அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதாக எனக்கு எந்த செய்தியும் வரவில்லை- அமைச்சர் செங்கோட்டையன்

 நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மதுரையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் கொள்கை என்று கூறினார்.அக்டோபர் 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பட உள்ளதாகவும், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி வருகிறது. அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதாக எனக்கு எந்த செய்தியும் வரவில்லை என்று கூறினார்.

அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவதால் இந்த முறை 13.84 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post