பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள்

பிளஸ்-1 

பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-


தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்தது. கொரோனா நோய் தொற்று காரணமாக கடைசி தேர்வு நடைபெறவில்லை. அந்த தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8.32 லட்சம் பேர் பிளஸ்-1 தேர்வுகளை எழுதியுள்ளனர்.


இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிளஸ்-1 மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.


மேலும் பிளஸ்-2 மறு தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிளஸ்-2 மறுவாய்ப்பு கடைசித்தேர்வை 519 மாணவ, மாணவிகள் எழுதியதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது .

Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post
y
Please Wail material is Loading...