6th Social Lesson 1 - வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் | Term 2

6th Social Lesson 1 - வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் | Term 2

பாடம்.1 வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் Book Back Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. ஆரியர்கள் முதலில் _________ பகுதியில் குடியமர்ந்தனர்.

a. பஞ்சாப்

b. கங்ககச் சமவெளியின் மத்தியப் பகுதி

c. காஷ்மீர்

d. வடகிழக்கு

விடை : பஞ்சாப்

2. ஆரியர்கள் __________ லிருந்து வந்தனர்

a. சீனா

b. வடக்கு ஆசியா

c. மத்திய ஆசியா

d. ஐராேப்பா

விடை : மத்திய ஆசியா

3. நம் நாட்டின் தேசியக் குறிக்காேள் “வாய்மையே வெல்லும்” _____________ லிருந்து எடுக்கப்பட்டது.

a. பிராமணா

b. ஆரண்யகா

c. வேதம்

d. உபநிடதம்

விடை : மத்திய ஆசியா

4. வேத காலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?

a. 1/3

b. 1/6

c. 1/8

d. 1/9

விடை : 1/6

II. கூற்றைக் காரணத்துடன் ஒப்பிடுக. சரியான விடையைத் தேர்ந்தெடு

1 கூற்று : வேத காலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கியச் சான்றுகள் ற்றும் பயன்பாட்டு பாெருள் சான்றுகள் கிடைத்துள்ளன

காரணம் : நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.

a. கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

b. கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

c. கூற்று சரி; காரணம் தவறு

d. கூற்று தவறு; காரணம் சரி

விடை : கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

1 கூற்று 1 : தீபகற்ப இந்தியாவிலிருந்து ராேம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் அதன்மீது அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வரி விதிக்கப்பட்டது என்றும் பெரிப்பிளஸ் குறிப்பிடுகிறார்.

கூற்று 2 : இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் மையம்பள்ளியில் கிடைத்துள்ளன.

a. கூற்று 1 தவறானது.

b. கூற்று 2 தவறானது.

c. இரண்டு கூற்றுகளும் சரியானவை

d. இரண்டு கூற்றுகளும் தவறானவை

விடை : கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

3. வேத கால சமூகம் தொடர்பான கிழே காெடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது?

a. ஒரு கைம்பெண் மறுமணம் செய்து காெள்ளலாம்.

b. குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது.

c. தந்தையின் சாெத்துக்களை மகன் மரபுரிமையாகப் பெற்றான்.

d. உடன்கட்டை ஏறுதல் தெரியாது.

விடை : குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது.

4. கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பாெறுத்தமட்டில் சரியானது?

a. கிராமா< குலா < விஷ் < ராஸ்டிரா < ஜனா

b. குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா

c. ராஸ்டிரா < ஜனா < கிராமா < குலா < விஷ்

d. ஜனா < கிராமா < குலா < ஜனா < ராஸ்டிரா

விடை : குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. வேதப்பண்பாடு ___________ இயல்பைக் காெண்டிருந்தது.

விடை : ரத்த உறவு

2. வேத காலத்தில் மக்களிடமிருந்து __________ என்ற வரி வசூலிக்கப்பட்டது.

விடை: பாலி

3. __________ முறையானது பண்டைய கால கல்வி கற்கும் முறையாகும்.

விடை: குருகுலக் கல்வி

4. ஆதிச்சநல்லூர் ___________ மாவட்டத்தில் அமைந்துள்ளது.

வினட: தூத்துக்குடி

IV. சரியா ? தவறா ?

1. பல இடங்களில் கிடைத்துள்ள ராேமானியத் தொல் பாெருட்கள் இந்திய-ராேமானிய வணிக உறவுகளுக்குச் சான்றுகளாய் உள்ளன.

விடை : தவறு

2. நடுகல் என்பது மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய ஒரு வீரனின் நினைவாக நடப்படுவதாகும்

விடை : சரி

3. படைத் தளபதி ‘கிராமணி’ என அழைக்கப்பட்டார்.

விடை : தவறு

4. கருப்பு மற்றும் சிகப்பு மட்பாண்டங்கள் பெருங்காலத்தின் சிறப்பியல்புகள் ஆகும். 

விடை : சரி

5. மையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன

விடை : சரி

V. பொருத்துக

1. கீழடி                    -  செப்புத்தகடுகள்,ஓவியங்கள்

2. பொருந்தல்                        -  கொழு முனைகள்

3. கொடு மணல்         -  சுழல் அச்சுக்கள்

4. ஆதிச்சநல்லூர்              - தங்க ஆபரணங்கள்

விடை : 1 – அ, 2 ஆ, 3 – இ, 4 – ஈ

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:

1. நான்கு வேதங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

• ரிக் வேதம்

• யஜூர் வேதம்

• சாம வேதம்

• அதர்வண வேதம்

2. வேதகால மக்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் யாவை?

• குதிரைகள், பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், காளைகள், நாய்கள் வீட்டு விலங்குகளாகப் பழக்கப்படுத்தப்பட்டன.

• பின் வேதகாலத்தில் ஆரியர்கள் பசு, வெள்ளாடு, செம்மறியாடு, குதிரை மட்டுமல்லாமல் யானைகளையும் பழக்கப்படுத்தினர்.

3. ‘பெருங்கற்காலம்’ பற்றி நீங்கள் அறிந்தது என்ன?

பெருங்கற்காலம் ஆங்கிலத்தில் Megalithic Age என்று அழைக்கப்படுகிறது. Megalith என்பது கிரேக்கச் சாெல்லாகும். ‘Mega’ என்றால் பெரிய, ‘lith’ என்றால் ‘கல்’ என்று பாெருள். இறந்தவர்களைப் புதைத்த இடங்களைக் கற்பலகைகளைக் காெண்டு மூடியதால் இக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்படுகிறது.

4. ‘கற்திட்டைகள்’ என்பது என்ன?

இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறமும் இரண்டு கற்பலகைகள் செங்குத்தாக நடப்பட்டு அவற்றின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படும். இவை ‘கற்திட்டைகள்’ எனப்படுகின்றன.

5. முதுமக்கள் தாழிகள் என்றால் என்ன?

முதுமக்கள் தாழிகள் என்பன இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெரிய மண்பானைகள் ஆகும்.

6. வேதகாலத்தில் வணிகப் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களின் பெயர்கனளக் கூறுக. 

வேத காலத்தில் நிஷ்கா, சத்மனா என்னும் தங்க நாணயங்களையும், கிருஷ்ணாலா என்னும் வெள்ளி நாணயங்களையும் வணிகத்தில் பயன்படுத்தினர்.

7. தமிழ்நாட்டில் காணப்படும் பெருங்கற்கால நினனவுச் சின்னங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

• முதுமக்கள் தாழிகள்

• கற்திட்டைகள்

• நினைவுக் கற்கள்

• நடுக்கற்கள்Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post

POST ADS 2

எங்களது Kalvikavi & TNTET Arts YouTube telegram , Whatsapp இணைந்திடுங்கள் 
y
Please Wail material is Loading...