கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மோசமான மதிப்பெண் எடுத்தால், பள்ளி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மோசமான மதிப்பெண் எடுத்தால், பள்ளி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!

பள்ளித் தேர்வுகளில் குறைவான மதிப்பெண் எடுத்த 10, 11, 12ஆம் வகுப்ப மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துமாறு அரசு பழங்குடியினர் பள்ளிகளுக்கு பழங்குடியினர் நலத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.


தமிழகத்தில் உள்ள 320 பழங்குடியின உறைவிடப் பள்ளிகள் மற்றும் 8 ஏகலவ்ய மாதிரி உறைவிடப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மோசமான மதிப்பெண் எடுத்தால், பள்ளி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனறும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.


பொதுத் தேர்வுகளில், அரசுப் பள்ளி மாணவர்களைக் காட்டிலும், அரசுப் பழங்குடியினப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதாக பழங்குடியினர் நலத் துறைக்கு தரவுகள் கிடைக்கப்பெற்றிருப்பதை அடுத்து இந்த அறிவுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்த பள்ளிகளில் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.


அந்த அறிவுறுத்தல் கடிதத்தில், கல்வியில் மோசமாக இருக்கும் மாணவர்கள் தனித்தனி குழுக்களாக மாற்றி அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி, பொதுத் தேர்வில் அவர்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். சிறப்பு வகுப்பு தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களும் மாணவர்கள் சிறப்பு வகுப்புகளில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

அதுபோல 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்து ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும். தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share:

1 Comments:

Popular Posts