தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

 தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


கரோனா காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டது.

இத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

02.04.2020 முதல் 09.04.2020 வரை நடைபெற இருந்த தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, கோவிட்- 19 நோய் தொற்றுக் காரணமாக ரத்து செய்யப்பட்டது. தற்போது, இத்தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.

இத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணை பின்வருமாறு:


தேர்வு நடத்துவது தொடர்பான வழிமுறைகள் / நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post