> 6th Social Lesson 8 - சமத்துவம் பெறுதல் - ( samathuvam Peruthal ) | Term 1 ~ Kalvikavi

6th Social Lesson 8 - சமத்துவம் பெறுதல் - ( samathuvam Peruthal ) | Term 1

6th Social Lesson 8 - சமத்துவம் பெறுதல் - ( samathuvam Peruthal ) | Term 1



பாடம்.8 சமத்துவம் பெறுதல் Book back Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. பின்வருவனவற்றுல் எது பாரபட்சத்திற்கான காரணம் அல்ல

a. சமூகமயமாக்கல்

b. பொருளாதார நன்மைகள்

c. அதிகாரத்துவ ஆளுமை

d. புவியியல்

விடை : புவியியல்

2. பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது

a. பாலின பாகுபாடு

b. சாதி பாகுபாடு

c. மத பாகுபாடு

d. சமத்துவமின்மை

விடை :  பாலின பாகுபாடு

3. பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தரிக்கப்படுவது

a. திரைப்படங்கள்

b. விளம்பரங்கள்

c. தொலைகாட்சி தொடர்கள்

d. இவை அனைத்தும்

விடை : இவை அனைத்தும்

4. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் எழுதிய புத்தகங்கள்

a. இந்தியா 2020

b. அக்கினிச்சிறகுகள்

c. எழுச்சி தீபங்கள்

d. இவை அனைத்தும்

விடை : இவை அனைத்தும்

5.ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு

a. 1997

b. 1996

c. 1995

d. 1994

விடை : 1997

6.  விஸ்வநாத் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு

a. 1995

b. 1986

c. 1987

d. 1998

விடை : 1998

7. இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு

a. செஸ்

b. மல்யுத்தம்

c. கேரம்

d. டென்னிஸ்

விடை : கேரம்

8. “அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ், எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படடியில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது?

a. 14(1)

b. 15(1)

c. 16(1)

d. 17(1)

விடை : 15(1)

9.  பி.ஆர். அம்பேத்கார் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு

a. 1990

b. 1989

c. 1986

d. 1987

விடை : 1990

10. 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்

a.  நாமக்கல்

b. சேலம்

c. கன்னியாகுமரி

d. சிவகங்கை

விடை : கன்னியாகுமரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ___________________ என்பது மற்றவர்களைப்பற்றி எதிமறையாக அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.

விடை : ஒத்தகருத்து

2. ___________________ ஆம் ஆண்டு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்தார்.

விடை : இராமேஸ்வரத்தில், 1931

3. இந்தியாவில் மிக உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதினை முதன் முதலில் பெற்றவர் ___________________

விடை : விஸ்வநாதன் ஆனந்த்

4. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் __________________ 

விடை : டாக்டர் B.R. அம்பேத்கர்

5. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைந்த பாலின விகிதம் உள்ள மாவட்டம் __________________ 

விடை : தர்மபுரி

III. பொருத்துக:

1. பாரபட்சம்           -தீண்டாமை ஒழிப்பு

2. ஒத்தக் கருத்து உருவாதல்  -   மற்றவர்களை காட்டிலும் சிலரை தாழ்வாக நடத்துவது

3. பாகுபாடு                    -  சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்

4. பிரிவு 14                 -   தவறான பார்வை அல்லது தவறான கருத்து

5. பிரிவு 17                         - பிறரை பற்றி எதிமறையாக மதிப்பிடுதல்

விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 5 – அ

IV. வினாக்களுக்கு விடையளி

1. பாரபட்சம் என்றால் என்ன?

• பாரபட்சம் என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.

• அவர்களைப் பற்றி அறிந்து காெள்ளாமலேயே தவறான முன்முடிவு எடுப்பதாகும்.

• மக்கள் தவறான நம்பிக்கைகளையும் கருத்துகளையும் காெண்டிருக்கும் பாேது பாரபட்சம் ஏற்படுகிறது.

2. ஒத்த கருத்து என்றால் என்ன?

• ஒத்த கருத்து என்பது தவறான கண்ணாேட்டம் அல்லது ஏதாே ஒன்றைப் பற்றிய தவறான கருத்தாகும்.

• பாலின அடிப்படையில் ஒத்த கருத்துகளை பற்றி திரைப்படங்கள் மற்றும் தாெலைக்காட்சி தாெடர்களில் சித்தரிக்கப்படுவதைக் காணலாம்.

3. பாகுபாடு என்றால் என்ன?

• சமத்துவமின்மை என்பது ஒருவர் மற்றாெருவரை பாகுபாட்டுடன் நடத்துவதாகும்.

• சாதி ஏற்றத்தாழ்வு, சமய சமத்துவமின்மை, இன வேறுபாடு அல்லது பாலின வேறுபாடு பாேன்ற ஏற்றத்தாழ்வுகள் பாகுபாட்டை ஏற்படுத்துகிறது.

4.  இந்திய அரசியலமைப்பின்படி எந்த பிரிவுகள் சமத்துவத்தை பற்றி கூறுகிறது?

• இந்திய அரசியலசமப்பின் 14வது சட்டப்பிரிவு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறது.

• மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 17ன் படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது.

V. விரிவான விடையளி

1. பாரபட்சத்திற்கான காரணங்களை கூறுக.

• சமூகமயமாக்கல்

• நிர்ணயிக்கப்பட்ட நடத்தை

• பொருளாதார பயன்கள்

• சர்வாதிகார ஆளுமை

• இன மையக் கொள்கை

• கட்டப்பாடான குழு அமைப்பு

• முரண்பாடுகள்

2. பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.

சாதி பாகுபாடு

• சாதி முறை சமத்துவமின்மைக்கு மற்றும் பாகுபாட்டிற்கான முக்கிய காரணமாகும்

• இதனை எதிர்த்து பேராடியவர்களில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் குிறப்பிடத்தக்கவர் ஆவார்

பாலின பாகுபாடு

• பாலின பாகுபாடு என்பது இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களிடையே ஏற்படும் உடல்நலம், கல்வி, பொருளாதாரம், அரசியல் சமத்துவமின்மையை குறிக்கிறது

3. இந்திய சமுதாயத்தில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டை நீக்குவதற்கான தீர்வுகளை விவரி.

• அனைவருக்கும் தரமான உடல் நலம் மற்றும் கல்வியினை கிடைக்கச் செய்தல்

• தவறான பாலின பாரபட்சத்தை தெரிந்து கொள்ளுதல்

• பாெது வாழ்வில் பெண்களின் திறன்களை வெளிப்படுத்துதல்

• எல்லா சமயங்களைப் பற்றி தெரிந்து காெள்ளும் மனப்பான்மை

• வகுப்பறையில் குழுக்களாக உணவு அருந்துதல் மூலம் சாதி, மத, பாலின பாரபட்சமின்றி மாணவர்களை ஒன்றிணைக்கச் செய்தல்

• சட்டங்களை முறையாக அமுல்படுத்துதல் பாேன்றவற்றால் சமுதாயம் மேம்பட வாய்ப்புகள் உருவாகும்.


Share:

0 Comments:

Post a Comment

Popular Posts