உங்கள் எதிர்காலக் கனவு குறித்து ஒரு கடிதம் எழுதுக ( 6th Tamil )

உங்கள் எதிர்காலக் கனவு குறித்து ஒரு கடிதம் எழுதுக..

மாணவர்களை தமிழில் 'உங்கள் எதிர்கால கனவு குறித்து ஒரு கடிதம் எழுதச் செய்தல்.

இடம் : மதுரை

: 05-06-2022

அன்புள்ள மாமா.

                        நான் இங்கு நலமாக இருக்கிறேன். நீங்கள் அங்கு நலமாக உள்ளீர்களா? உங்களின் அறிவுரைகளின் படியும் வழிகாட்டுதலின்படியும் நான் இன்று அறிவியல் துறையில் சிறந்து விளங்குகின்றேன்.

என் எதிர்காலக் கனவு நனவாவதற்கு என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வேன். என் உயர்வும் உழைப்பும் நாட்டை உயர்த்துவதாக இருக்கும். என் இலட்சியப் பாதை மிகவும் சிறப்பானதாக அமையும். பத்துப் பேரோடு பதினொன்றாவது நபராக நான் இருக்கமாட்டேன். என் கடமையை உயிரென மேற்கொண்டு சாதனை புரிவேன்.

என்னுடைய அறிவியல் ஆய்வு மற்ற வல்லரசு நாடுகளுடன் போட்டியிடுவதாக இருக்காது. நம் நாட்டில் அழிவின் விளிம்பில் இருக்கும் விவசாயத்திற்கு உதவும் வகையில் இருக்கும் நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள், அக்கிராமங்களின் முதுகெலும்பு இளைஞர்கள், அவர்களுள் ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்களைக் கூட்டி விழிப்புணர்வூட்டி வேளாண்துறை மேம்படச் செய்வேன்.

மழைநீரைச் சேமிக்கவும். புதிய விவசாய உத்திகளைப் பயன்படுத்தி குறைந்த நாட்களில் மகத்தான விளைச்சலை உருவாக்குவேன். வேளாண் பணிக்கான புதிய எந்திரங்களைக் கண்டறிவேன். அவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்படையாதபடிப் பார்த்துக் கொள்வேன்.

நம்நாடு வறுமை, பஞ்சம், பிணிபோக்கி செழுமை, வளமை, பொருளாதார முன்னேற்றம் தொழில்வளம் செழிக்க அறிவியலின் வழி நின்று பாடுபடுவேன். மேலும் வேறென்ன செய்யலாம் என்பதை நீங்கள் அவ்வப்போது கூறுங்கள்.

இப்படிக்கு தங்கள் அன்புள்ள. 

கு.செந்தில்


உறைமேல் முகவரி:

எண்.7,

காந்தி தெரு ,

மதுரை 625477.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2