12th History Lesson 8 காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு Text Book Questions and Answers

12th History Lesson 8 காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு Text Book Questions and Answers

Tamilnadu State Board New Syllabus Samacheer Book 12th History Lesson 8 காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு Text Book Questions and Answers , Notes

Lesson 8 காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும

 

1.பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க

அ ஜேவிபி குழு 1 1928

ஆ சர் சிரில் ராட்கிளிஃப் 2 மாநில மறுசீரமைப்பு ஆணையம்

இ பசல் அலி 3 1948

ஈ நேரு குழு அறிக்கை 4 எல்லை வரையறை ஆணையம்

அ) 1 ,2 3, 4

ஆ) 3, 4, 2, 1

இ) 4, 3, 2, 1

ஈ) 4, 2, 3, 1

Answer:

ஆ) 3 4 2 1

2.பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்.

(i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு

(ii) நேருவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம்

(iii) மௌண்ட்பேட்டன் திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினை தேர்ந்தெடுக்கவும்.

அ) ii, i, iii

ஆ) i, ii, iii

இ) iii, ii, i

ஈ) ii, iii,i

Answer:

அ) ii,i, iii


3.பின்வருவனவற்றைப் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.


அ சீன மக்கள் குடியரசு 1 பெல்கிரேடு

ஆ பாண்டுங் மாநாடு 2 மார்ச் 1947

இ ஆசிய உறவுகள் மாநாடு 3 ஏப்ரல் 1955

ஈ அணிசேரா இயக்கத்தின் தோற்றம் 4ஜனவரி 1, 1950

அ) 3 , 4, 2, 1

ஆ) 4, 2, 3, 1

இ) 4, 3, 2, 1

ஈ) 3, 2, 4, 1

Answer:

இ ) 4 3 2 1


4.பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்க.

(i) சீன மக்கள் குடியரசு

(ii) சீனாவுடனான இந்தியப் போர்

(iii) அரசமைப்பு நிர்ணயச் சபையின் கூட்டம்

(iv) பஞ்சசீலக் கொள்கை

(v) நேரு – லியாகத் அலி கான் ஒப்புதல்

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினை தேர்ந்தெடுக்கவும்.

அ) i, ii, iii, iv,v

ஆ) iii, i, v, iv, ii

இ) iii, iv, i, v, ii

ஈ) i, iii, iv, v, ii

Answer:

ஆ) iii,i, v, iv, ii


5.மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாள் …………….

அ) ஜனவரி 30, 1948

ஆ) ஆகஸ்ட் 15, 1947

இ) ஜனவரி 30, 1949

ஈ) அக்டோபர் 2, 1948

Answer:

அ) ஜனவரி 30, 1948


6.ஆந்திர மாநில கோரிக்கையினை முதன் முதலில் எழுப்பியவர் …………….

அ) பொட்டி ஸ்ரீராமுலு

ஆ) பட்டாபி சீத்தாராமையா

இ) கே.எம். பணிக்கர்

ஈ) டி.பிரகாசம்

Answer:

ஆ) பட்டாபி சீத்தாராமையா


7.அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தவர்

அ) இராஜேந்திர பிரசாத்

ஆ) ஜவகர்லால் நேரு

இ) வல்லபாய் படேல்

ஈ) மௌலானா அபுல் கலாம் ஆசாத்

Answer:

ஆ) ஜவகர்லால் நேரு


8.பி.ஆர். அம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது? (மார்ச் 20200 )

அ) அமேதி

ஆ) பம்பாய்

இ) நாக்பூர்

ஈ) மகவ்

Answer:

ஆ) பம்பாய்


9.கூற்று : ராட்கிளிஃபின் எல்லை வரையறை அனைத்து வகையான முரண்பாடுகளையும் கொண்டிருந்தது.

காரணம் : முரண்பாடுகள் இருப்பினும் அது அனைவராலும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை இது

இ) கூற்று சரி காரணம் தவறு.

ஈ) கூற்று தவறு காரணம் சரி

Answer:

ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.

10.அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது?

அ) மார்ச் 22, 1949

ஆ) ஜனவரி 26, 1946

இ) டிசம்பர் 9, 1946

ஈ) டிசம்பர் 13, 1946

Answer:

இ) டிசம்பர் 9, 1946


11.அரசமைப்பு எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது?

அ) ஜனவரி 30, 1949

ஆ) ஆகஸ்ட் 15, 1947

இ) ஜனவரி 30, 1949

ஈ) நவம்பர் 26, 1949

Answer:

ஈ) நவம்பர் 26, 1949


12.மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் ……………

அ) காஷ்மீர்

ஆ) அஸ்ஸாம்

இ) ஆந்திரா

ஈ) ஒரிஸா

Answer:

இ ) ஆந்திரா


II. சுருக்கமான விடையளிக்கவும்

1.இணைப்புறுதி ஆவணம் பற்றி நீவிர் அறிவது யாது?

Answer:

 • இந்திய அரசாங்கச் சட்டம் 1935 கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான ஆவணம் ஆகும்.
 • இந்த ஆவணமே பிரிவினையின் போது இந்திய சுதேச அரசர்கள், இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய ஏதேனும் ஒரு நாட்டுடன் இணைவதற்கான ஒப்பந்தமாகவும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

2.அரசமைப்பு நிர்ணய சபையின் அமைப்பினை விளக்குக.

Answer:

 • 1946 டிசம்பர் 9ல் அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது. இராஜேந்திர பிரசாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • B.R.அம்பேத்கார் அரசமைப்பின் வரைவு குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 395 சட்டப் பிரிவுகளையும் 8 அட்டவணைகளையும் கொண்ட அரசியல் அமைப்பை தயாரித்தது.
 • 1950 ஜனவரி 26ல் அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது.
 • நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இறைமையுடைய குடியரசை ஏற்படுத்த வழிவகுத்தது.

3.அரசமைப்பின் ஷரத்து 370ன் முக்கியத்துவம் என்ன?

Answer:

 • 1949ல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 21 பகுதியில் திருத்தம் செய்து தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்துதலின் கீழ் 370 வது பிரிவு வரையறுக்கப்பட்டது.
 • உதாரணமாக ஷரத்து 370ன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு சில சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
 • ஷரத்து 370ன் படி, சட்டசபை காலம் 6 ஆண்டுகள் இரட்டைக் குடியுரிமை, பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு விஷயங்கள் தவிரவேறு ஏதேனும் குறித்து சட்டம் இயற்ற முடியாது. அரசு அம்மாநிலத்தின் அனுமதி பெற்ற பின்னர் சட்டம் இயற்ற முடியும்.

4.ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய யூனியனுடன் சேர்க்க எடுக்கப்பட்ட காவல்துறை நடவடிக்கையினை எது நியாயப்படுத்துகிறது?

Answer:

 • ஹைதராபாத் நிஜாம் மற்றும் அவரது இராணுவமான இராசாக்கள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி தெலுங்கான மக்கள் இயக்கத்தை கம்யூனிஸ்டுகள் வழி நடத்தினர்.
 • இதன் காரணமாகஹைதராபாத் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதற்கு சட்டப்பூர்வமான காரணம் வாய்த்தது.


5.ஜே.வி.பி குழு பரிந்துரைகளின் முக்கியத்துவம் என்ன?

Answer:

 • மொழிவாரி மாகாணக் கோரிக்கையை ஆராய ஜவஹர்லால் நேரு வல்லபாய்படேல் மற்றும் பட்டாபி சீத்தாராமையா ஆகிய மூவரையும் கொண்ட (J.V.P) ஜே.வி.பி. குழு அமைக்கப்பட்டது.
 • இக்குழு மொழிவாரியாக மாநிலங்கள் அமைத்தால் நாட்டு ஒற்றுமை சிதறிவிடும் எனக்கருதியது.
 • எதிர்காலத்தில் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகளை மறுசீரமைக்கவும், இருக்கின்ற மாநிலங்களிலிருந்து புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கான வழிவகைகளை திறந்து வைத்தது.

III. குறுகிய விடையளிக்கவும்

1.காஷ்மீர் அரசர் எவ்வாறு இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டார்?

Answer:

 • இந்திய விடுதலைக்குச் சில மாதங்களுக்குப்பின் பாகிஸ்தானியர்கள் சிலர் காஷ்மீரைச் சூறையாடிய போது
 • காஷ்மீர் மகாராஜா ஹசிங்கால் அதை தடுக்க முடியவில்லை.
 • காஷ்மீர் அரசர் இந்திய ராணுவ உதவியை நாடினார்.
 • காஷ்மீர் அரசர் இணைப்புறுதி ஆவணத்தில் கையொப்பமிட வல்லபாய்படேல் வற்புறுத்தினார்.
 • இதனால் அரசர் இணைப்புறுதி பத்திரத்தில் கையெழுத்திட இசைந்தார்.
 • காஷ்மீர் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியானது.

2.இந்திய அரசமைப்பின் தனித்தன்மைகள் யாவை?

Answer:

 • வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை, பாராளுமன்றமுறை அடிப்படை உரிமைகள், அரசுநெறிமுறைக் கோட்பாடுகள் போன்ற அம்சங்களை இந்திய அரசியல் அமைப்பின் சிறப்புக் கூறுகளாகக் கொள்ளலாம்.
 • மத்தியில் ஒருமுகத்தன்மையும் கூட்டாட்சித் தலைமையும் ஒரு நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
 • அரசாங்கத்தின் அதிகாரங்கள் மிகத் தெளிவாக மத்திய, மாநில பொது ஆகிய மூன்று பட்டியல்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

3.பிரிவினையால் ஏற்பட்ட கடுமையான வி~~வுளைச் சுட்டிக் காட்டுக?

Answer:

 • இருநாடுகளிலும் சிறுபான்மையினர் அந்தந்தநாடுகளில் தொடர்ந்து வாழ்ந்தசமயச்சிறுபான்மையினராகவும் குடிமக்களாகவும் வாழவேண்டும் என்ற புரிதலின் அடிப்படையிலேயே இந்தியா பிரிவினை செய்யப்பட்டது.
 • இந்து – முஸ்லீம் வன்முறைக்கு இடையே ஏற்பட்ட உயிர்க்கொலைகள் அதிகாரப்பரிமாற்றம் எதிர்பார்த்தது போல் மென்மையாக நடைபெறாது என்பதை உணர்த்தியது.
 • வகுப்புவாதக் கலவரங்கள் இந்தியாவெங்கும் நடைபெற்றன குறிப்பாக வங்காளம் மற்றும் பஞ்சாப்பில் அவை அதிகமாக இருந்தன.
 • இரண்டு தேசங்கள் உருவான பின்னும் பிரிந்தப் பகுதிகள் இருபக்கமும் வாழ்ந்த சிறுபான்மையின மக்களை பயமும் பாதுகாப்பின்மையும் ஆட்கொண்டிருந்தன.

4.பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகளை விளக்குக.(மார்ச் 2020)

Answer:

பஞ்சசீலக் கொள்கைகள் :

 •  இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அவற்றின் நில எல்லை மற்றும் இறையாண்மையை மதித்து நடத்தல்.
 •  இரு நாடுகளும் ஒன்றையொன்று ஆக்கிரமிக்காமல் இருத்தல்.
 • ஒரு நாடு மற்றொரு நாட்டின் உள் நிகழ்வுகளில் தலையிடாமல் இருத்தல்.
 • இரு நாடுகளுக்கு இடையேயான சமத்துவம் மற்றும் ஒன்றுக்கொன்று பயனடைவதற்கான கூட்டுறவு.
 • சமாதான சகவாழ்வு ஆகியவை ஜவஹர்லால் நேருவால் கொண்டுவரப்பட்ட பஞ்சசீல கொள்கைகளாகும்,

IV. விரிவான விடையளிக்கவும்

1.சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன? அவற்றை எவ்வாறு திறமையாக படேல் மற்றும் நேரு கையாண்டனர் என்பதையும் விளக்குக.

Answer:

 • இந்திய அரசமைப்பு நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்டு சுதந்திர அரசமைப்பு வரைவு பணி தொடங்கிய போதே தேசமும் அதன் தலைவர்களும் எதிர்கொள்ள வேண்டி புதிய சவால்கள் இருந்தன.
 • அவற்றுள் இந்தியப் பகுதிகள் அல்லது சுதேச அரசுகளை ஒன்றிணைப்பது முக்கியமானதாக இருந்தது.

சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல் :

 • காஷ்மீர், ஜூனகாத், ஹைதராபாத் ஆகியவைத் தவிர மற்ற சுதேச அரசுகள் அனைத்தும் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டு பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பில் இந்தியாவின் மைய ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டன.

சேரமறுத்த சுதேச அரசுகளை இணைத்தல் :

 • விடுதலையின் போது 566 சுதேச அரசுகளும் 11 பிரிட்டிஷ் மாகாணங்களும் இருந்தன. வல்லபாய் படேல் தனது திறமையினால் இவ்வரசுகளை ஒன்று இணைக்கும் பணியில் ஈடுபட்டார்.
 • ஜூனகாத், காஷ்மீர், ஹைதராபாத் ஆகிய மூன்று சுதேச அரசுகள் இந்திய யூனியனுடன் இணைய மறுத்தன.

ஜூனகாத் :

 • ஜூனகாத் ஆட்சியாளர் மக்களின் விருப்பத்திற்கு மாறாக பாகிஸ்தானுடன் இணைய விரும்பினார்.
 • வல்லபாய் படேல் இந்திய துருப்புகளை அங்கு அனுப்பி மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினார்.
 • அதன் ஜூனகாத் இந்திய யூனியனுடன் இணைந்தது.

காஷ்மீர் :

 • காஷ்மீர் அரசர் ராஜாஹரிசிங் ஆரம்பத்தில் தன்னைசுதந்திர அரசாக எண்ணிக்கொண்டார். பாகிஸ்தானிய ராணுவம் காஷ்மீர் மீது படையெடுத்த போது ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார்.
 • காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டால் மட்டுமே, இந்தியா பன்னாட்டுச் சட்டப்படி தனது துருப்புகளை உதவிக்கு அனுப்ப முடியும் என்று பிரதமர் நேரு எடுத்துக் கூறினார்.
 • எனவே 1947 அக்டோபர் 26ல் ராஜாஹரிசிங் இணைப்புறுதி பத்திரத்தில் கையெழுத்திட்டார். இதன்படி காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆயிற்று.

ஹைதராபாத் :

 • ஹைதராபாத் ஆட்சியாளர் நிசாம் இந்திய ஒன்றியத்துடன் இணைய மறுத்தார்.
 • பலமுறை எடுத்துக் கூறியும் நிசாம் பணிய மறுத்தமையால் 1948ல் இந்திய துருப்புகள்ஹைதராபாத்துக்குச் சென்றது. நிசாம் சரணடைந்தார்.
 • இறுதியாக ஹைதராபாத் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது.

2.1920 முதல் 1956 வரை இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதின் பல்வேறு நிலைகளைக் கண்டறிக. (மார்ச் 2020 )

Answer:

 1. 1920 ஆம் ஆண்டு முதலே இந்திய விடுதலை இயக்கத்தோடு, மொழிவாரி மாநில கோரிக்கை ஒன்றிணைந்திருந்தது. நாக்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் மொழிவாரியான மாகாண காங்கிரஸ் குழுக்கள் அமைக்கப்படுவதன் மூலம் மொழி அடையாளத்தின் அடிப்படையில் அமைந்த தேசிய அடையாளம் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தது.
 2. 1928இல் வெளியான நேரு அறிக்கையில் “நிதி மற்றும் நிர்வாக காரணங்களுக்கு உட்பட்டு, பெரும்பான்மை மக்கள் வாழும் இட அடிப்படையில் மாநிலங்களில் மொழி வாரியாக சீரமைப்பதற்கான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்” என குறிப்பிட்டார்.
 3. 1946 ஆகஸ்ட் 31 இல் பட்டாபி சீதாராமையா ஆந்திர மாகாணத்திற்கான கோரிக்கையை அரசமைப்பு நிர்ணய சபையின் முன் வைத்தார். ஆனால் அரசமைப்பு வரைவுக்குழு ஆந்திராவிற்கான புவியியல் மாகாண எல்லைகள் வகுக்கப்படும் வரை ஆந்திராவைதனி அலகாக குறிப்பிட முடியாது என்று கருதியது.
 4. எனவே 1948ஜூன் 17ல் ஜவஹர்லால் நேரு, வல்லபாய்படேல், பட்டாபி சீதாராமையா ஆகியோர் அடங்கிய ஜே.வி.பி. குழுவை அமைத்தது.
 5. இந்த குழுவும் மொழிவாரி மாநிலம் அமைக்கப்படுவதை ஆதரிக்கவில்லை .
 6. நாட்டின் பல பகுதிகளில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கக் கோரி மக்கள் இயக்கங்கள் நடைபெற்றன.
 7. ஆந்திராவில் இத்தகைய இயக்கம் தீவிரமடைந்தது. எனவே 1953 ஆம் ஆண்டு ஆந்திரா தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.
 8. சென்னை மாநிலமும் தமிழ் பேசும் மாநிலமாக ஏற்கப்பட்டது.
 9. 1953ல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நீதிபதி பசல் அலி தலைமையிலான மாநிலங்கள் சீரமைப்புக்குழுவை நியமித்தார். இதில் பண்டிட் குன்ஸ்ரூ . சர்தார் K.M.பணிக்கர் உறுப்பினர்களாக இருந்தார்கள்.
 10. 1955 செப்டம்பர் 30ல் இக்குழுதனது அறிக்கையை அளித்தது. இதன் அடிப்படையில் 1956ல்நாடாளுமன்றம் மாநிலங்கள் சீரமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.
 11. 16 மாநிலங்களும் ஆறு யூனியன் பிரதேசங்களும் இச்சட்டத்தில் இடம் பெற்றன.
 12. ஹைதராபாத் உள்ளடக்கிய ஆந்திர பிரதேசம், கர்நாடகம், குஜராத், பஞ்சாப், ஹரியான, இமாசல பிரதேசம் போன்ற மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
 13. இதன் மூலம் 1920இல் இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட மொழிவாரி மாகாண சீரமைப்பு முடிவுக்கு வந்தது.

3.இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை? அணிசேரா இயக்கத்தில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளை இணைத்ததில் பிரதமர் நேரு அவர்களின் பங்கினை விளக்குக.

Answer:

இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் :

 • காலனிய எதிர்ப்பு (அ) ஏகாதிபத்திய எதிர்ப்பு, இன ஒதுக்கலை எதிர்த்தல்.
 • இனவெறியை எதிர்த்தல்.
 • வல்லரசு நாடுகளுடன் அணி சேராமை.
 • ஆப்பிரிக்க – ஆசிய ஒற்றுமை
 • பிற நாடுகளை ஆக்கிரமிக்காமல் இருத்தல்.
 • பிறநாடுகளின் உள்நாட்டு நிகழ்வுகளில் தலையிடாமல் இருத்தல்.
 • ஒரு நாடு மற்றொரு நாட்டின் இறையாண்மை மற்றும் நில எல்லையை மதித்தல்.
 • உலக அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல்.
 • நாடுகளுக்கிடையேயான அமைதியை நிலை நிறுத்துவதில் வெற்றிடம் ஏற்படாவண்ணம் இருநாடுகளும் -சமநீதியைப் பாதுகாத்தல்.

அணி சேராக் கொள்கையில் ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் :

 • இரண்டாம் உலகப்போருக்குப் பின், அமெரிக்கா (USA) மற்றும் சோவியத் ஒன்றியம் (USSR) ஆகிய இரு வல்லரசு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பனிப்போர் காரணமாக இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு இந்தியா அணிசேராக் கொள்கை மூலம் தீர்வு கண்டது.
 • உலகுக்கான இந்தியாவின் பங்களிப்பு, இந்திய சீன உறவு மற்றும் பஞ்சசீலக் கொள்கையுடன் மட்டும் நிறைவடையவில்லை. வல்லரசு நாடுகளுடன் கூட்டு சேராத அணி சேராமை என்ற கருத்தாக்கம் வலுப்பெறவும் பாண்டுங் மாநாடு உதவியது.

ஆசிய உறவுக்கான மாநாடு:

 • மார்ச் 1947இல் டெல்லியில் நேரு ஏற்பாடு செய்த ஆசிய உறவுக்கான மாநாட்டில் 20 க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்த கொண்டன. ஆசிய நாடுகளின் விடுதலை மற்றும் உலகில் ஆசியாவின் நிலையை உறுதி செய்தல் என்பதே மாநாட்டின் மையக் கருத்தாகும்.
 • இத்தகைய மாநாடு மீண்டும் ஒருமுறை டிசம்பர் 1948இல் இந்தோனேசியாவில் மறுகாலனியாக்கத்திற்கு உட்படுத்த விரும்பிய டச்சுக்காரர்களுக்குப் பதில் கூறும் வகையில் நடத்தப்பட்டது.
 • காலனி ஆதிக்க நீக்க முயற்சிகள் 1954 இல் கொழும்பில் நடைபெற்ற ஆசிய தலைவர்கள் மாநாட்டில் மேலும் முன்னெடுக்கப்பட்டது.

பாண்டுங் மாநாடு :

 • 1955ல் இந்தோனேஷிய நாட்டின் பாண்டூங்மாநாட்டில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது. பின்னாளில், பெல்கிரேட் நகரில் இந்த நாடுகள் கூடி அணி சேரா இயக்கத்தை தோற்றுவிப்பதற்கான அடித்தளத்தை பாண்டுங் மாநாடு ஏற்படுத்தி கொடுத்தது.

V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. அடையாள அரசியல் தொடர்பான சாதக பாதகங்கள் பற்றி விவாதிக்க சிறப்புக் கூட்டங்களை நடத்துக,

2. ஆசிரியர்கள் கோவிந்த் நிகலானியின் தொலைக்காட்சி படமான Tamas மற்றும் எம்.எஸ். சத்யுவின் “Garam Hawa” படத்தையும் ஆங்கில துணை தலைப்புகளுடன் திரையிடலாம்.

3. குஷ்வந்த்சிங்கின் Trainto Pakistan என்ற சிறப்பான புத்தகத்தை இப்பாடப்பகுதி கருத்துகள் தொடர்பாக வாசிக்கலாம். சாரா


Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post

POST ADS 2

எங்களது Kalvikavi & TNTET Arts YouTube telegram , Whatsapp இணைந்திடுங்கள் 
y
Please Wail material is Loading...