> பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்த பணி அட்டவணை..! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்த பணி அட்டவணை..!

 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்த பணி அட்டவணை..!



தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கவுள்ளது.

ஒட்டுமொத்தமாக பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 8-ம் தேதியுடன் முடிவு பெறவுள்ளன. இந்நிலையில் தேர்வுகள் முடிந்த பின்னர் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்கான கால அட்டவணையை தேர்வு துறை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: பிளஸ் 2 வகுப்புக்கு ஏப்ரல் 1 முதல் 13-ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு ஏப்ரல் 6 முதல் 25-ம் தேதி வரையும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடத்தப்பட உள்ளன. தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கு ஏப்ரல் 12 முதல் 22-ம் தேதி வரையும் திருத்துதல் நடைபெற உள்ளது.

இவை நிறைவு பெற்றதும் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்பின்னர் பிளஸ் 2 மே 6-ம் தேதியும், பிளஸ் 1 மே 14-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கு மே 10-ம் தேதியும் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel