8th std Tamil Basic quiz 7 (வினாடி வினா ) Answer key - (Bridge course worksheet 7 Tamil)

8th std Tamil Basic quiz 7 (வினாடி வினா ) Answer key - (Bridge course worksheet 7 Tamil)

  • எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் 2
  • வினாடி வினா  - 7
  • வாழ்வியல் - திருக்குறள்

1. ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி' என்னும் குறளடியிலுள்ள 'அணி' என்றசொல் உணர்த்தும் பொருளைத் தெரிவுசெய்க.

அ) பொறுப்பு 

ஆ) அழகு 

இ) செயல் 

ஈ) அணிதல்

விடை: அழகு

2. கோடிட்ட இடங்களை நிரப்புக.

அ) கணை (  கொடிது ) யாழ்கோடு (செவ்விது) ஆங்குஅன்ன

வினைபடு -( பாலால் )  கொளல்.

ஆ) தன்குற்றம்... ( நீக்கிப் ) ... பிறர்குற்றம்... காண்கிற்பின்

என்குற்றம் ஆகும்.--( இறைக்கு )


3. சரியா? தவறா? என எழுதுக.

அ) நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது.

விடை : (சரி )

ஆ) வளைவுடன் இருப்பினும் யாழின் கொம்பு இனிமையைத் தருகிறது. 

விடை : (சரி) )

4. குறளினைச் சீர்பிரித்து எழுதுக.

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.

விடை- 

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்

5. சொல்லுக்கான பொருளைத் தொடரில் அமைத்து எழுதுக

அ) தக்கார் - நடுவு நிலைமை உடையவர்

விடை -

  •  நீதி வழங்கபவர் நடுவுநிலைமை உடையவராக இருக்க வேண்டும்.

ஆ) என்ளற்க - இகழ்தல் கூடாது

விடை -  

  • உருவத்தைக் கண்டு யாரையும் இகழ்தல் கூடாது.

6. முறைமாறியுள்ள திருக்குறள் சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

"கால்வல் கடல்ஓடா நெடுந்தேர் கடல்ஓடும்

ஓடாநிலத்து நாவாயும்"

விடை  -

 கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் நடா நிலத்து.

7. கீழ்க்காணும் குறளில் மாறி இடம் பெற்றுள்ள மரபுத்தொடர் யாது?

"வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந்தற்று"

விடை-  

  • பசுத்தோல் போர்த்திய புலி.

8. குறளில் பயின்றுவரும் எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.

"உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

கார்அனையர்கல்லாதவர்'.

விடை -

  •  உர் , கர் - ள -  எதுகை

9. குறளில் பயின்றுவந்துள்ள அணியைப் பொருளுடன் பொருத்தி எழுதுக.

"சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்

கோடாமை சான்றோருக்கு அணி

விடை: 

உவமை அணி)

குறளின் பொருள் :  

  • இரு புறமும் சமமாக நிற்கும் தராசைப்போல்ஒரு சார்பாக  நீதி வழங்காமை சான்றோர்க்கு அணியாகும்.

அணிப் பொருத்தம் : 

சமன் செய்து சீர்தூக்கும்  கோல் - உவமை

ஒரு பால் கோடாமை - உவமேயம

போல் - உவமஉருப

உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வருவது உவமை அணி ஆகும்.

10 ) கதைக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.

தண்ணீர் சிறிதளவே உள்ள ஒரு குளத்தில் சில தவளைகள் வாழ்ந்துவந்தன.மழை வரும் என்றெண்ணி அவை அங்கேயே இருக்க முடிவுசெய்தன. தண்ணீரின் அளவும் குறைந்துகொண்டே வந்தது. இந்நிலையில் பெரிய தவளை ஒன்று ஆபத்து வருவதற்குள்  இங்கிருந்து சென்றுவிடலாம் என்று யோசனை கூறியது. ஆனால் மற்ற தவளைகள் அதைக் கேட்கவில்லை. ஒருநாள் அவ்வழியாக வந்த காளை மாடுகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் சில தவளைகள் நசுங்கி இறந்துபோயின.

விடை

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

இடங்கண்ட பின்அல் லது.

 

__________________________________________________________________________________

8th STD ALL SUBJECT SCERT BASIC QUIZ QUESTIONS COLLECTION T/M & E/M

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post