை உணர்கிறான்.

(ii)  தனக்காக உயிரைவிட்ட சடாயுவின் உடலை இறுதிச் சடங்கிற்குத் தயார்படுத்தும்போது, தந்தைக்கு மகன் ஆற்றும் கடமையாகக் கருதுகிறான். சடாயுவின் தியாகத்தால் ‘மகனாய்’ கருதும் உரிமையை இராமன் சடாயுவுக்குக் கொடுத்தான்.

சவரியுடன் கொண்ட உறவு நிலை :

(i) தன்னைக் கண்ட பிறகுதான் பிறவி ஒழிப்பேன் என்று தவம் இருந்த சவரியிடம் பரிவு காட்டி பேசினான் இராமன்.

(ii) இராமனைக் கண்டதால்தான் பிறந்ததின் பயனை அடைந்ததாக உணர்ந்த சவரி, இராமன், இலக்குவனுக்கு விருந்து அளித்து மகிழ்ந்தான். தனது அன்புக்குரியவராக விளங்கிய சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினான் இராமன்.

சுக்ரீவனிடம் கொண்ட உறவு நிலை :

(i) தனக்காக இலங்கை சென்று கடும்போர் புரிந்து இராவணனின் மணிமகுடத்தை எடுத்து வந்த சுக்ரீவனை நினைத்துப் பெருமைப்பட்டான் இராமன்.

(ii) நீ வேறு நான் வேறு அல்ல ; உன் பகைவர் என் பகைவர், உன் உறவினர், என் உறவினர் என் உறவினர் உன் உறவினர், ‘நீ என் இனிய உயிர் நண்பன்’ என்று கூறினான் இராமன்.

(iii) சுக்ரீவனைத் தன் உயிர்நண்பனாகக் கருதும் உரிமையைக் கொடுத்தான் இராமன், மேலும் அவனைச் சகோதரனாக ஏற்றுக் கொள்கிறான் இராமன்.

வீடணனிடம் கொண்ட உறவு நிலை :

(i) தன் மனைவியைக் கவர்ந்து சென்ற இராவணனின் செயலைக் கண்டிக்கும் இராவணின் தம்பியாகிய வீடணின் இராமன் மிகுந்த அன்பு கொள்கிறான்.

(ii) தன்னிடம் அடைக்கலம் அடையும் வீடணனை உடன்பிறந்தவனாக ஏற்றுக் கொள்கின்றான்.

(iii)  தன்னை நம்பி வந்த வீடணனுக்கு இலங்கையைக் கொடுக்கின்றான்.

(iv) இலங்கையை வழங்குவதால் தன்னை நம்பும் யாவரும் நலம் பெறவேண்டும் என்று நினைக்கும் உரிமையைக் கொடுக்கின்றான் இராமன்

இவ்வாறாக, இராமபிரான் பணியாளனாய், சகோதரனாய், தந்தைக்கு உற்ற மகனாய், தாய்க்கு உற்ற மகனாய், நண்பனாய், உரிமையை வழங்கும் சகோதரனாய்ப் பிற உயிர்களுடன் பல உறவு நிலைகளைக் கொண்டு இராமன் பண்பின் படிமமாக விளங்குகிறார்.

45. அ)கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக 

Answer:

கவிதையின் நடையைக் கட்டமைப்பன:

பாட்டு அல்லது நடை அழகியியல் கூறுகளில் ஒலிக்கோலங்களும் சொற்களின் புலமும் தொடரியல் போக்குகளும் முக்கியமானவை.

விதை – நடையியல்:

மொழியின் தனிச்சிறப்பான கூறுகளும், அவற்றைக் கையாளுகின்ற வகைமைகளும் கவிதையின் உந்து சக்தியாக அமைகின்றன. மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. கவிதையின் இயங்காற்றல்தான் நடை. நடைபெற்றியலும் (கிளவியாக்கம் – 26) என்று தொல்காப்பியம் கூறுகிறது.

ஒலிக்கோலங்கள்:

தொன்மையான மொழிகள் யாவும் சமிக்ஞையிலிருந்தும், இசையிலிருந்தும்தான் தொடங்குகிறது. ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன. இதையே, அந்தப் பனுவலின் – பாடலின் ஒலிப்பின்னல் என்கிறோம்.

சான்று: “கடந்தடு தானை மூவிருங்கூடி உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே”

இப்பாடலில் க, த, ட, ற முதலிய வல்லின மெய்கள் பிற மெல்லின் இடையின மெய்களைக் காட்டிலும் அதிகமாக வருகிறது. இதன் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்து ஒலிக்கோலத்தின் வலிமையை அறியலாம்.

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை

கடாஅ யானைக் கலிமான் பேக (புறம் – 145)

இதில் பல உயிர் ஒலிகள் வருகையும் திரும்பவரல் தன்மையும் இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் இங்கே கவனத்திற்குரியன. ஒலிக்கோலம் சங்கப்பாடல்களின் ஒரு முக்கியப்பண்பு.

சொற்புலம் :

சொல்வளம் என்பது ஒருபொருள் குறித்த பல சொல், பல பொருள் குறித்த ஒரு சொல், பலதுறை, பலசூழல், பல புனைவுகளுக்கும் உரியதாய் வருதலும், உணர்வும், தெளிவும் கொண்டதாய் : 2 வருதலும், எனப் பலவாறு செழிப்பான தளத்தில் சொற்கள் விளைச்சல் கண்டிருப்பதைக் குறிக்கும். சான்றாக, முல்லைக்கலியில் காளைகளில் பல இனங்களைக் காட்டுகின்ற சொற்கள் உள்ளன. சொல்வளம் ஒரு பண்பாட்டின் அடையாளம். சொல்வளம் என்பது தனிச்சொற்களாய் நிறைந்து அமைவதையும் குறிக்கும்.

தொகைநிலை :

சங்க இலக்கிய மொழியின் அடையாளமாக உள்ள ஒரு பண்பு இது. இதனைத் தொகைநிலை என்று தொல்காப்பிய எச்சவியல் பேசுகிறது. தொகைமொழி என்பது செறிவாக்கப்பட்ட ஒரு : வடிவமைப்பு.

அது வாக்கிய அமைப்பில் ஒரு சொல் போலவே நடைபெறும்.

சான்று: வைகுறுவிடியல், கவினுறு வனப்பு, தீநீர் என்பன.

தொடரியல் போக்குகள் :

ஒலிக்கோலமும், சொற்புலமும் சொற்றொடர் நிலையும் பாடலின் தளத்தை ஏர் நடத்திப் பண்படுத்திப் போகின்றன என்றால், பாத்தி கட்டி வரப்புயர்த்தும் பணிகளைத் தொடரியல் வடிவம் செய்கின்றது. பரிமாறப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்பத் தொடர்கள் ஏறியும் இறங்கியும் திரும்பியும் சுழன்றும் இயங்குகின்றன.

கவிதை மறுதலைத்தொடர் :

தொடரமைப்பு என்பது எழுவாய் + செயப்படுபொருள், அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை என்று வருவது மரபு. இது சங்கப்பாடல்களில் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.

சான்று: பேரெயின் முறுவலாரின், நம்பி நெடுஞ்செழியனுடைய சாவுச்சடங்கு பாடல்

“இடுகவொன்றோ, சுடுகவொன்றோ

படுவழிப்படுக இப்புகழ் வெய்யோன் தலையே” (புறம் – 239)

இதன் இறுதி அடி பிறழ்வோடு அமைந்துள்ளது. ஏனைய 20 அடிகளில் தொடர் வரிசையாகவும் நேர்படவும் செல்கின்றன. ஒவ்வோர் அடியும் வினைமுற்றுகளோடும், தன்னிறைவோடும் முடிகின்றன. இப்படி 18 பண்புகளை வரிசைப்படுத்திய பிறகு, தொகுத்துச் சொல்வதுபோல, : – (ஆங்குச் செய்பவையெல்லாம் செய்தனன் ஆதலின்) கூறிவிட்டுப் போடா போ – புதைத்தால் புதை; சுட்டால் சுடு என்று அலுத்துக் கொள்கிறது.

முடிவுரை :

நடையியல் என்பது வடிவமைப்பின் பகுதிகளையும் முழுமையினையும் சார்ந்தே இருக்கிறது. அத்தகைய நடை அழகியலைக் கட்டமைப்பதற்குச் சங்க இலக்கியமே முதன்மை ஆதாரம். மேலும் : வ சங்க இலக்கியம் அதனுடைய தனித்துவ மிக்க சமூக – பண்பாட்டுத்தளத்தில் குறிப்பிட்ட சில பண்புகளையும் போக்குகளையும் சொந்த மரபுகளாகக் கொண்டுவிட்டது. எனவே, கவிதையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள் சங்க இலக்கியங்களில் பரவிக் காணப்படுகின்றன.

அல்லது)

ஆ)குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்து மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு?விளக்குக

Answer:

குடும்பம் என்ற அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே.

குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளது. நாணயத்தின் இருபக்கங்கள் போலகுடும்பமும்திருமணமும் உள்ளது. திருமணம், குடும்பம் தொல்காப்பியத்திலோ சங்க இலக்கியத்திலோ இடம் பெறவில்லை குடும்பம் என்ற சொல் திருக்குறளில் பயின்று வருகிறது.

கட்டமைப்பு:

(i) ‘குடும்பு’ எனும் சொல் கூடிவாழ்தல் என்று பொருள்படுகிறது. பண்டைத்தமிழர்கள் குடும்பம் 1 என்ற அமைப்புடன் வாழ்ந்த இடங்கள் பல. அவற்றுள் சில: புக்கில், தன்மனை.

(ii) புக்கில் என்பது தற்காலிகத் தங்குமிடம் ஆகும். தன்மனை என்பது திருமணம் ஆன கணவன், மனைவி பெற்றோரை விட்டு வாழும் இடம் ஆகும்.

(iii) மணந்தகம் என்பது மணம் புரிந்த கணவன் மனைவியும் சேர்ந்து வாழத் தொடங்கி முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலக்கட்டத்தைக் குறிப்பது ஆகும். . சங்க காலத்தில் பெரும்பான்மையான சமூகத்தில் தாயே தலைமை ஏற்றிருப்பாள். பெண் திருமணம் செய்த பின்னும் தன் வீட்டிலே வாழ்க்கை நடத்தும் முறை இருந்தது. பெண் குழந்தைகள் பேறு முதன்மைப்படுத்தப்பட்டது

தந்தை வழிக் குடும்பம்:

சங்க காலத்தில் தாய் வழிக் குடும்பம் போலவே தந்தை வழிக் குடும்பமும் வேரூன்றியது.

பெண் திருமணம் ஆன பிறகு கணவனின் தந்தை வீட்டில் வாழ வேண்டும் என்பதை ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர்’ என்கிறது குறுந்தொகை.

தனிக்குடும்பம்:

தனிக்குடும்பம் என்பது படிமலர்ச்சியில் இறுதியில் ஏற்பட்டது. இது இன்று தொழிற் சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. தனிக்குடும்பம்,

ஆதிக்குடிகளிடமும் இருந்தது என்று இனவரைவியல் ஆய்வுச் சுட்டுகிறது.

விரிந்த சமூகம்:

சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்று இவர்களோடு பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் விரிந்த குடும்பமாகக் காணமுடிகிறது.

கணவன், மனைவி, குழந்தைகள் சேர்ந்து பெற்றோர்கள் சேர்ந்து வாழும் நேர்வழி விரிந்த குடும்ப முறை காணமுடிகிறது.

இன்றைய மனித சமூக கட்டமைப்பில் தாய்வழிக் குடும்பம், தந்தைவழிக் குடும்பம் என்ற நிலையைக் கடந்து தனிக்குடும்பம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பிலிருந்தே மனித சமூகம் கட்டமைக்கப்படுகிறது. அவற்றின் தொடர்ச்சியாகவே இன்றைய கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்ற அலகைக் கொண்டதாக அமைகிறது. அதுவும் தந்தைவழிக் குடும்ப அமைப்பைக் கொண்டதாக இருக்கிறது. தொன்மைமிக்க இக்குடும்ப அமைப்பு முறை தமிழ்ச் சமூகத்தின் அடையாளமும் பெருமிதமும் ஆகும்.

குடும்பமே சமூகத்தைக் கட்டமைக்கும் களம் :

(i) குடும்பம் தனி மனிதருக்காகவும் சமுதாயத்திற்காகவும் பெரும் பங்காற்றுகிறது. மனித சமூகத்தின் அடிப்படைகளான அன்பு செலுத்துதல், பொருளாதாரப் பகிர்வு, பொழுதுபோக்கு, பாதுகாப்பு, சமயச்செயல்கள், கல்விபெறுதல் ஆகியவை குடும்பத்திலே கற்பிக்கப்படுகின்றன.

(ii) பண்பாட்டைக் குழந்தைப் பருவத்தில் குடும்பம் கற்றுக் கொடுக்கிறது. சமுதாயத்தின் நெறிமுறைகள் அன்றாட வாழ்வில் பின்பற்றப்பட வேண்டிய பழக்கவழக்கங்கள் பொருளாதாரச் செயல்களாகச் செய்யும் முறைகள், சமுதாய சமய வாழ்வில் ஆற்ற வேண்டிய கடமைகள் போன்ற எண்ணற்ற வகைகளில் குடும்பம் குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பதால் மனித சமூகம் சிறப்பாகக் கட்டமைக்கப்படும்.

(iii) பண்பாட்டு வயமாக்கல் நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் ஒரு மாதிரி குழுவாகச் செயல்படுகின்றனர்.

(iv) குடும்பம் என்பது தனது உறுப்பினர்கள் என்ற நிலையில் குடும்ப உறுப்பினர்களுக்குப் பயிற்சிகளை வழங்கி அமைதியும் ஒழுங்கும் கொண்ட ஒரு சிறந்த சமுதாயம் அமைய அடிப்படையாக விளங்குவதால், குடும்பம் என்னும் சிறிய அமைப்பில் இருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்புக் கட்டமைக்கப்படுகிறது.

. 46. அ)"உரிமைத் தாகம்" என்னும் சிறுகதையில் கருப்பொருளும் சுவையும் குன்றாமல் கதை எழுதுக

(அல்லது) 

ஆ)பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க

பகுதி:


47 அடிபிறழாமல் செய்யுள் வடிவில் தருக

அ)ஒங்கலிடை வந்து..." எனத்தொடங்கும் தண்டியலங்கார பாடலை எழுதுக.

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது

தன்னேர் இலாத தமிழ்.

ஆ)வையத்துள் எனத்தொடங்கும் குறளை எழுதுக

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 

தெய்வத்துள் வைக்கப் படும்

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post

POST ADS 2

எங்களது Kalvikavi & TNTET Arts YouTube telegram , Whatsapp இணைந்திடுங்கள் 
y
Please Wail material is Loading...