கல்லூரிகளில் நவம்பர் 1 முதல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார்.

 கல்லூரிகளில் நவம்பர் 1 முதல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார்.


 அக்டோபர் 31க்குள் மாணவர் சேர்க்கையை கல்லூரிகள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. 

2020 - 2021ம் ஆண்டிற்கான கல்லூரிகளுக்கான கால அட்டவணையை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். 

அக்டோபர் 31க்குள் மாணவர் சேர்க்கையை கல்லூரிகள் முடிக்கவும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்ற அறிவிப்பையும் அவர் தம் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 

கல்லூரிகள் நவம்பர் 1ம் தேதி தொடங்கிய பிறகு அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் தேவையான தேர்வுகள் அனைத்தையும் நடத்தி முடிக்க முடியும் என்ற கால அட்டவணையும் ரமேஷ் பொக்ரியால் வெளியட்டுள்ளார். 

முக்கியமாக செமஸ்டர் விடுமுறைகளுக்கான தேதிகளும் இந்த அட்டவணையில் யு.ஜி.சியின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய கல்வி அமைச்சகமானது வெளியிட்டிருக்கிறது.

,2021  ஏப்ரல் 5ம் தேதி முதல் ஆண்டுக்கான இரண்டாம் பருவ தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மார்ச் 27 முதல் ஏப்ரல் 4 வரை கல்லூரி முதல் பருவத் தேர்வு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஆகஸ்ட் வரையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அட்டவணையின்படி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களானது மாணவர் சேர்க்கை, பாடத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு தயாராக இருக்கும்படியும், மத்திய அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. நவம்பர் 1ம் தேதிலியிருந்து கல்லூரிகள் தொடங்கும் பட்சத்தில், யு.ஜி.சியின் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post
 Click Image - School Books Download