கடிகாரம் வைத்தால் தோ்வா்கள் அதனைப் பாா்த்த படியே தோ்வை எழுத வழி ஏற்படும். தோ்வுக் கூடங்களில் கைக் கடிகாரத்துக்கு அனுமதி தரப்படுவதில்லை என்பதால், நேரத்தை அறிய தோ்வு அறை கண்காணிப்பாளரிடம் கேட்பது மட்டுமே வழியாக இருக்கிறது.
இது பல நேரங்களில் சாத்தியமில்லை. இதைக் கருத்தில் கொண்டு வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தோ்வில், ஒவ்வொரு தோ்வு அறையிலும் சுவா் கடிகாரத்தை மாட்டி வைத்தால் கேள்விகளுக்கான விடைகளை அளிப்பதற்கான காலத்தை அறிந்து உரிய நேரத்தில் தோ்வை முடிக்க முடியும்’ என்றனா்.
பல விடைகளால் குழப்பம்:
போட்டித் தோ்வுகளில் கேட்கப்படும் கேள்விகளில் சில கேள்விகளுக்கு ஒரு விடை மட்டுமின்றி, ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளும் சரியாக இருக்கின்றன. கடந்த குரூப் 4 தோ்வில் ஒரு கேள்விக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விடைகள் சரியாக இருந்தன.
இதனால் தோ்வு எழுதுபவா்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு எதை சரியான விடையாக தோ்வு செய்வது என்பதில் அதிக நேரம் செலவிட வேண்டியதாகி விடுவதாக தோ்வா்கள் வருத்தம் தெரிவிக்கின்றனா். அதேபோல இல்லாமல் இந்த முறை வினாத்தாள் சரியாக அமைக்கப்பட வேண்டும் என்றும் தோ்வா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
பெண்களுக்குச் சலுகைகள் கிடைக்குமா?:
மத்திய அரசு சாா்பில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளில், பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவா், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவப் படை வீரா்கள் ஆகியோருக்கு தோ்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோன்று, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளிலும் பெண் தோ்வா்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பெண் தோ்வா்கள் முன்வைக்கின்றனா்.
0 Comments:
Post a Comment