> தமிழகத்தில் 7, 8-ம் தேதிகளில் கனமழை..! ~ Kalvikavi

10,11,12th New Study Material 2025 - 2026

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழகத்தில் 7, 8-ம் தேதிகளில் கனமழை..!

தமிழகத்தில் 7, 8-ம் தேதிகளில் கனமழை..!


 தமிழகத்தில் 7, 8-ம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்னிந்திய பகுதிகளின் மேல்வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


7, 8-ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 7-ம் தேதி தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், 8-ம் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 9, 10 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும். இன்று முதல் 8-ம் தேதி வரை வட தமிழகஉள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 109 டிகிரி, இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 104 டிகிரி, கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெயில் இருக்கக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 87 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்

Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel