ஜூலை 7 திங்களன்று நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கப்படுமா? அரசின் முடிவு என்ன ??
வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட வாய்ப்புள்ளதால் அங்கு செல்லக் கூடியவர்கள் வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜூலை 7 ஆம் தேதி திங்களன்று நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் முகர்ரம் பண்டிகை ஜூலை 6 ஆம்தேதி ஞாயிறு அன்று கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகை 7 ஆம் தேதி திங்களன்று தள்ளிப் போவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
சந்திரன் பிறை தென்படுவதை கணக்கிட்டு முகரம் பண்டிகை ஞாயிறு அல்லது திங்களன்று கொண்டாடப்படலாம்.
இஸ்லாமிய ஆண்டில் முதல் மாதமாக முகரம் வருகிறது. அதனை இஸ்லாமிய வருடப் பிறப்பாக உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கடைபிடிக்கிறார்கள்.
இத்தகைய சூழலில் பிறை தென்படுவதை கணக்கிட்டு 7ஆம் தேதி திங்களன்று விடுமுறை வழங்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனால் அரசின் முடிவுக்காக பள்ளிகள், அரசு தனியார் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவை காத்திருக்கின்றன.
0 Comments:
Post a Comment