குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியிடப்படும் - TNPSC அறிவிப்பு

குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியிடப்படும் - TNPSC அறிவிப்பு!


ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 2022-ம் ஆண்டிற்கான குரூப் 4 போட்டி தேர்வு 7,301 பணியிடங்களுக்கான அறிவிப்பு 30.03.2022-ம் நாள் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த போட்டி தேர்வு 24.07.2022 நடைபெற்றது.

சுமார் 18 லட்சம் பேர் இப்பணியிடங்களுக்குத் தேர்வு எழுதி இருந்தனர். அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட படி 2022-ம் ஆண்டும் அக்டோபர் மாதமே இத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். மகளிர் இட ஒதுக்கீட்டில் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பெயரில் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் டிசம்பர் மாதம் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும், ஜனவரியில் முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. இந்தநிலையில், டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள முடிவுகளுக்கான தகவலின்படி, 7,301 பணியிடங்களுக்கான குரூப் 4 போட்டி தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2023 -ம் ஆண்டு வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது

Previous Post Next Post