6,7,8,9,10,11,12th Exam Question Paper 2025 - 2026 | Important | Answer key | Syllabus

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் வரைக. 10th Tamil

உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் வரைக.

பூம்பாறை.

10.07.20

அனுப்புநர்

                     செ.தமிழரசன்,

                    50, அன்னை இல்லம்,

                      பூம்பாறை,

                    காந்தி தெரு,

                    திண்டுக்கல் மாவட்டம் 625 001.

பெறுநர்

               பொது நூலக இயக்குநர் ,

               தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,

                600 002.

ஐயா,

பொருள்: நூலக வசதி வேண்டுதல் - சார்பு. 

      வணக்கம். கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்கும் தங்கள் நூலகத்துறைக்கு எனது வாழ்த்துகள். எங்கள் கிராமத்தில் 1000 குடும்பங்களும் 2800 மக்களும் வசித்து வருகின்றனர். மேலும், எங்கள் கிராமத்தில் உயர்கல்வி முடித்து அரசு போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். நாங்கள் தேர்விற்குப் படிப்பதற்காக இருப்பிடத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நூலகத்திற்கு நாள்தோறும் சென்று வருகின்றோம்.

            எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்தால் எங்கள் கிராம மக்களுக்கும் எங்களைப்போன்று தேர்வுகளுக்குப் படிப்பவர்களுக்கும் மிகுந்த பயனைத்தரும். எனவே. எங்கள் கிராமத்தில் கிளை நூலகம் அமைத்திட ஆவன செய்யுமாறு தங்களைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

செ.தமிழரசன்.


உறைமேல் முகவரி,

பெறுநர்

               பொது நூலக இயக்குநர் ,

               தமிழ்நாடு பொது நூலக இயக்குநரகம்,

                600 002.

Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel