6th Social Lesson 6 - இந்திய அரசியலமைப்பு சட்டம் - ( Indiya Arasiyalamaippu sattam ) | Term 2

6th Social Lesson 6 - இந்திய அரசியலமைப்பு சட்டம் - ( Indiya Arasiyalamaippu sattam ) | Term 2


பாடம்.6 இந்திய அரசியலமைப்பு சட்டம் Book Back Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. அரசமைப்பு தினம் கொண்டாடப்படும் நாள் __________

a. ஜனவரி 26

b. ஆகஸ்டு 15

c. நவம்பர் 26

d. டிசம்பர் 9

விடை : நவம்பர் 26

2. அரசமைப்புச் சட்டத்தை ___________ஆம் ஆண்டு அரசியல் நிர்ணயசபை ஏற்றுக்கொண்டது.

a. 1946

b. 1950

c. 1947

d. 1949

விடை : 1949

3. அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை ______________ சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

a. 101

b. 100

c. 78

d. 79

விடை : 101

4. இஃது அடிப்படை உரிமை அன்று __________

a. சுதந்திர உரிமை

b. சமத்துவ உரிமை

c. ஒட்டுரிமை

d. கல்வி பெறும் உரிமை

விடை : ஒட்டுரிமை

5. இந்தியக் குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது _____________

a. 14

b. 18

c. 16

d. 21

விடை : 18

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக ______________ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விடை : முனைவர் ராஜேந்திர பிரசாத்

2. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர் ______________

விடை: அண்ணல் அம்பேத்கார்

3. நம் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யவும் பாதுகாக்கவும் செய்வது ______________

விடை: உச்ச நீதிமன்றம்

4. நம் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் ______________

விடை:  ஜனவரி 26, 1950

III. பொருத்துக

1. சுதந்திர தினம்     - நவம்பர் 26

2. குடியரசு தினம்       - ஏப்ரல் 1

3. இந்திய அரசமைப்பு தினம்  - ஆகஸ்டு 15

4. அனைவருக்கும் கல்வி    -  ஜனவரி 26

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி

1. ஜனவரி 26 குடியரசு தினமாக ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?

நமது அரசமைப்புச் சட்டம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. அதைத்தான் நாம் குடியரசு தினமாகக் காெண்டாடுகிறோம்.

2. அரசமைப்புச் சட்டம் என்றால் என்ன?

அரசமைப்புச் சட்டம் ஒரு நாட்டிற்குத் தேவையான சில அடிப்படை விதிகள், காெள்கைகள் உருவாக்கி ஆவணப்படுத்துதோடு, தனது குடிமக்களின் உரிமைகள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளை வரையறுக்கிறது. பிறகு அச்சட்டத்தின் துணையாேடு தான் அந்நாடு ஆளப்படும்.

3. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிறப்பம்சங்களைப் பட்டிலிடுக.

இந்திய அரசமைப்புச் சட்டம் தான் நமது நாட்டின் உயர்ந்த பட்ச சட்டமாக விளங்குகிறது. அது அடிப்படை அரசியல் காெள்கைகளை வரையறுப்பது, கட்டமைப்புகள், வழிமுறைகள், அதிகாரம் ஆகியவற்றை விளக்குவது, அரசு நிறுவனங்களின் கடமைகளைப் பட்டியலிடுவது, குடி மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளை நிர்ணயம் செய்வது, வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவது ஆகியவற்றின் வழியே ஓர் ஒட்டுமொத்தக் கட்டமைப்பை நமக்குத் தருகிறது.

4. அடிப்படை உரிமைகள் என்றால் என்ன?

ஒவ்வாெரு குடிமகனுக்கும் மிகத்தேவையான உரிமைகளே அடிப்படை உரிமைகள் என்று அழைக்கப்படுகின்றன.

• சம உரிமை

• சுதந்திரமாகச் செயல்படும் உரிமை

• சுரண்டலுக்கெதிரான உரிமை

• சுதந்திர சமய உரிமை

• கலாச்சார மற்றும் கல்வி பெறும் உரிமை

• சட்டத்தீர்வு பெறும் உரிமை

ஆகியவை இன்றியமையாத உரிமைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன

5. முகப்புரை என்றால் என்ன?

அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரை தான் முகப்புரை என்று அழைக்கப்படுகிறது. அது இந்தியாவை இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பின்மை, மக்களாட்சிக் குடியரசு என்று வரையறை செய்கிறது.

6. சுதந்திரம், சமத்துவம், சகாேதரத்துவம் என்ற சாெற்களின் மூலம் புரிந்து காெள்வது என்ன?

• சுதந்திரம் என்பது நமது நாட்டில் எங்கும் செல்லக்கூடிய உரிமை, விரும்பிய தொழிலைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஆகியவற்றைக் குறிக்கும்.

• சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை சமத்துவம் உணர்த்துகிறது.

• சகாேதரத்துவம் என்பது பிறராேடு பழகும் பாேது பாசத்துடனும் உண்மையான அன்புடனும் பழகும் தன்மையையும் குறிக்கிறது.

7. வரையறு. இறையாண்மை

• அரசமைப்புச் சட்டம் இந்திய மக்களுக்கு முழு அதிகாரத்தை வழங்கியுள்ளது.

• நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

• அவர்களிடம் நிறைவேற்றும் அதிகாரம் இருக்கிறது.

• இப்படியாக ஒரு நாட்டின் உச்சநிலை அதிகாரத்தையே இறையாண்மை என்கிறோம்.


Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post