பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு-ஆலோசனை

கொரோனா வைரஸ் காரணமாக 
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், 10-வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு , அரையாண்டு மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.

சமீபத்தில் கோபிச்செட்டிபாளையத்தில் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், அடுத்தமாத இறுதிக்குள் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் முடிவுகள் வெளியாகும் என கூறினார்.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது வெளியிடுவது என்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குனர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உள்ளனர்.

Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post