July 9th Tamil Unit 2 Assignment Answer key, Question paper

July 9th Tamil Unit 2 Assignment Answer key, Question paper

TN 9th Tamil July month unit 2 Assignment Question peper and Answer key pdf Download Available 

  • 9th tamil  Unit 2 Assignment Answer key - PDF  Download - July month

  •  பாடம்: தமிழ்
  •   வகுப்பு: ஒன்பது

  •   ஒப்படைப்பு - விடைகள் 
  •   இயல் - 2 
  •  இயற்கை , சுற்றுச்சூழல்
1. ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் “ என்று பாடியவர் யார் ?
  •  இளங்கோவடிகள்
2. தௌலீஸ்வரம் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
  •  கோதாவரி ஆறு 
3. 'மே தினமே வருக' இந்நூலின் ஆசிரியர் யார் ?
  • கவிஞர்.தமிழ்ஒளி 
4. கந்தம் என்ற சொல்லின் பொருள் யாது ?
  •    மணம் 
5. நீர்நாடு என்று அழைக்கப்படும் நாடு எது?
  •    சோழநாடு 
6. பெரிய புராணத்தை இயற்றியவர் யார்?
  •  சேக்கிழார்
7. திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலை எழுதியவர் யார்?
  • நம்பியாண்டார் நம்பி.
8. பண்டைத் தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் நூல் எது?
  • புறநானூறு
9. மல்லல் மூதூர் வயவேந்தே! - எவ்வகைத் தொடர்?
  •  விளித்தொடர்.
10.அடுபோர். இலக்கணக் குறிப்பு தருக.
  •   வினைத்தொகை
                          பகுதி - ஆ 

I1 குறுவினா

11. உறைக்கிணறு என்றால் என்ன?

               மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு உறைக்கிணறு எனப்படும்.

12. கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளுள் இரண்டினை எழுதுக.

                  * நிலைபெற்ற சிலை 

                  * மே தினமே வருக

                  * குருவிப்பட்டி 

13. களை பறிக்கும் பருவம் எது?
  • நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின முதலிலை சுருள் விரிந்தது.  அப்பருவத்தைக் கண்ட உழவர் இதுதான் களைபறிக்கும் பருவம் என்றனர்.
14. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே-குறிப்பு தருக.
  •  நீர் இன்றி அமையாத  உடல் உணவால் அமைவது ; உணவையே முதன்மையாகவும் உடையது. எனவே , உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.
15. கூவல் என்று அழைக்கப்படுவது எது?
  • உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை.
                                     பகுதி-இ

III. நெடுவினா

16. பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?

பட்டமரத்தின் வருத்தங்கள் :

* மழைநீர் இன்மையால், மரங்கள் பட்டமரங்களாகக் காய்ந்து போகின்றன.

* இலை, தழைகளை யெல்லாம் பெற்றிருந்த மரம், பட்டமரமாகியதால், வெட்டப்படும் நாள் என்று வருமோ என வருந்தி நிற்கிறது.
 
* அழகிய மலர்களும் பசுமையான இலைகளுமாக நிழல் தந்த மரம், வெந்து வெம்பிக் குமைந்தது.

* மேல்பட்டையாகிய ஆடைகள் எல்லாம் விழுந்தன.

* பாடும் பறவை இனங்கள், வாழ வழியற்றுத் தவித்துப் போயின.

*கிளைகளில் ஏறிக் குதிரை ஆடும் சிறார்கள், விளையாட முடியாமல் ஏங்கினர்.

* இவை அனைத்தும் வெறும் கனவாகிப் போயினவே என்பன, பட்டமரம் வருந்தியது.

17. சோழர் காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது ?

சோழர்காலக் 'குமிழித்தூம்பின்  பயன்கள்

* அணையில் வழிந்தோடும் நீரின் அளவை அதிகரிக்கவும், அணையின் முன் தேங்கும் நீரின் சேற்றைக் குறைக்கவும் தமிழன் கையாண்ட அற்புதமான யுக்தி ‘குமிழித் தூம்பு'.

* மழைக்காலங்களில் ஏரியில் நீர் நிரம்பும்போது நீந்துவதில் வல்லவரான ஒருவர் தண்ணீருக்குள் சென்று கழிமுகத்தை அடைந்து, குமிழித்தூம்பை மேலே தூக்குவார்.

* அடியில் இருக்கும் இரு துளைகளின் வழியே, மேலே இருக்கும் நீர் ஓடித் துளையிலிருந்து வெளியேறும்.

* கீழே உள்ள சேறும் சகதியும், துளையில் இருந்து நீருடன் சேர்ந்து வெளியேறும். தூர் வாரவேண்டிய அவசியம் இருக்காது.

                                       பகுதி-ஈ

IV.செயல்பாடு

படத்தைப் பார்த்துக் கவிதை படைக்க. பசுமை யான மரம்-  ஒருவீடு

மாணவக் கவிஞர்கள் தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கவிதையாக வடிக்கவும்.

9th std Tamil assignment Answer key,9th Tamil unit 2 Assignment Answer key ,m 9th Tamil July Month Answer key 

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post