10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை - 9.6.2020 || SSLC exam cancelled

2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை - 9.6.2020



  • 2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு, பொதுத் தேர்வுகள் மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு நடத்தாமல் விடுபட்டு போன

(வேதியியல், கணக்கு பதிவியல்
புவியியல் (புதிய பாடத்திட்டம்),
வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் , தொழிற்கல்வி-கணக்கு பதிவியல் (பழைய பாடத்திட்டம்)]

  • ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வு நடத்தஏற்கனவே அரசு ஆணை பிறப்பித்து, 
  • அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு,
  • மாண்புமிகு உயர் நீதிமன்றம் இந்த தேர்வுகளை தற்போது கொரோனா தொற்று
  • அதிகமாக உள்ள நிலையில், தள்ளி வைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளது
  • .இது குறித்து அரசு விரிவாக ஆய்வு செய்தது. தற்போது உள்ள நிலையில் கொரோனா தொற்று சென்னையிலும், சில மாவட்டங்களிலும் தொடர்ந்து
  • அதிகரித்து வருகிறது. நோய் தொற்று வல்லுநர்கள், நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்துள்ளார். 
  • எனவே பெற்றோர்களின் கோரிக்கையையும், நோய் தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு, மாணவர்களை நோய் தொற்றிலிருந்து காக்க, வருகின்ற 15ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த 
  • 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளும், 11ஆம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
  • எனவே, இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படையில் 20% மதிப்பெண்கள் வழங்கப்படும்.


12 ஆம் வகுப்புத் தேர்வைப் பொறுத்தவரையில், ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படவிருந்த மறு தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது.


சூழ்நிலைக்கேற்ப 12ஆம் வகுப்பு மறுதேர்வுகளுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும்.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2