Half yeraly Question Paper 2023, Important
12th Half Yearly Question Paper 2023
11th Half Yearly Question Paper 2023
10th Half Yearly Question Paper 2023
9th Half Yearly Question Paper 2023
8th Half Yearly Question Paper 2023
7th Half Yearly Question Paper 2023
6th Half Yearly Question Paper 2023
 • 10th All subjects - Second Mid-Term Test Question paper 2023
 • 12th All subjects - 2nd Mid-Term Question paper 2023
 • 11th All subjects 2nd Mid-Term Test Question paper 2023
 • 9th 2nd Mid-Term Test Question paper 2023
 • 8th All subjects Second Mid-Term Question paper 2023
 • 💯 6th - 12th 2nd Mid Term Test Time table 2023 - Syllabus
 • 6th 2nd Mid-Term Test Question paper 2023
 • பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 18.08.2022

  பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 18.08.2022

  திருக்குறள் :

  பால்:பொருட்பால்

  இயல்:குடியியல்

  அதிகாரம்: உழவு

  குறள் : 1032

  உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

  எழுவாரை எல்லாம் பொறுத்து.

  பொருள்

  பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்

  பழமொழி :

  Spend as you get.

  வரவுக்கேற்ற செலவு செய்

  இரண்டொழுக்க பண்புகள் :

  1. நமது பேச்சும் நடத்தையும் நமது வாழ்க்கை வயலில் நாம் விதைக்கும் விதைகள். 

  2. நல்ல விதைகள் நல்ல பலனைத் தரும். எனவே நல்ல விதைகளையே விதைப்பேன்

  பொன்மொழி :

  நேரம் போய்க் கொண்டே தான்

  இருக்கும்.. எனவே நீ

  செய்ய வேண்டியதை செய்..

  அதுவும் இப்போதே செய்..

  காத்திருக்காதே..!

  பொது அறிவு :

  1.நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

   1986. 

   2. போர்க்களத்திலேயே மன்னராக முடி சூட்டப்பட்டவர் யார்?

   ஏழாம் ஹென்றி.

  English words & meanings :

  Un-li-ke-ly - not likely to happen. Adjective, நிகழ வாய்ப்பில்லாத, நடக்க வாய்ப்பில்லாத, பெயரளபடை 

  ஆரோக்ய வாழ்வு :


  முட்டை தைராய்டு சுரப்பிக்கும் மிகவும் தேவையான ஒன்று. ஒரு முட்டையில் 16% அயோடினும், 20% செல்லினியமும் உள்ளது

  NMMS Q 44: 

  ஒரு நாளில் எத்தனை முறை மணி முள் நிமிட முள் இரண்டும் ஒரே நேர் கோட்டில் அமையும்?


  1)43  2)44  3)24  4)22

  ஆகஸ்ட்  18 இன்று

  நேதாஜி அவர்களின் நினைவுநாள்

  நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897[4] – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945)[1] இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.[5]

  1941 இல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கி, ஆசாத்ஹிந்த் என்ற வானொலிச் சேவையையும் உருவாக்கி, விடுதலைத் தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.



  செருமனி, இத்தாலியின் உதவி கிடைக்காது எனத் தெரிந்தபின், சப்பான் செல்ல முடிவு செய்து, போர்க்காலத்தில், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் சப்பான் சென்று, இராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரித்தானிய அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ். விடுதலைக்காகப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும், காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தில் விரும்பி சென்றமையால், இராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், முத்துராமலிங்க தேவரால் சுமார் 600 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.


  நீதிக்கதை


  முல்லா ஏன் அழுதார்


  ஒரு நாள் முல்லா தனியே அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அதைப் பார்த்த அவருடைய நண்பர் முல்லாவிடம் ஏன் அழுகிறாய்? என்று கேட்டார்.


  அதற்கு முல்லா சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து லட்சம் ரூபாய் சொத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பாவும் இருபது லட்சம் ரூபாய் சொத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். எனது அத்தை சென்ற வாரம் எனக்கு 30 லட்சம் ரூபாய் சொத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு அவரும் இறந்துவிட்டார். எனது தாத்தா மூன்று நாட்களுக்கு முன் 50 லட்சம் ரூபாயை இறக்கும் முன் எனக்கு எழுதி வைத்துவிட்டார் என்று கூறிவிட்டு, மேலும் முல்லா அழுகையை நிறுத்தாமல் அழுதுக்கொண்டே இருந்தார்.



  அதற்கு நண்பர் உனக்கு கிடைத்த இவ்வளவு ரூபாய்களை வைத்து சந்தோஷப்படாமல் ஏனப்பா அழுகிறாய்? என்று கேட்டார். அதற்கு முல்லா, நண்பரிடம் இனிமேல் சொத்தை எழுதி வைத்துவிட்டு இறந்து போவதற்கு எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் யாரும் இல்லை என்பதை நினைத்து அழுதுகிட்டு இருக்கேன் என்றார். முல்லா சொன்னதை கேட்ட நண்பர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.


  நீதி :

  பிறர் நமக்கு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும்.


  இன்றைய செய்திகள்

  18.08.22


  * வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி இன்று தொடங்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.


  * பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. விழுப்புரம் அரசுப் பள்ளி மாணவி பிருந்தா உட்பட 133 பேர் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


  * பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லியில் சந்தித்தார். அப்போது, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, காவிரி பிரச்சினை, மேகதாது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த கோரிக்கை மனுவை அவரிடம் அளித்துள்ளார்.


  * மத்திய அரசின் மின்னணு சந்தையில் ஆன்லைன் மூலம் ரூ.60 கோடிக்கு 2.36 கோடி தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.


  * இலங்கை துறைமுகத்தில் சீன கப்பல்: 750 கி.மீ. தொலைவு வரை உளவு பார்க்க முடியும் - 6 கடற்படைத் தளங்களை துல்லியமாக கண்காணிக்க முடியும்.


  * உலகில் அழிந்த விலங்கினங்களில் ஒன்றான டாஸ்மேனியன் புலியை ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அந்த இனத்தை மீண்டும் கொண்டுவர விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான முயற்சியில் ஆஸ்திரேலியா, அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.


  * அமெரிக்கா - ரஷ்யா இடையே அணு ஆயுத போர் நடந்தால் 500 கோடி மக்கள் உயிரிழப்பர்: ஆய்வில் தகவல்.


  * 2023 முதல் 2027 வரையிலான ஐந்தாண்டு காலங்களில் இந்தியா மொத்தம் 141 சர்வதேசப் போட்டிகளில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது.


  * ஆசிய ஜூனியர் கைப்பந்து: இந்திய அணிக்கு முதல் வெற்றி.


  * ஈரோட்டில் மாநில அளவிலான கபடி போட்டி: கோவை மாவட்ட அணி முதல் இடம்.


  Today's Headlines


  * On behalf of the Department of Employment and Training, free coaching for TNPSC Group-1 examination is going to start today.  Those interested can participate.


   * Engineering Consultancy Rank List Released.  133 students, including Brinda, a student of Villupuram Government School, have secured a record of 200 out of 200 cut-off marks.


   * Chief Minister M. K. Stalin met Prime Minister Modi in Delhi yesterday.  At that time, he submitted a petition to him regarding NEET examination, new education policy, Cauvery issue, Meghadatu and other issues.


   * 2.36 crore national flags have been sold online at a cost of Rs 60 crore in the central government's electronic market.


   * Chinese ship in Sri Lanka port: 750 km.  Long-range reconnaissance – 6 naval bases can be accurately tracked.


  * Scientists plan to bring back the Tasmanian tiger, one of the world's most extinct animals, using gene editing technology.  Scientists from Australia and America have embarked on this effort.

  * 500 crore people will be killed in a nuclear war between USA and Russia: Information in the study.

  * India is scheduled to play a total of 141 international matches over the five-year period from 2023 to 2027.


   *Asian Junior Volleyball: First win for Indian team.


   * State Level Kabaddi Tournament in Erode: Coimbatore District Team First Place.

   

   Prepared by

  Covai women ICT_போதிமரம்

  Post a Comment

  கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

  வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

  குறிப்பு:

  1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

  2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

  3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
  4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
  -அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

  Previous Post Next Post

  POST ADS1

   

  POST ADS 2

  Half yeraly Question Paper 2023, Important
  12th Half Yearly Question Paper 2023
  11th Half Yearly Question Paper 2023
  10th Half Yearly Question Paper 2023
  9th Half Yearly Question Paper 2023
  8th Half Yearly Question Paper 2023
  7th Half Yearly Question Paper 2023
  6th Half Yearly Question Paper 2023