12th Tamil Unit 3 Assignment Answer key - July 2021

12th Tamil Unit 3 Assignment Answer key - July 2021

  • இயல் -3 (பண்பாடு - சுற்றத்தார் கண்ணே உள)
  • பகுதி-அ

I.ஒரு மதிப்பெண் வினாக்கள்

1.குடும்பம் என்ற சொல் முதன்முதலில் பயின்று வந்த நூல்—

அ)தொல்காப்பியம் 

ஆ)திருக்குறள் 

இ)நன்னுல் 

ஈ)புறநானூறு

விடை : ஆ)திருக்குறள்

2.தற்காலிகத் தங்குமிடத்தை_____என்று புறநானூறு குறிப்பிடுகின்றது.

அ)தம்மனை 

ஆ)தாய்மனை

இ)புக்கில்

ஈ)நும்மனை

விடை : இ)புக்கில்

3 சேரநாட்டு மருமக்கள் தாயமுறை பற்றிக் கூறும் நூல்

அ)பதிற்றுப்பத்து 

ஆ)கலித்தொகை 

இ)நற்றிணை 

ஈ)புறநானூறு

விடை :அ)பதிற்றுப்பத்து

4. — முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன 

அ)தந்தை வழி

ஆ) தனிக்குடும்பம்

இ)விரிந்த குடும்பம்

ஈ)தாய்வழி

விடை :ஈ)தாய்வழி

5.கம்பராமாயணம் எத்தனைக் காண்டங்களை உள்ளடக்கியது?

அ)மூன்று

ஆ) ஐந்து

இ)ஆறு

ஈ) ஏழு

விடை : இ)ஆறு

6.சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருத்துள்ளன.

அ)அறவோர். துறவார்

ஆ)திருமணமும் குடும்பமும்

இ) மன்றங்களும் அவைகளும்

ஈ) நிதியமும் குடும்பமும்

விடை : ஆ)திருமணமும் குடும்பமும்

7. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க

அ)உரிமைத்தாகம்.           -   1.பார்சீக கவிஞர்

ஆ) அஞ்ஞாடி.                     -2பூமணி 

 இ) ஜலாலுத்தின் ரூமி.    -3. பக்தவச்சலபாரதி

ஈ)தமிழர் குடும்பமுறை. - 4, சாகித்திய அகாதெமி

அ)2,4,3,

ஆ)1,3,4,1

இ)2,4,1,3 

ஈ)2,3,4,1

விடை : ஈ)2,3,4,1

8.இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஈலாலுதீன் ரூமி குறிப்பிடுவது

அ) வக்கிரம் 

ஆ) அவமானம்

இ) வஞ்சனை

ஈ) இவை அனைத்தும்

விடை :ஈ) இவை அனைத்தும்

9 .உவா உறவந்து கூடும்

உடுபதி. இரவி ஒத்தார் - யார் யார்? 

அ) சடாயு ,இராமன்

இ)இராமன், சுக்ரீவன்

 ஆ)இராமன், குகன்

ஈ)இராமன், சவரி

விடை : இ)இராமன், சுக்ரீவன்

10.எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது. மூச்சினிலே எனும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது

அ)தனிக்குடும்ப முறை 

இ)தாய்வழிச் சமூகமுறை

ஆ) விரிந்த குடும்ப முறை

ஈ) தந்தைவழிச் சமூகமுறை

விடை : ஈ) தந்தைவழிச் சமூகமுறை

பகுதி-ஆ

IIகுறுவினா

11.புக்கில்,தன்மனை சிறு குறிப்பு எழுதுக.

புக்கில் :

  • ‘புக்கில்’ என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிப்பதாகும்.
  • “துகள் அறுகேள்வி உயர்ந்தோர் புக்கில்” என்ற புறநானூறு பாடல் (222 : 6) சான்றாகும்.

தன்மனை :

  •  பின் கணவனும், மனைவியும் பெற்றோர்களிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் ‘தன்மனை’ என அழைக்கப்பட்டது.

12.நிலையாமை குறித்து சவரி ஈரைக்கும் கருத்து யாது?

  • நிலையாமை என்பது உலக வாழ்வு நிலை இல்லாதது என்பதைக் குறிக்கும்.
  • “என் பொய்யான உலகப்பற்று அழிந்தது; என் பிறவி ஒழிந்தது” என்று சவரி நிலையாமை குறித்துக் கூறுகிறாள்.

13.எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன்ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

(i) வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் அனைத்தையும் ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு என்று உருவகப்படுத்துகிறார். இவைகளை நமது இல்லத்திற்கு வரும் எதிர்பாராத விருந்தாளிகளாக எண்ண வேண்டும்.

(ii) எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்பாராத விருந்தாளிகளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

14.துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்?

அ.நிழலின் அருமை வெயிலில் தெரியும்

ஆ. சிறு துரும்பும் பல்குத்த உதவும்

விடை : அ.நிழலின் அருமை வெயிலில் தெரியும்

15.சங்ககாலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?

  • தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும், வளங்களும் பெண்களுக்கே போய்ச் சேர்ந்தன.
  • தாய்வழிக் குடும்பங்களில் பெண்களே குலத் தொடர்ச்சிக்கு உரியவர்களாக இருந்தனர்.

பகுதி - இ

III.சிறுவினா

16.பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் விளக்கம் எழுதுக

தந்தையும் உடன் வாழ்ந்தனர்

(i) சங்க காலத்தில் முதல் நிலை உறவை மட்டும் காணமுடிகிறது.

(ii) நற்றாய் ஒருபுறம் செவிலியும், மகளின் தோழியும் குடும்பத்தில் முதன்மைப் பெற்றனர். இம்முறை பண்டை இனக்குழு மரபின் மாறுபட்ட தொடர்ச்சி பண்டைய காலத்தில் காண முடிகிறது.

(iii) இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் மக்களோடு நிறைந்து. அறம் செய்து, சுற்றத்தாரோடு சேர்ந்து வாழ்தலே தலைவன் தலைவின் இல்லறப் பயன் ஆகும்.

(iv) சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பை அடிப்படை அலகாகக் கொண்டு அதன் தொடர்ச்சியாக இன்றைய சமூகமும் கூட்டுக் குடும்பம், தனிக்குடும்பம் கொண்டதாக, தந்தைவழிக் குடும்ப அமைப்பைக் கொண்டதாகவும் அமைகிறது.

17. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுக. 

குகன் :

  • இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவான் என்று குகன் வருந்துவான் என்பதை உணர்ந்த இராமன், “குகனே! துன்பம் இருந்தால்தான் இன்பம் வரும். நம்மிடையே பிரிவு இப்போது ஏற்படுகிறது. இதுவரை நாங்கள் நால்வர். இப்போது உன்னையும் சேர்த்து ஐவர்” என்று குறிப்பிடுகிறார். (அன்புள இனி நாம் ஓர் ஐவர் ஆனோம்)

சுக்ரீவன் :

  • சுக்ரீவன் இராமன் மீது கொண்ட அளவற்ற அன்பினால் சீதையைத் தேடி இலங்கை சென்றான்.
  • இராவணனைக் கொன்று வருவதாகக் கூறி சென்றவன் அவன் மணிமுடியை மட்டும் கொண்டு வந்தான்.
  • இராமன் மீது அவன் கொண்டிருந்த அளவற்ற அன்பைக் கண்ட இராமன் நீ, என் இனிய உயிர் நண்பன் என்று கூறி, நான்கு பேராக இருந்த நாங்கள் குகனுடன் சேர்த்து ஐந்து பேராகும்.
  • உன்னையும் இணைத்து ஆறுபேர் ஆனோம் என்றான்.

வீடணன் :

  • சீதையைக் கவர்ந்து வந்த செயல் தவறு என்று கூறியதற்காக இராவணனை வீடணன் கடிந்தான்.
  • இலங்கை விட்டு வந்த வீடணன் இராமனிடம் அடைக்கலம் வேண்டினான்.
  • இராமன் அவனை உடன்பிறந்தவனாக ஏற்று இலங்கை அரசனை அவனுக்கு உரிமையாக்கினான்.
  • குகனுடன் ஐவர், சூரியனின் மகன் சுக்கிரீவன் உடன் ஆறுபேர் உன்னையும் சேர்த்து எழுவர் ஆனோம்.

18.வருபவர் எவராயினும் நன்றி செலுத்து- இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக

இடம் :

இக்கவிதை வரிகள் ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் எழுதிய கவிதையின் ஆங்கில மொழியாக்கத்தைத் தமிழில் ‘தாகங்கொண்ட மீளொன்று’ என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார் என். சத்தியமூர்த்தி. அத்தொகுப்பில் உள்ள ‘விருந்தினர் இல்லம்’ என்னும் கவிதையில் இடம்பெற்றுள்ளது.

பொருள் :

வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் நம்மைத் தேடி வரும் நன்மையோ, தீமையோ எது வந்தாலும் அதற்காக நன்றி சொல்ல வேண்டும்.

விளக்கம் :

வாழ்க்கை என்பது எல்லாம் கலந்த கலவை. நம் வாழ்க்கை விருந்தினர் இல்லம் போன்றது. நமது வீட்டிற்கு வரும் விருந்தினர்களில் மகிழ்ச்சியுடனும் வருபவர்களும் இருப்பர். துக்கங்களைக் கொண்டு வருபவர்களும் இருப்பர். அதுபோன்றுதான் நம் வாழ்க்கையும். ஆனந்தம், மனச்சோர்வு, : – அற்பத்தனம், சிறிது விழிப்புணர்வு என பல வாழ்வியல் வடிவங்கள் நம்மைத் தினம் தினம் விருந்தினர்களைப் போலச் சந்திக்கலாம் அவற்றை எல்லாம் நாம் வரவேற்க வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு நிகழ்வும் நமக்குப் புதுப்புது அனுபவங்களைத் தரும். மகிழ்ச்சியால் மகிழ்ந்தாலும், துக்கத்தால் வெறுமையடைந்தாலும் துவண்டுவிடக் கூடாது. ஏனெனில் எல்லாமே நமக்கு அனுபவங்களைக் கற்றுத் தரும். எனவே, எது வந்தாலும் விருந்தினரை எதிர்கொண்டு வரவேற்பது போல வரவேற்று அனுபவங்களைக் கற்றுத்தரும் வாழ்வியல் வடிவங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்

 19.தாயும் தந் ம் பணிக்குச் செல்லும் இன்ன ய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் எவை?

  • காலையில் 4 மணிக்குப் படிக்க வேண்டிய தேவைகள் அனைத்தையும் செய்து முடித்துவிடுவேன்.
  • அவர்களுக்கு நானே தேநீர் தயார் செய்து கொடுப்பேன். தாயுடன் சேர்ந்து உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவேன்.
  • தாய், தந்தை பணிக்கு ஆயத்தம் ஆவதற்குள் மூன்று பேருக்கும் உணவு எடுத்து வைப்பேன்.
  • பள்ளிக்கு என் பெற்றோர் உதவியில்லாமல் நானே மிதிவண்டியில் செல்வேன். வீட்டிற்குத் திரும்பியவுடன் வீட்டைச் சுத்தம் செய்து, பெற்றோருக்குத் தேநீர் தயார் செய்து வைப்பேன்.
  • பெற்றோர் வந்தவுடன் மறுநாளுக்குத் தேவையான பொருள்களை கடைக்குச் சென்று வாங்கி வருவேன்.
  • பிறகு சிறிது நேரம் படித்து விட்டு இரவு உணவை உண்ட பிறகு 10.00 மணி வரை படிப்பேன்.

20. சடாயுவை தந்தையாக ஏற்று. இராமன் ஆற்றியகடமை எழுதுக

இராமன் ஆற்றிய கடமைகள் :

  • இராவணன் சீதையைச் சிறையெடுத்த போது தடுத்துச் சண்டையிட்டுக் காயப்பட்டவன் சடாயு.
  • அவன் இராவணனோடு சண்டையிட்டுத் தன் உயிரை இழந்ததை அறிந்த இராமன் தன் தந்தையாகவே சடாயுவைக் கருதினான்.
  • ஒரு தந்தைக்கு மகன் எவ்வாறு இறுதிச் சடங்குகளைச் செய்வானோ அதைப் போன்று இராமன் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டான்.
  • பார்ப்பவர்கள் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும் சந்தனக் கட்டைகளையம் இராமன் கொண்டு வந்தான்.
  • தேவையான தருப்பைப் புற்களை ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் தூவினான். மணலினால் திருத்தமான மேடை அமைத்து, நன்னீரும் கொண்டு வந்தான்.
  • இறுதிச்சடங்கு செய்யப்படக்கூடிய மேடைக்குத் தன் தந்தையாகக் கருதிய சடாயுவைத் தன் பெரிய கைகளினால் தூக்கிக் கொண்டு வந்தான்.

பகுதி-ஈ

IV.நெடுவினா

21. குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது எவ்வாறு? விளக்குக.

குடும்பம் என்ற அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே.

  • குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளது. நாணயத்தின் இருபக்கங்கள் போலகுடும்பமும்திருமணமும் உள்ளது. திருமணம், குடும்பம் தொல்காப்பியத்திலோ சங்க இலக்கியத்திலோ இடம் பெறவில்லை குடும்பம் என்ற சொல் திருக்குறளில் பயின்று வருகிறது.

கட்டமைப்பு:

(i) ‘குடும்பு’ எனும் சொல் கூடிவாழ்தல் என்று பொருள்படுகிறது. பண்டைத்தமிழர்கள் குடும்பம் 1 என்ற அமைப்புடன் வாழ்ந்த இடங்கள் பல. அவற்றுள் சில: புக்கில், தன்மனை.

(ii) புக்கில் என்பது தற்காலிகத் தங்குமிடம் ஆகும். தன்மனை என்பது திருமணம் ஆன கணவன், மனைவி பெற்றோரை விட்டு வாழும் இடம் ஆகும்.

(iii) மணந்தகம் என்பது மணம் புரிந்த கணவன் மனைவியும் சேர்ந்து வாழத் தொடங்கி முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலக்கட்டத்தைக் குறிப்பது ஆகும். . சங்க காலத்தில் பெரும்பான்மையான சமூகத்தில் தாயே தலைமை ஏற்றிருப்பாள். பெண் திருமணம் செய்த பின்னும் தன் வீட்டிலே வாழ்க்கை நடத்தும் முறை இருந்தது. பெண் குழந்தைகள் பேறு முதன்மைப்படுத்தப்பட்டது

தந்தை வழிக் குடும்பம்:

  • சங்க காலத்தில் தாய் வழிக் குடும்பம் போலவே தந்தை வழிக் குடும்பமும் வேரூன்றியது.
  • பெண் திருமணம் ஆன பிறகு கணவனின் தந்தை வீட்டில் வாழ வேண்டும் என்பதை ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர்’ என்கிறது குறுந்தொகை.

தனிக்குடும்பம்:

  • தனிக்குடும்பம் என்பது படிமலர்ச்சியில் இறுதியில் ஏற்பட்டது. இது இன்று தொழிற் சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. தனிக்குடும்பம்,
  • ஆதிக்குடிகளிடமும் இருந்தது என்று இனவரைவியல் ஆய்வுச் சுட்டுகிறது.

விரிந்த சமூகம்:

  • சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்று இவர்களோடு பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் விரிந்த குடும்பமாகக் காணமுடிகிறது.
  • கணவன், மனைவி, குழந்தைகள் சேர்ந்து பெற்றோர்கள் சேர்ந்து வாழும் நேர்வழி விரிந்த குடும்ப முறை காணமுடிகிறது.
  • இன்றைய மனித சமூக கட்டமைப்பில் தாய்வழிக் குடும்பம், தந்தைவழிக் குடும்பம் என்ற நிலையைக் கடந்து தனிக்குடும்பம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.
  • சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பிலிருந்தே மனித சமூகம் கட்டமைக்கப்படுகிறது. அவற்றின் தொடர்ச்சியாகவே இன்றைய கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்ற அலகைக் கொண்டதாக அமைகிறது. அதுவும் தந்தைவழிக் குடும்ப அமைப்பைக் கொண்டதாக இருக்கிறது. தொன்மைமிக்க இக்குடும்ப அமைப்பு முறை தமிழ்ச் சமூகத்தின் அடையாளமும் பெருமிதமும் ஆகும்.

குடும்பமே சமூகத்தைக் கட்டமைக்கும் களம் :

  • (i) குடும்பம் தனி மனிதருக்காகவும் சமுதாயத்திற்காகவும் பெரும் பங்காற்றுகிறது. மனித சமூகத்தின் அடிப்படைகளான அன்பு செலுத்துதல், பொருளாதாரப் பகிர்வு, பொழுதுபோக்கு, பாதுகாப்பு, சமயச்செயல்கள், கல்விபெறுதல் ஆகியவை குடும்பத்திலே கற்பிக்கப்படுகின்றன.
  • (ii) பண்பாட்டைக் குழந்தைப் பருவத்தில் குடும்பம் கற்றுக் கொடுக்கிறது. சமுதாயத்தின் நெறிமுறைகள் அன்றாட வாழ்வில் பின்பற்றப்பட வேண்டிய பழக்கவழக்கங்கள் பொருளாதாரச் செயல்களாகச் செய்யும் முறைகள், சமுதாய சமய வாழ்வில் ஆற்ற வேண்டிய கடமைகள் போன்ற எண்ணற்ற வகைகளில் குடும்பம் குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பதால் மனித சமூகம் சிறப்பாகக் கட்டமைக்கப்படும்.
  • (iii) பண்பாட்டு வயமாக்கல் நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் ஒரு மாதிரி குழுவாகச் செயல்படுகின்றனர்.
  • (iv) குடும்பம் என்பது தனது உறுப்பினர்கள் என்ற நிலையில் குடும்ப உறுப்பினர்களுக்குப் பயிற்சிகளை வழங்கி அமைதியும் ஒழுங்கும் கொண்ட ஒரு சிறந்த சமுதாயம் அமைய அடிப்படையாக விளங்குவதால், குடும்பம் என்னும் சிறிய அமைப்பில் இருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்புக் கட்டமைக்கப்படுகிறது.

22 பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவுநிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக,

குகனுடன் கொண்ட உறவுநிலை :

  • (i) தன்மீது அளவற்ற அன்பு கொண்ட குகன் தன்னைப் பிரிய விருப்பமின்மை என்பதை உணர்ந்து ‘என் உயிர் அணையாய்’ என்றான். “நீ என் உயிர் போன்றவன்’ என்று கூறியது மட்டுமல்லாது, நீ சொல்லும் வேலைகளைச் செய்யும் பணியாளனாய் இருக்கின்றேன்.
  • (ii) குகனின் அன்பால் தன்னை அவனுடைய பணியாளாய்’ கருதும் உரிமையை இராமன்குகனுக்குக் கொடுத்திருந்தான். சகோதரனாக ஏற்றுக் கொள்கிறான் இராமன்.

சடாயுடன் கொண்ட உறவு நிலை :

  • (i) தனது மனைவிசீதையை இராவணன் சிறையெடுத்தபோது தடுத்து, சண்டையிட்டுக் காயப்பட்டு இறந்தான் சடாயு என்பதை அறிந்து அவனது உயிர்த்தியாகத்தின் உத்தமத்தை உணர்கிறான்.
  • (ii)  தனக்காக உயிரைவிட்ட சடாயுவின் உடலை இறுதிச் சடங்கிற்குத் தயார்படுத்தும்போது, தந்தைக்கு மகன் ஆற்றும் கடமையாகக் கருதுகிறான். சடாயுவின் தியாகத்தால் ‘மகனாய்’ கருதும் உரிமையை இராமன் சடாயுவுக்குக் கொடுத்தான்.

சவரியுடன் கொண்ட உறவு நிலை :

  • (i) தன்னைக் கண்ட பிறகுதான் பிறவி ஒழிப்பேன் என்று தவம் இருந்த சவரியிடம் பரிவு காட்டி பேசினான் இராமன்.
  • (ii) இராமனைக் கண்டதால்தான் பிறந்ததின் பயனை அடைந்ததாக உணர்ந்த சவரி, இராமன், இலக்குவனுக்கு விருந்து அளித்து மகிழ்ந்தான். தனது அன்புக்குரியவராக விளங்கிய சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினான் இராமன்.

சுக்ரீவனிடம் கொண்ட உறவு நிலை :

  • (i) தனக்காக இலங்கை சென்று கடும்போர் புரிந்து இராவணனின் மணிமகுடத்தை எடுத்து வந்த சுக்ரீவனை நினைத்துப் பெருமைப்பட்டான் இராமன்.
  • (ii) நீ வேறு நான் வேறு அல்ல ; உன் பகைவர் என் பகைவர், உன் உறவினர், என் உறவினர் என் உறவினர் உன் உறவினர், ‘நீ என் இனிய உயிர் நண்பன்’ என்று கூறினான் இராமன்.
  • (iii) சுக்ரீவனைத் தன் உயிர்நண்பனாகக் கருதும் உரிமையைக் கொடுத்தான் இராமன், மேலும் அவனைச் சகோதரனாக ஏற்றுக் கொள்கிறான் இராமன்.

வீடணனிடம் கொண்ட உறவு நிலை :

  • (i) தன் மனைவியைக் கவர்ந்து சென்ற இராவணனின் செயலைக் கண்டிக்கும் இராவணின் தம்பியாகிய வீடணின் இராமன் மிகுந்த அன்பு கொள்கிறான்.
  • (ii) தன்னிடம் அடைக்கலம் அடையும் வீடணனை உடன்பிறந்தவனாக ஏற்றுக் கொள்கின்றான்.
  • (iii)  தன்னை நம்பி வந்த வீடணனுக்கு இலங்கையைக் கொடுக்கின்றான்.
  • (iv) இலங்கையை வழங்குவதால் தன்னை நம்பும் யாவரும் நலம் பெறவேண்டும் என்று நினைக்கும் உரிமையைக் கொடுக்கின்றான் இராமன்.

இவ்வாறாக, இராமபிரான் பணியாளனாய், சகோதரனாய், தந்தைக்கு உற்ற மகனாய், தாய்க்கு உற்ற மகனாய், நண்பனாய், உரிமையை வழங்கும் சகோதரனாய்ப் பிற உயிர்களுடன் பல உறவு நிலைகளைக் கொண்டு இராமன் பண்பின் படிமமாக விளங்குகிறார்.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts