10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தவறிய பள்ளி மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதி வெளியிடப்பட்டுள்ளது.


10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தவறிய பள்ளி மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன.. இதன் காரணமாக ஏராளமான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.. இதற்கிடையே 10, 11, 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் மற்றும் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத்தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறியிருந்தது..

இந்த நிலையில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தவறிய பள்ளி மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதி வெளியிடப்பட்டுள்ளது..

அதாவது, 

12ம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 21 முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும், 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 7- ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கி தொடர்ச்சியாக 26ஆம் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

10ஆம் வகுப்பு துணைத்தேர்வு கால அட்டவணை :


11ஆம் வகுப்பு துணைத்தேர்வு கால அட்டவணை :

12ஆம் வகுப்பு துணைத்தேர்வு கால அட்டவணை :


Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post
y
Please Wail material is Loading...