> 8th std Tamil Basic quiz 17 (வினாடி வினா ) Answer key - (Bridge course worksheet 17 Tamil) ~ Kalvikavi

10,11,12th New Study Material 2025 - 2026

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

8th std Tamil Basic quiz 17 (வினாடி வினா ) Answer key - (Bridge course worksheet 17 Tamil)

8th std Tamil Basic quiz 17 (வினாடி வினா ) Answer key - (Bridge course worksheet 17 Tamil)

1. ) மத்தளம், திமிலை' இவ்விரண்டு இசைக்கருவிகளுக்கும் உருவத்தில் காணப்படும் வேறுபாடு யாது?

விடை:  

  • மத்தளத்தின் நடுப்பகுதி பெருத்தும் , கடைப்பகுதி சிறுத்தும் காணப்படும். திமிலை மணற்கடிகார வடிவத்தில் இருக்கும்.

2. இசைக்கருவிகள் செய்யப் பயன்படுத்திய உலோகங்கள் யாவை?

விடை:  

  • இரும்பு , பித்தளை , வெண்கலம்

3. உடுக்கைக்கும், குடுகுடுப்பைக்கும் இசைப்பதிலுள்ள வேறுபாட்டைக் கூறுக.

விடை:  

  • உடுக்கை - இடை சுருங்கிய ஒரு கைப்பறை 

  • குடுகுடுப்பை - சிறு உடுக்கை

4. பொருத்துக.

                                                 விடை

அ) ஆகோட்பறை -  ஆநிரை கவர்தல்

ஆ) உடுக்கை -   குறிசொல்லுதல்

இ) கொம்பு  - திருவிழா, ஊர்வலம்

ஈ ) சாலரா    - கூட்டு வழிபாடு

5. கீழ்க்காணும் இசைக்கருவிகளை வகைப்படுத்துக.

(உடுக்கை, குடமுழா,குழல், கொம்பு, சங்கு, சாலரா,சேகண்டி, திமிலை, பறை,மத்தளம்,முரசு,முழவு, யாழ், வீணை)

தோல் கருவிகள் :  

  • உடுக்கை , குடமுழா , திமிலை , பறை , முரசு

நரம்புக் கருவிகள்

  • யாழ் , வீணை 

காற்றுக் கருவிகள் : 

  • குழல் , கொம்பு , சங்கு

கஞ்சக் கருவிகள் : 

  • சால்ரா , சேகண்டி

6. 'மாக்கண்முரசம், மண்ணமைமுழவு' என்னும் இசைக்கருவிகள்பற்றி இடம்பெற்றுள்ள நூல்கள் யாவை?

  • மாக்கண் முரசம் - மதுரைக்காஞ்சி
  • மண்ணமை முழவு  - பொருநராற்றுப்படை

7. கீழக்காணும் இசைக்கருவிகள் இடம்பெறும் இலக்கியங்களின் பெயர்களை எழுதுக.

இசைக்கருவிகள        இடம்பெறும் இலக்கியங்கள்

குழல்                                    - திருக்குறள்

சங்கு                                    - திருப்பாவை

திமிலை                           - பெரிய புராணம்

மத்தளம்                           - நாச்சியார் திருமொழி

8. உரைப்பகுதியைப் படித்து வீணை பேசுவது போல உரையை மாற்றி எழுதுக.

யாழ் போன்ற அமைப்பையுடைய நரம்புக்கருவி வீணையாகும். இஃது, ஏழு நரம்புகளைக் கொண்டது. இடக்கை விரல்களால் நரம்புகளை அமுக்கியும் தேய்த்தும்வலக்கை சுண்டுவிரலால் கம்பிகளை மீட்டியும் இசை எழுப்புவர். இவ்வாறு நரம்புகள்மூலம் எழுப்பப்படும் இசையை அதன் குடம், தண்டு முதலிய பாகங்கள் பெருக்கி அனுப்புகின்றன. பரிவாதனி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில இருந்ததாகக் கூறப்படுகிறது.

விடை:

  • என் பெயர் வீணை. நான் யாழ் போன்ற அமைப்பு உடைய நரம்புக் கருவி, நான் ஏழு நரம்புகளைக் கொண்டவள். இடக்கை விரல்களால் நரம்புகளை அமுக்கியும் தேய்த்தும், வலக்கைச் சுண்டுவிரலால் என்னை மீட்டி இசை எழுப்புவர். இதனால் உண்டாகும் இசையை குடம், தண்டுக்குப் பெருக்கி அனுப்புவேன். பல்லவ மன்னன்  காலத்திலேயே நான் இருந்துள்ளேன்,

__________________________________________________________________________________

8th STD ALL SUBJECT SCERT BASIC QUIZ QUESTIONS COLLECTION T/M & E/M

Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel