> Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.2 கண்மணியே கண்ணுறங்கு ~ Kalvikavi - Educational Website - Question Paper

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.2 கண்மணியே கண்ணுறங்கு

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.2 கண்மணியே கண்ணுறங்கு

Students can Download 6th Tamil Chapter 5.2 கண்மணியே கண்ணுறங்கு Questions and Answers, Summary, Notes,

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 5.2 கண்மணியே கண்ணுறங்கு

கற்பவை கற்றபின்

Question 1.

உங்கள் பகுதியில் பாடப்படும் தாலாட்டுப் பாடல் ஒன்றை அறிந்து வந்து பாடுக.

Answer:

உசந்த தலைப்பாவோ

‘உல்லாச வல்லவாட்டு’

நிறைந்த தலை வாசலிலே

வந்து நிற்பான் உன் மாமன்

தொட்டிலிட்ட நல்லம்மாள்

பட்டினியாப் போராண்டா

பட்டினியாய் போற மாமன் – உனக்கு

பரியம் கொண்டு வருவானோ?

Question 2.

உங்கள் பகுதியில் பேசப்படும் பழமொழிகளைத் தொகுக்க.

Answer:

  • (i) கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
  • (ii) குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.
  • (iii) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
  • (iv) கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
  • (v) வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.

பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………..

அ) பாட்டி + சைத்து

ஆ) பாட்டி + இசைத்து

இ) பாட்டு + இசைத்து

ஈ) பாட்டு + சைத்து

Answer:

இ) பாட்டு + இசைத்து

Question 2.

கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………

அ) கண் + உறங்கு

ஆ) கண்ணு + உறங்கு

இ) கண் + றங்கு

ஈ) கண்ணு + றங்கு

Answer:

அ) கண் + உறங்கு

Question 3.

வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………

அ) வாழையிலை

ஆ) வாழை இலை

இ) வாழைலை

ஈ) வாழிலை

Answer:

அ) வாழையிலை

Question 4.

கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………

அ) கைமர்த்தி

ஆ) கைஅமர்த்தி

இ) கையமர்த்தி

ஈ) கையைமர்த்தி

Answer:

இ) கையமர்த்தி

Question 5.

உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் ……………..

அ) மறைந்த

ஆ) நிறைந்த

இ) குறைந்த

ஈ) தோன்றிய

Answer:

அ) மறைந்த

குறுவினா

Question 1.

இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் யாவை?

Answer:

  • சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு.

Question 2.

நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப் பாடல் கூறுவது யாது?

Answer:

  • நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப்பாடல் கூறுவன: வீட்டிற்கு வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று வாழை இலையில் அறுசுவையான உணவளித்து உபசரிப்பர்.

சிறுவினா

Question 1.

தாய் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறாள்?

Answer:

தாய் தன் குழந்தையைப் பாராட்டுதல் :

  • (i) தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்தாயோ!
  • (ii) தங்கப் பூ பதித்த தந்தத்தால் ஆனத் தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேரநாட்டின் முத்தேனோ!
  • (iii) இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் சோழநாட்டின் முக்கனியோ.
  • (iv) குளம் வெட்டி, அணைகட்டிக் குடிமக்களின் பசியைப் போக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழோ! கண்ணே கண்மணியே கண்மூடி உறங்குவாயாக! என்று பாராட்டிக் குழந்தையைத் தாலாட்டுகிறாள்.

சிந்தனை வினா

Question 1.

வாய்மொழி இலக்கிய வகைகளின் பெயர்களைத் தொகுக்க.

Answer:

  • (i) நடவுப் பாட்டு
  • (ii) தாலாட்டுப் பாட்டு
  • (iii) வள்ளைப் பாட்டு
  • (iv) விடுகதைப் பாட்டு
  • (v) ஏற்றப் பாட்டு
  • (vi) பரிகாசப் பாட்டு
  • (vii) கும்மிப் பாட்டு
  • (viii) கண்ண ன் பாட்டு
  • (ix) ஏசல் பாட்டு
  • (x) ஒப்பாரிப் பாட்டு

Question 2.

குழந்தைகளைக் கொஞ்சுவதற்குப் பயன்படுத்தப்படும் சொற்களைத் தொகுக்க.

Answer:

கண்ணே !

முத்தே !

செல்லம்!

பட்டு!

அம்முக்குட்டி!

ராஜா! தங்கம்!

கூடுதல் வினாக்கள்

Question 1.

தாலாட்டு – பெயர்க்காரணம் எழுதுக.

Answer:

  • (i) தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று.
  • (ii) தால் என்பதற்கு நாக்கு என்று பொருள். நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு என்று பெயர் பெற்றது.
  • (iii) குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.

Question 2.

தாலாட்டுப் பாடலில் குழந்தை எவ்வாறு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது?

Answer:

  • தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

Question 3.

தாலாட்டுப் பாடலில் குழந்தை எவ்வாறு பாடப்பட்டுள்ளது?

Answer:

  • தங்கப் பூ –பதித்த தந்தத்தால் ஆனத் தொட்டிலில் செல்லமாய் உறங்குவதாகப் பாடப்பட்டுள்ளது.

Question 4.

தாலாட்டுப் பாடலில் பாண்டிய நாட்டினைப் பற்றிக் கூறுவது யாது?

Answer:

  • பாண்டிய நாடு குளம் வெட்டி, அணை கட்டிக் குடிமக்களின் பசியைப் போக்கும் எனக் கூறுகிறது.

நூல் வெளி

தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று. தால் என்பதற்கு நாக்கு என்று பொருள். நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால்+ஆட்டு என்று பெயர் பெற்றது. குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts