6th Social Lesson 4 - தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - ( Tamil Nattin Pandaiya Nagarangal ) | Term 1

6th Social Lesson 4 - தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - ( Tamil Nattin Pandaiya Nagarangal ) | Term 1

பாடம்.4 தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. 6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்?

a. ஈராக்

b. சிந்துவளி

c. தமிழகம்

d. தொண்டமண்டலம்

விடை : ஈராக்

2. இவற்றுள் எது தமிழக நகரம்?

a. ஈராக்

b. ஹரப்பா

c. மொகஞ்சதாரோ

d. காஞ்சிபுரம்

விடை : காஞ்சிபுரம்

3. வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்

a. பூம்புகார்

b. மதுரை

c. கொற்கை

d. காஞ்சிபுரம்

விடை : மதுரை

4. தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது

a. கல்லணை

b. காஞ்சிபுர ஏரிகள்

c. பராக்கிரம பாண்டியன் ஏரி

d. காவிரி ஏரி

விடை : கல்லணை

5. பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?

a. மதுரை

b. காஞ்சிபுரம்

c. பூம்புகார்

d. சென்னை

விடை : சென்னை

6. கீழடி அகழாய்வுகளுடன் எது தொடர்புடைய நகரம்

a. மதுரை

b. காஞ்சிபுரம்

c. பூம்புகார்

d. சென்னை

விடை : மதுரை

II. கூற்றையும் காரணத்தையும் பொருத்துக.

1 கூற்று : பூம்புகார் நகரத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியும், இறக்குமதியும் பெற்றது.

காரணம் : வங்காளவிரிகுடா கடல் போக்குவரத்திற்கு ஏதுவாக அமைந்ததால் அண்டைய நாடுகளுடன் வணிகம் சிறப்புற்றிருந்தது.

a. கூற்று சரி; காரணம் தவறு.

b. கூற்று சரி; கூற்றுக்கான காரணமும் சரி.

c. கூற்று தவறு; காரணம் சரி.

d. கூற்று தவறு; காரணம் தவறு

விடை : கூற்று சரி; கூற்றுக்கான காரணமும் சரி.

2. அ. திருநாவுக்கரசர், “கல்வியில் கரையில” எனக்குறிப்பிட்ட நகரம் காஞ்சிபுரம்.

ஆ. இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்று என யுவான்சுவாங் குறிப்பிட்டது காஞ்சிபுரம்.

இ. நகரங்களுள் சிறந்தது காஞ்சிபுரம் என காளிதாசர் குறிப்பிட்டுள்ளார்.

a. அ மட்டும் சரி

b. ஆ மட்டும் சரி

c. இ மட்டும் சரி

d. அனைத்தும் சரி

விடை : அனைத்தும் சரி

3 . சரியான தொடரைக் கண்டறிக.

a. நாளங்காடி என்பது இரவு நேர கடை.

b. அல்லங்காடி என்பது பகல் நேர கடை.

c. ரோமானிய நாட்டு நாணயம் தயாரித்த தொழிற்சாலை கிடைத்தது பூம்புகார்.

d. கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது.

விடை : கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது.

4 . தவறான தொடரைக் கண்டறிக.

a. மெகஸ்தனிஸ் தன்னுடடிய பயணக் குறிப்புகளில் மதுரையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

b. யுவான் சுவாங் தமிழ்நாட்டு நகரான காஞ்சிபுரத்திற்கு வந்தார்.

c. கோவலனும், கண்ணகியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்.

d. ஈராக் நகரம் பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடை : கோவலனும், கண்ணகியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்.

5. சரியான இணையைக் கண்டறிக.

a. கூடல் நகர் – பூம்புகார்

b. தூங்கா நகரம் – ஹரப்பா

c. கல்வி நகரம் – மதுரை

d. கோயில் நகரம் – காஞ்சிபுரம்

விடை : கோயில் நகரம் – காஞ்சிபுரம்

6. பொருந்தாததை வட்டமிடுக.

a. வட மலை – தங்கம்

b. மேற்கு மலை – சந்தனம்

c. தென் கடல் – முத்து

d. கீழ்கடல் – அகில்

விடை : கீழ்கடல் – அகில்

7. தவறான இணையைத் தேர்ந்தெடு

a. ASI – ஜான் மார்ஷல்

b. கோட்டை – தானியக் களஞ்சியம்

c. லோத்தல் – கப்பல் கட்டும் தளம்

d. ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு

விடை : ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டியவர் ___________________

விடை : இராஜசிம்மன் என்ற பல்லவ மன்னன்

2.  கோயில் நகரம் என அழைக்கப்படுவது ___________________ 

விடை : காஞ்சிபுரம்

3. மாசாத்துவன் எனும் பெயர் தரும் பொருள் ___________________

விடை : பெரு வணிகர்

IV. சரியா ? தவறா ?

1. பூம்புகாரில் நடைபெற்ற அண்டைநாட்டு வணிகத்தின் மூலமாக பண்பாட்டு பரிமாற்றம் நடைபெற்றது

விடை : சரி

2. மதுரையில் அல்லங்காடியில் பெண்கள் பயமின்றி இரவு நேரங்களில் பொருட்கள் வாங்கிச் சென்றனர்.

விடை : சரி

3. பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டன

விடை : சரி

4. போதிதர்மர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்.

விடை : சரி

V. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:

1. ஏற்றுமதி என்றால் என்ன?

வெளிநாடுகளுடன் செய்யப்படும் வர்த்தகமே ஏற்றுமதியாகும்.

2. இப்பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காப்பியம் மற்றும் சங்கப் பாடல் நூலைக் கூறு?

• சிலப்பதிகாரம்

• பட்டினப்பாலை

3. தொண்டை நாட்டின் தொன்மையான நகரம் எது?

  • காஞ்சி

4. கிராமத்திற்கும், நகரத்திற்கும் உள்ள ஏதேனும் ஒருவேறுபாட்டைக் கூறு. 

கிராமம்

• எண்ணிக்கை குறைந்த வீடுகள் மற்றும் அளவான மக்கட்தொகை.

நகரம்

• பெரிய வீதியான வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளோடு நெருக்கமான மக்கட்தொகை

5. லோத்கல் நகரத்துடன் தொடர்புடைய நாகரிகம் எது?

  • சிந்து சமவெளி நாகரிகம்.

6 . உலகின் தொன்மையான நாகரிகம் எது?

  • மெசபடோமியா நாகரிகம். (சுமேரியா)

VI. பின்வரும் வினாக்களுக்கு விடையளி

1. இந்தியாவின் பண்டைய நகரங்களைக் குறிப்பிடுக

பழங்கால இந்தியாவில் நன்கு திட்டமிட்ட பல இருந்தன. மொகஞ்சதோராவும் ஹரப்பாவும் குறிப்பிடத்தக்கவை.

2. தமிழகத்தின் பண்டைய நகரங்களைக் குறிப்பிடுக.

• பூம்புகார்

• மதுரை

• காஞ்சி.

3. தமிழக நகரங்கள் பற்றி அறிய உதவும் சான்றுகள் யாவை?

சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினபாலை, காளிதாசர் மற்றும் யுவான் சுவாங்கின் எழுத்தோவியங்கள். அர்த்தசாஸ்திரம் மற்றும் மெகஸ்தனிசின் குறிப்புகளும் பல பழம் பெரும் நகரங்களின் சிறப்புகளை எடுத்தியம்புகின்றன.

4. மதுரையை ஆண்ட தமிழ் மன்னர்கள் பற்றி குறிப்பிடுக.

• பாண்டியர்கள்

• சோழர்கள்

• களப்பர்கள்

• நாயக்கர்கள்

5. மதுரைக்கு வழங்கப்படும் வேறு சில பெயர்களைக் குறிப்பிடுக

• நான் மாடக் கூடல்

• கூடல் மாநகர்

6. நாளங்காடி, அல்லங்காடி – வேறுபடுத்துக.

நாளங்காடி

• பகல் அங்காடி

அல்லங்காடி

• இரவு அங்காடி

7. காஞ்சியில் பிறந்த சான்றாேர்கள் யார்? யார்?. 

• தர்மபாலர்

• ஜோதிபாலர்

• சுமதி

• போதி தர்மர்

8. ஏரிகள் மாவட்டம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏரிகள் காணப்படுவதால் இது ஏரிகளின் மாவட்டம் என்ற சிறப்பு பெற்றுள்ளது.

VII. கட்டக வினாக்கள்

எந்த நதிக்கரையில் பூம்புகார் அமைந்திருந்தது?

விடை : காவிரி

 பண்டைய நாட்டை பற்றி குறிப்புகள் கூறிய கிரேக்க வரலாற்றாசியரியர் யார்?

விடை : செங்கற்கள், பானைகள், சக்கரம்

திருநாவுக்கரசர் காஞ்சியை ____________ என்று புகழந்துள்ளார்

விடை : கல்வியல் கரையில்லாத காஞ்சி 

ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்படுவது ஏது?

விடை : காஞ்சிபுரம்

தமிழ்ச்சங்கம் அமைந்திருந்த தொன்மையான நகரம் எது?

விடை : மதுரை 

தமிழ்நாட்டின் தெற்க மாவட்டங்கள் சங்க காலத்தில் எந்த ஆட்சியின் கீழ் இருந்தன?

விடை : பாண்டியர்கள்

சங்க காலத்தில் இருந்த இரவு நேர கடைகளின் பெயர்?

விடை : அல்லங்காடி 

வணிகம் என்றால் என்ன?

விடை : பொருட்களை வாங்குவது விற்பது

சங்க இலக்கியங்களில் ஏதேனும் ஒன்று?

விடை : பட்டினப்பாலை 

நாளந்தா பல்கலைக்கழகத்தில் தங்கி படிதத சீனப்பயணி யார்?

விடை : யுவான்சுவாங்

பல்லவ மன்னன் இராஜசிம்மனால் காஞ்சியில் கட்டப்பட்ட கோயிலின் பெயர் என்ன?

விடை : கைலாசநாதர் கோயில் 

வங்காவிரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள ஒரு துறைமுகத்தின் பெயரை கூறு

விடை : கொற்கை

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post

POST ADS1

 

POST ADS 2

Half yeraly Question Paper 2023, Important
12th Half Yearly Question Paper 2023
11th Half Yearly Question Paper 2023
10th Half Yearly Question Paper 2023
9th Half Yearly Question Paper 2023
8th Half Yearly Question Paper 2023
7th Half Yearly Question Paper 2023
6th Half Yearly Question Paper 2023