மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 30-40% பாடத்திட்டத்தை குறைக்க நிபுணர் குழு பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள்

 மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 30-40% பாடத்திட்டத்தை குறைக்க நிபுணர் குழு பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.

கொரோனா பாதிப்பால் 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் டிவி வாயிலாகவும் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வாயிலாகவும் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, அக்டோபர் மாதத்தில் இருந்து சுழற்சி முறையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.



சுழற்சி முறையிலேயே வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்களால் முழு பாடத்தையும் குறுகிய காலத்தில் நடத்தி முடிக்க வாய்ப்பு குறைவு.
அதனால், பாடத்திட்டத்தில் 30-40% குறைக்க நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கற்றல், கற்பித்தல் உள்ளிட்ட பணிகளில் இருக்கும் பாதிப்பை கண்டறிய 16 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு, நிபுணர்களின் பரிந்துரை கோரப்பட்டது.



அந்த குழுவின் முதற்கட்ட பரிந்துரை கடந்த ஜூலை மாதம் அரசிடம் சமர்பிக்கப்பட்டதைத்தொடர்ந்து, தற்போது 2ஆம் கட்ட பரிந்துரையையும் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பேசிய கல்வித்துறை அதிகாரிகள், குறுகிய காலத்தில் மொத்த பாடத்திட்டத்தை முடிக்க முடியாது என்பதால், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை 30% பாடத்திட்டத்தை குறைக்கவும் பிற வகுப்புகளுக்கு 40% பாடத்திட்டத்தை குறைக்கவும், மாணவர்களின் அழுத்தத்தை குறைக்க திருப்புதல் தேர்வுகளை மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் நிபுணர் குழு பரிந்துரையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்னர்.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts