10, 11, 12ம் வகுப்புகளுக்கு ஜன.,31 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி 10, 11, 12ம் வகுப்புகளுக்கு ஜன.,31 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டது. 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு தரப்பில் வெளியான அறிவிப்பில், கொரோனா அதிகரித்து வருவதால் மாணவர்கள் நலன் கருதி 10, 11, 12ம் வகுப்புகளுக்கும் ஜன.,31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜன.,19ல் துவங்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Post a Comment

1. வாசகர்களின் மேலான கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post