தமிழத்தில் தற்போது பள்ளிகள் திறப்பு என்பது சாத்தியமில்லை- அமைச்சர் செங்கோட்டையன்

 தமிழத்தில் தற்போது பள்ளிகள் திறப்பு என்பது சாத்தியமில்லை- அமைச்சர் செங்கோட்டையன்

           உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் குறைந்த பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளதால், மாணவர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். சமீபத்தில், கொரோனா பாதிப்பு தன்மை பொறுத்து மாநில அரசாங்கம் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ஊரடங்கு உத்தரவு வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தொடரும் எனவும், அதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்தது. ஆகையால், தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.


மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வரும் 21ம் தேதி முதல் 5 நாட்கள் ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஐந்து நாட்களும் (21 முதல் 25 வரை )ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா என பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார் அமைச்சர் அவர்கள்.


இந்நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பு குறித்து பேட்டி அளித்தார். தமிழத்தில் தற்போது பள்ளிகள் திறப்பு என்பது சாத்தியமில்லை. கொரோனா தொற்று குறைந்த பிறகே பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது.

Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post
y
Please Wail material is Loading...