> 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ், ஆனால்...” - அமைச்சர் அன்பில் மகேஸ் விவரிப்பு ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ், ஆனால்...” - அமைச்சர் அன்பில் மகேஸ் விவரிப்பு

கற்றல், கற்பித்தல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 

மாணவர்கள் மனப்பாடமின்றி புரிதலோடு தேர்வு எழுத வேண்டும். அறிவியல் சார்ந்து சிந்திக்க வேண்டும் என மாநில கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. கற்றல், கற்பித்தல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.


அரசியல் ரீதியாகவோ, கண்மூடித் தனமாகவோ மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட எதையும் எதிர்க்கவில்லை. மாணவர்களின் தேவையை அறிந்துதான் செய்கிறோம். தமிழக அரசு செய்துள்ள நல்லவற்றை மத்திய அரசும் எடுத்துக்கொள்ள வேண்டும். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழகத்துக்கு நிதி தருவேன் என்று மத்திய அரசு கூறுவது சரியல்ல.


3, 5, 8-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாவிட்டால், இடை நிற்றல் விகிதத்தை அதிகரிக்கும். அதனால்தான் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்று உள்ளது. அதிலும், எதையும் படிக்காமல் அடுத்த வகுப்புக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஒவ்வொரு வகுப்புக்கும் சர்வே எடுக்கப்படுகிறது.” என்றார்.

Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel