12th Tamil Revision test Answer key (09-02-2022)

12th Tamil Revision test Answer key (09-02-2022)

12th Tamil first Revision Exam original Question papers and answer key PDF Download feb-9-2022.
 • 12th Tamil First Revision Answer Key - Deenadhayalan - sivagangai District - PDF Download here

குறிப்பு : 

 • அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 
 • கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் சேர்த்து எழுதுக.

1."மீண்டுமந்தப் பழமை நலம் புதுக்குதற்கு

மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி. வா வா!" என்று கூறியவர் 

அ) பரலி சு.நெல்லையப்பர்

ஆ) தி.சு.நடராசன்

இ) சிற்பி பாலசுப்பிரமணியம்

ஈ) ராஜ நாராயணன்

2.பொருத்துக

1) உரிமைத்தாகம் - i) பாரசீகக் கவிஞர்

2) அஞ்ஞாடி.  - ii) பூமணி

3) ஜலாலூதீன் ரூமி - iii) பக்தவச்சல பாரதி

4) தமிழர் குடும்ப முறை - iv) சாகித்திய அகாதெம

அ) 1) (ii), 2) (iv),3) (iii), 4) (i)

ஆ) 1) (iii), 2) (iv) ,3) (i) ,4) (ii)

இ) 1) (ii),2) (iv), 3) (i) ,4) (iii)

ஈ)l) (ii),2) (iii) ,3) (iv) ,4) (1)

3."மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே" என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல்

அ) குறுந்தொகை 

ஆ) நற்றிணை

இ) அகநானூறு

ஈ) ஐங்குறுநூறு

4."வெங்கதிர்" என்னும் சொல்லின் இலக்கணம் 

அ) வினைத்தொகை

ஆ) உருவகம்

இ) பண்புத்தொகை

ஈ) இடைக்குறை

5.அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்

அ) தொல்காப்பியம் 

இ) வீரசோழியம்

ஆ) தண்டியலங்காரம் 

ஈ) முத்துவீரியம்

6.திருக்குறள் அறத்துப்பாலில் அமைந்துள்ள இயல்களின் எண்ணிக்கை

அ) 3

ஆ) 2

இ) 4

ஈ) 1

7."நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து

உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்" என்னும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள கவிதை நூல் 

அ) மழைக்குப் பிறகு மழை

ஆ) நானென்பது வேறொருவன்

இ) பிறகொரு நாள்கோடை

(ஈ) நீர்வெளி.

8 . 'Fictino' என்பதன் தமிழாக்கச் சொல்:(Fiction) 

அ) நூல் நிரல்

ஆ) காப்பகம்

இ) வாழ்க்கை வரலாறு

ஈ) புனைவு

9.கம்பர் தான் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் 

அ) கம்பராமாயணம் 

இ) கிருஷ்ணாவதாரம்

ஆ) இராமாவதாரம்

ஈ) வால்மீகி இராமாயணம்

10. "ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி" என்னும் பாடலில் பயின்று வந்துள்ள பா வகை:

ஆ) ஆசிரியப்பா 

ஆ) வெண்பா

இ) வஞ்சிப்பா

ஈ) நேரிசை வெண்பா

11. "வெங்கதிர்" என்னும் சொல்லின் பொருள்

அ) ஒளிர்கின்ற கதிரவன் 

ஆ) நிகரில்லாத தமிழ் 

இ) பொதிகை மலை 

ஈ) புற இருள்

12.பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல் கால வகையி னானே! 

என்னும் தொடர் இடம் பெற்றுள்ள நூல்

அ) தண்டியலங்காரம்

ஆ) திருக்குறள்

இ) தொல்காப்பியம்

ஈ) நன்னூல்

13.தமிழில் திணைப்பாகுபாடு எதன் அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது?

அ) பொருட்குறிப்பு 

ஆ) சொற்குறிப்பு

இ) தொடர்க் குறிப்பு

ஈ) எழுத்துக்குறிப்பு

14.யார்? எது? ஆகிய வினைச்சொற்கள் பயனிலையால் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே

அ) அஃறிணை. உயர்திணை

ஆ) உயர்திணை, அஃறிணை

இ) வீரவுத்திணை. அஃறிணை 

ஈ) விரவுத்திணை. உயர்திணை

பகுதி - II - பிரிவு - 1

 • குறிப்பு : எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.

15.தண்டியலங்காரம் நூல் எத்தனை பிரிவுகளை உடையது? அவை யாவை?

 •  பிரிவுகளை உடையது

அவை:

 1. பொதுவியல்,  
 2. பொருளணியியல்,  
 3. சொல்லணியியல்

16.நிலையாமை குறித்து சவரி உரைக்கும் கருத்து யாது?

 • பொய்யான உலகப்பற்று அழிந்த்து.
 • தவம் பலித்தது.
 • பிறவி ஒழிந்த்து.

17.செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவர் உரைப்பன எவை?

 • ஒருவரிடம் இருக்கும் செல்வம் குறையாமலிருக்க வேண்டுமென்றால், அவர் பிறருடைய கைப்பொருளை விரும்பாமல் இருத்தல் வேண்டும்

18. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட. தமிழின் துணை வேண்டும். என்கிறார்?

 • செந்நிறத்து வானம் போல் சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் மீது வீற்றிருக்கும் வியர்வை முத்துக்களைப் பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி.

பிரிவு -2

 • குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக.

19.விடியல், பனிநீர் - இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடரமைக்க. 

 • காலை விடியலில் புல்லின் மீது பனிநீரைக் கண்டேன்.

20. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.

 • நடைபெற்றியலும் (கிளவியாக்கம், 26) என்றும் நடை நவின்றொழுகும் (செய் 135) என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.
 • கவிதையின் இயங்காற்றல்தான் நடை என்கிறது தொல்காப்பியம்.
 • மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே நடை எனப்படும்.

21.புக்கில், தன்மனை - சிறுகுறிப்பு தருக.

புக்கில்:

 • தற்காலிகமாக தங்குமிடம்.
தன்மனை:
 • திருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனிமையில் வாழுமிடம்.

பிரிவு - 3

 • குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடை தருக.

22. ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.

அ) ஆங்கவற்றுள்

 • ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள் 
 • விதி 1: உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
 • விதி 2: உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.

ஆ) வெங்கதிர்

 • வெங்கதிர் - வெம்மை+கதிர்

 • விதி 1: ஈறுபோதல்
 • விதி 2 :முன்நின்ற மெய்திரிதல்.

23.பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.

அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும். 

 •  நல்லது கெட்டது நன்றாகத் தெரியும்.

ஆ) வறட்சி எல்லா இடத்தையும் பாதித்துள்ளது. 

 •  அனைத்து இடத்தையும் பாதித்துள்ளது

24. பின்வரும் மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

 • விலை. விளை. விழை 
 • கார்ப் பருவத்தில் நன்றாக விளைந்ததால் தானியங்களின் விலை குறையாமல் இருக்க ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விழைவதாக அரசு அறிவித்தது.

25. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.

அ) கால்நடை 

 • கால்நடை - கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றேன்.
 • மாடுகளை மேய்ச்சலுக்கு கால் நடையாக அழைத்துச் சென்றேன்.

ஆ) பிண்ணாக்கு

26. வல்லின மெய்களை இட்டும், நீக்கியும் எழுதுக. 

ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம் உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு,அறியாமையினை அகற்றி பல நல்லனவற்றை கற்று கொடுக்கும்.

Answer:

 • ஆசிரியருக்குக் கீழ்ப்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றைத் தெரிந்துக் கொண்டு, அறியாமையினை அகற்றிப் பல நல்லனவற்றைக் கற்று கொடுக்கும்

27. பின்வரும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களை எழுதுக. 

அ) Checkout

 • வெளியேறுதல்

ஆ) Biblography

 • நூல் நிரல்

28. ஏதேனும் ஒன்றனுக்கு உறுப்பிலக்கணம் தருக.

அ) வந்து

வந்து =  வா(வ) +  த்  (ந்) +  த்  +  உ 

 • வா -பகுதி; வ எனக்குறுகியது -விகாரம் த
 • த் - சந்தி; 
 • த்–இறந்தகாலஇடைநிலை 
 • உ–வினையெச்ச விகுதி. 

ஆ) உயர்ந்தோர்

உயர்ந்தோர்= உயர் +  த்  (ந்) +  த்  +  ஓர் 

 • உயர் - பகுதி, 
 • த் - சந்தி ; த் (ஆனது விகாரம்) 
 • த்–இறந்தகாலஇடைநிலை 
 • ஓர் - பலர் பால் வினைமுற்று விகுதி.

29. இலக்கணக் குறிப்பு தருக.

அ)உயர்ந்தோர் 

 • வினையாலனையும் பெயர்

ஆ) வியர்வை வெள்ளம்

 • உருவகம்

30.தொடரில் இடம் பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.

அ) பனை மட்டையால் கூறை வைத்திருந்தனர்.

 •  பனை ஓலையால் கூறை வேய்ந்திருந்தனர்

ஆ) வாழைக்காட்டில் குயில்கள் அலறிக் கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன.

 • வாழைத்தோப்பில் குயில்கள் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்துகொண்டும் இருந்தன.

பகுதி - III - பிரிவு - 1

 • குறிப்பு: எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக.

31. 'தன்னோர் இலாத தமிழ்' என்னும் தலைப்பில் சொற்போரில் பங்கேற்பதற்கான ஐந்து நிமிட உரையை உருவாக்கி ஒரு பக்க அளவில் எழுதுக. 

32எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? - குறள் வழி விளக்குக.

33. சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.

34. 'பிறகொருநாள் கோடை' என்னும் கவிதையில் அய்யப்ப மாதவன் எவற்றையெல்லாம் காட்சிப்படுத்துகிறார்?

பிரிவு -2

 • குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக.

35. "நீர் படுகின்ற - அல்லது நீர்பட்ட பசுமையான கலம்" -விளக்குக.

36. சங்கப் பாடல்களில் 'ஒலிக்கோலம்' குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் - விளக்குக.

37. சிலம்புகவி நோன்பு - விளக்குக.(சிலம்புகழீஇ நோன்பு)

38. குடும்ப உறுப்பினர்களின் உறவுமுறைப் பெயர்களைக் கொண்டு தமிழர் தம் பரம்பரை எனும் பெயரில் குடும்ப மரம் வரைக.

பிரிவு 3

 • குறிப்பு : எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.

39. பொருள் வேற்றுமை, அணியினை எடுத்துக்காட்டு தந்து விளக்குக.

40.இலக்கிய நயம் பாராட்டுக. 

மையக்கருத்து, திரண்டக்கருத்து, தொடைநயம். (எதுகை, மோனை. இயைபு, முரண்) ஆகியவற்றுள் ஏற்புடையவற்றை சுட்டுக.

வெட்டிய யடிக்குது மின்னல் - கடல் 

வீரத் திரைகொண்டு விண்ணை பிடிக்குது

கொட்டி யிருக்குது மேகம் கூ கூவென்று 

மண்ணைக் குடையுது காற்று

சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று 

தாளங்கள் கொட்டிக் கணைக்குது வானம்'

எட்டுத்திசையும் இடிய - மழை

எங்ஙனம் வந்ததடா - தம்பி வீரா!

பாரதியார்

41. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக.

1) சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்.

2) காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்.

3) மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.

4) குமரன் வீடு பார்த்தேன்.

42. "மழைக்குப் பின்' என்னும் தலைப்பில் கவிதை ஒன்றினை ஒரு பக்க அளவில் எழுதுக.

43. தமிழாக்கம் தருக.

Periyar was not only a great social revolutionarist, he was something more than that. He is known as a great champion of the under privileged even in this sphere he was much more than that. His sphere of activity was very wide and when he took up any issue he went deep into it, understood all the aspects of it an did not rest until he had found a permanent soltuion to it. Communal differences in our society were deep - tooted and appeared to be permanent features of our society until Periyar came on the scene. 

காது கேளாதவர்களுக்கான மாற்று வினா :

நாம் வாழும் தமிழ்நாடு வெப்பமண்டல பகுதியில் உள்ளது. எனவே நீர் சார்ந்த தன்னுணர்ச்சி தமிழக மக்களுக்கு மிகுதி. தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்பது பழமொழி. தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன. குளித்தல் என்ற சொல்லுக்கு குளிர வைத்தல் என்பதே பொருள் ஆகும்.

வினாக்கள்: 

அ) நாம் வாழும் தமிழ்நாடு எந்தப் பகுதியில் உள்ளது?

ஆ) 'நீரைப் பற்றிய பழமொழி ஒன்றினைக் கூறுக.

இ) தமிழர் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவை எவை?

ஈ) 'குளித்தல்' என்ற சொல்லின் பொருள் என்ன?

பகுதி - TV

 • அனைத்து வினாக்களுக்கும் இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. 

 44.அ) தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக,

(அல்லது)

ஆ) 'சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும்'' -இக்கூற்றை முப்பால்வழி விரித்துரைக்க.

45. அ) தாய்வழிக்குடும்பம். தந்தைவழிக் குடும்பம், தனிக்குடும்பம் குறித்து ஆசிரியர் பக்தவச்சல பாரதி கூறுவனற்றைத் தொகுத்து எழுதுக.

 (அல்லது)

ஆ) தி.சு.நடராசன் கூறும் நடையியலை விளக்குக.

அ) மொழிசார் ஆ) ஒலிக்கோலங்கள் இ) சொற்புலம்

46. அ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று. சமூகப்பற்று ஆகியவற்றை விளக்குக. 

(அல்லது) 

ஆ) உரிமைத்தாகம் கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால் கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க,

பகுதி V

 • குறிப்பு : அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுதுக. 

47.அ)"ஓங்கலிடை.." எனத் தொடங்கும் மனப்பாடம் பாடலை எழுதுக.

ஆ) 'சுடும்'- என முடியும் குறளை எழுதுக.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post

POST ADS 2

எங்களது Kalvikavi & TNTET Arts YouTube telegram , Whatsapp இணைந்திடுங்கள் 
y
Please Wail material is Loading...