10th Tamil - Katturai - விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

10th Tamil - Katturai - விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் (01-07-1961 – 01-02-2003)

முன்னுரை:- 

விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பனா சாவ்லா ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து. ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார், கல்பனா சாவ்லா தன் 41-வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாகக் காண்போம்,

பிறப்பும். கல்வியும்:- 

கல்பனா சாவ்லா அவர்கள் இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் 01,07,1961-ல் பனாரஸ்லால் சாவ்லாவுக்கும் சன்யோகிதா தேவிக்கும் மகளாக. ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார்,கல்பனா சாவ்லா தனது ஆரம்பக்கல்வியை கர்னலில் உள்ள அரசு பள்ளியில் தொடங்கினார், 1982-ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள ‘பஞ்சாப் பொறியியல் கல்லூரி’யில் விமான ஊர்தியியல் துறையில் கல்விப் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார், பின்னர். 1984 ஆம் அண்டு அமெரிக்காவில் உள்ள ‘டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்’ விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார், 1986-ல் பௌல்தேரில் உள்ள ‘கோலோரடோ பல்கலைக் கழகத்தில்’ இரண்டாவது முதுகலைப் பட்டமும். பிறகு 1988-ல் விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்,

முதல் விண்வெளிப் பயணம்:-

1995-ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த அவர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ‘கொலம்பிய விண்வெளி ஊர்த்தியான எல்,டி,எஸ்,-87 இல்’ பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார், 1997ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்த பயணத்தில். சுமார் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாக பூமி திரும்பினார், இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப்பெண் என்ற பெருமையும் பெற்றார்.

கொலம்பியா விண்கல நிகழ்வு:- 

முதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா சாவ்லா இரண்டாவது பயணத்திற்குத் தயாரானார், 16,01,2003 அன்று அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்,டி,எஸ்,-107 அனுப்பி வைக்கப்பட்டது.இந்திய வம்சாவழி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட ஏழுபேர் அதில் பயணித்தனர்.16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய அவர்கள் சென்ற அந்த விண்கலம் அமெரிக்காவின் டெக்ஸ் வான்பரப்பில் வெடித்துச் சிதறியது. கல்பனா சாவ்லா உள்பட ஏழு விலைமதிப்பற்ற விண்வெளி வீரர்களும் பலியாகினர்,

முடிவுரை:- 

ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து. பலர் வியக்கும்படி தன் கனவுகளை நனவாக்கி வாழ்ந்து காட்டியவர் கல்பனா சாவ்லா. பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய அவர். இந்தியாவிற்கு உலகப் புகழ் சேர்ந்தவர் என்றால்து அது மிகையாகாது, கனவுகளைக் கண்டு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு விடா முயற்சியோடும். முழு மனதோடும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தி சென்ற வீரப்பெண்ணை நாமும் போற்றுவோம்,

1 Comments

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post

POST ADS 2

எங்களது Kalvikavi & TNTET Arts YouTube telegram , Whatsapp இணைந்திடுங்கள் 
y
Please Wail material is Loading...