அரசு பள்ளி மாணவர்களும் நுனிநாக்கில் ‘இங்கிலீஷ்’ பேசலாம்!அது எப்படி ??
தமிழக அரசு பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கில மொழித்திறனை கற்பிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுவாக, தனியார் பள்ளி மாணவர்களை ஒப்பிடும் போது, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் பேசும் ஆற்றல் சற்று குறைவாக இருப்பதாகவே கருதப்படுகிறது. எனவே, அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்க்கல்வி பயிலும் போதோ, புதிய வேலைவாய்ப்புகளை அணுகும்போதோ, தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக மொழி திறனை வளர்க்க பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத் திறன் வளர்ப்பு பயிற்சி அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆங்கிலத்தில் எழுதுதல், இரண்டு மூன்று எழுத்துக்களை கொண்ட வார்த்தைகளை படித்து, அதற்குரிய பொருள்களை தெரிந்து கொள்ளுதல், சரளமாக பேசுதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் மூலம் மாணவர்களுக்கு ஆங்கிலத் திறன் அறிவு வளர்ப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "அரசுப் பள்ளிகளில் பயிலும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின், ஆங்கில மொழியில் வாசித்தல், பேசுதல் மற்றும் எழுதுதல் ஆகிய அடிப்படைத் திறன்களை மேம்படுத்துவதற்கான 'லெவல் அப்' (LEVEL UP) என்ற தன்னார்வத் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினை முறையாக செயல்படுத்த, மாதந்தோறும் இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டு, மாணவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது. அந்த வகையில், ஜூன் மாதத்திற்கான மொழித்திறன் இலக்குகள் கொண்ட அட்டவணை வெளியிடப்பட்டு, பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது
மேலும், மாணவர்களுக்கு அளிக்கப்படும் இந்த ஆங்கில திறன் வளர்ப்பு பயிற்சி, சரியாக வழங்கப்படுகிறதா, அது மாணவர்களை எவ்வாறு சென்று சேருகிறது என்று உரிய கால இடைவெளிகளில் ஆய்வும் செய்யப்படுகிறது. இந்நிலையில், ஜூலை மாதத்தில் 4 வாரங்களுக்கான அடிப்படை ஆங்கில மொழி திறன்வளர் இலக்குகள் மற்றும் கற்றல் செயல்பாடுகள் பாடத்திட்டத்தினை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment