10th Tamil One mark question with answer


 10th Tamil One mark question with answer - Reduced syllabus Guide

பலவுள் தெரிக .    

இயல் 1

1 . ' மெத்த வணிகலன் '  என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது

அ )  வணிகக் கப்பல்களும் ஐம்பெரும்  காப்பியங்களும்

2.  ' காய்ந்த இலையும்  காய்ந்த தோகையும்  '  நிலத்துக்கு நல்ல உரங்கள் . இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது .
ஈ )  சருகும் சண்டும்

3. எந்தமிழ்நா என்பதை பிரித்தால் எவ்வாறு வரும் .
இ ) எம் + தமிழ்  + நா

4. '  கேட்டவர் மகிழுப் பாடிய பாடல் இது ' -  இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற் பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே -
ஈ )  பாடல் கேட்டவர்

5.  வேர்க்கடலை ,  மிளகாய் விதை ,  மாங்கொட்டை  ஆகியவற்றைக்  குறிக்கும் பயிர் வகை
ஆ ) மணிவகை

இயல்  -2

6. '  உனக்கு பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்  ' -  பாரதியின்  இவ்வடிகளில்  இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை ?
ஆ )  மோனை ,  எதுகை

7. செய்தி : 1 -  ஒவ்வோர் ஆண்டும் ஜூன் - 15 ஐ உலகக் காற்று நாளாக கொண்டாடி வருகிறோம் .

செய்தி : 2 -  காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடம் என்பது எனக்கு பெருமையே .
செய்தி : 3 -  காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக்  கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள் .

ஈ ) செய்தி 1 , 3  ஆகியன சரி

8 .  " பாடுஇமிழ் பனிக் கடல் பருகி " என்னும்  முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது ?
அ)  கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

9. 'பெரிய மீசை '  சிரித்தார்- வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது ?
இ )  அன்மொழித்தொகை

10. பொருந்தும் விடை வரிசையை தேர்ந்தெடுக்க ,
ஆ) 3 , 1 , 4 , 2

பொருத்தமானவை :

அ )  கொண்டல் -  கிழக்கு
ஆ)  கோடை -  மேற்கு
இ)  வாடை -  வடக்கு
ஈ )  தென்றல் -  தெற்கு

இயல் - 3

11. பின்வருவனவற்றுள் முறையான தொடர் -
இ)  தமிழர் பண்பாட்டின்  வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு .

12. "  சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி "  என்னும் அடியில் பாக்கம் என்பது -
ஈ )   சிற்றூர்

13. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்த காரணமாக அமைவது _____
அ)  வேற்றுமை உருபு

14 .  காசிக்காண்டம் என்பது -
இ ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

15 . விருந்தினரைப்  பேணுவதற்குப்  பொருள் தேவைப்பட்டதால் ,  கருங்கோட்டுச்  சீரியாழைப்  பணயம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு  . இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை
ஆ )  இன்மையிலும் விருந்து

இயல் - 4

16.  உனதருளே  பார்ப்பன் அடியேனே -  யார் கூறியது ?
ஆ)  இறைவனிடம் குலசேகராழ்வார்

17. தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க .
தலைப்பு :  செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள் :  கண்காணிப்பு கருவி ,  அசைவு நிகழும்  பக்கம்  தன் பார்வையைத் தமிழ் படம் திருப்புகிறது . திறன்பேசியில்  உள்ள வரைபடம்  போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது .
அ)  தலைப்புக்கு பொருத்தமான  குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

18 .பரிபாடல் அடியில் '  விசும்பும் இசையும் '  என்னும் தொடர் எதனை குறிக்கிறது ?
ஈ)  வானத்தையும் பேரொலியையும்

19 . குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டு அம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார் . பூனையார் பால் சோற்றைக் கண்டதும்  வருகிறார் .ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள  வழுவமைதி முறையே....
இ )  பால் வழுவமைதி ,   திணை வழுவமைதி

20. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது ?
ஈ)  இலா

இயல் -5

21. ' மாபாரதம்  தமிழ்ப்படுத்தும்  மதுராபுரி சங்கம்  வைத்தும் '  என்னும் சின்னமனூர்ச் செப்பேடுக் குறிப்பு உணர்த்தும் செய்தி
அ ) சங்க காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது .

22.  அருந்துணை என்பதைப் பிரித்தால் __________
அ )  அருமை +  துணை

23. " இங்கு நகரப் பேருந்து நிற்குமா ?  என்று வழிப்போக்கர் கேட்பது  ______ வினா. "  அதோ ,   அங்கே நிற்கும் "  என்று  மற்றொருவர் கூறியது ____ விடை .
இ)   அறியா வினா,  சுட்டு விடை

24 ." அருளைப் பெருக்கி அறிவை திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை "
-  என்று இவ்வடிகளில்  குறிப்பிடப்படுவது எது ?
இ)  கல்வி

25 . இடைக்காடனாரின்  பாடலை  இகழ்ந்தவர்______ இடைக்காடனாரிடம்  அன்பு வைத்தவர் ______
ஈ)  மன்னன் , இறைவன்


இயல் - 6


26.  குளிர் காலத்தைப் பொழுதாக கொண்ட நிலங்கள் _______
இ)  குறிஞ்சி ,  மருதம் , நெய்தல்

27. ஒயிலாட்டத்தில்  இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர் . இத்தொடரின்  செயப்பாட்டு வினைத் தொடர் எது ?
இ )  ஒயிலாட்டம் ,  இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது .

28 . மலர்கள் தரையில் நழுவும் - எப்போது ?
ஆ)  தளரப் பிணைத்தால்

29 . கரகாட்டத்தைக்  கும்பாட்டம் என்றும்  குடக்கூத்து என்றும்  கூறுவர் . இத்தொடருக்கான வினா எது ?
ஈ )  கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை ?

30.  கோசல நாட்டில் கோடை இல்லாத காரணம் என்ன ?
ஈ)  அங்கு வறுமை இல்லாததால்

இயல் -7

31.  சரியான அகர வரிசையை தேர்ந்தெடுக்க .
இ)  உழவு ,  ஏர் ,  மண் ,  மாடு

32. ' மாலவன் குன்றம் போனாலென்ன ? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ' மாலவன் குன்றம் வேலவன் குன்றமும் முறையே ..
அ)  திருப்பதியும் திருத்தணியும்

33. " தன் நாட்டு மக்களுக்குத்  தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன் "  என்னும் மெய்க்கீர்த்தித்  தொடர் உணர்த்தும் பொருள் ...
ஈ)  நெறியோடு நின்று காவல் காப்பவர்

34. இரு நாட்டு அரசர்களும்   தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்______
இ)  வலிமையை நிலைநாட்டல்

35.  தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி.  கருதியது_____
ஈ)  சிலப்பதிகாரம்

இயல் -8

36. மேன்மை தரும் அறம் என்பது ____
அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது .

37.  " வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் " இவ்வடி குறிப்பிடுவது______
இ )  இடையறாத அறப்பணி செய்தல்

38.   உலகமே வறுமையுற்றாலும்  கொடுப்பவன் என்றும்  பொருள்களின் இருப்பைக் கூட  அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்ட படுவோர் ..
ஆ)  அதியன் ,  பெருஞ்சாத்தன்

39. காலக்கணிதம்  கவிதையில் இடம் பெற்ற  தொடர் _____
அ)  இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது .

40 . சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்துள்ள பாவினம் ______
அ)  அகவற்பா

இயல் - 9

41 ."  இவள் தலையில்  எழுதியதோ  கற்காலம் தான் எப்போதும் " __ இவ்வடிகளில் கற்காலம் என்பது
ஈ)  தலையில் கல் சுமப்பது

42 . சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக  ஜெயகாந்தன் கருதுவது
ஆ)  பெற்ற சுதந்திரத்தைப்  பேணிக் காத்தல்

43. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ____________  வேண்டினார்
அ)  கருணையன் எலிசபெத்துக்காக

44.  வாய்மையே மழை நீராகி __ இத்தொடரில் வெளிப்படும் அணி .
இ)  உருவகம்

45 . கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும்  இருந்து எழுதுகிறேன் _  இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது
ஆ )  சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post