தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான குடியிருப்பு கட்டடம் – பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு..

 தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான குடியிருப்பு கட்டடம் – பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு..

தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குடியிருப்பு கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

குடியிருப்பு கட்டடம்:

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கு குடியிருப்பு கட்டடம் கட்டி தருவதற்கு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து பள்ளிகளுக்கு செல்வதற்கு வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதனால் பள்ளிக்கு அருகே ஆசிரியர்களுக்கு குடியிருப்பு கட்டடங்களை கட்டி தரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2021-2022 ஆம் ஆண்டுக்கான திட்டமிடலில் ஆசிரியர்களுக்கான குடியிருப்பு கட்டமைப்புக்கு பணிக்கு தேவையான முன்மொழிவுகளை அனுப்பி வைக்கும் படி மத்திய அரசு கூறியுள்ளது. எனவே ஆசிரியர்களுக்கு குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்காக பல மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டு, அதை முதன்மை கல்வி அலுவலகங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

ஆய்வு செய்த பிறகு தேவையான குறிப்பு உரைகளுடன் சில இணைப்புகளையும் சேர்த்து முன்மொழிகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி கட்டடம் கட்டுவதற்கான இடம் தேடுவதில் மலை, போக்குவரத்து இல்லாத பகுதிகள், கிராமப்புறங்கள், தொலை தூரப்பகுதிகள் போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் தேவையான விவரங்களை அனுப்ப வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post