> Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.2 பிள்ளைக்கூடம் ~ Kalvikavi

10,11,12th New Study Material 2025 - 2026

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.2 பிள்ளைக்கூடம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.2 பிள்ளைக்கூடம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 4.2 பிள்ளைக்கூடம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 4.2 பிள்ளைக்கூடம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.2 பிள்ளைக்கூடம்

Question 1.

குறுவினா இங்கே ஐம்பதாண்டு வேம்பு

கோடையில் கொட்டும் பூக்களை

எண்ணச் சொல்கிறார்கள் – எண்ணச் சொல்கிறவர்கள் யார்? எண்ணுபவர்கள் யார்?

Answer:

  • எண்ணச் சொல்கிறவர்கள் : தாய்மொழியில் கற்பிப்போர்.
  • எண்ணுபவர்கள் : தாய்மொழியில் கற்போர்

கூடுதல் வினாக்கள்

Question 2.

இரா. மீனாட்சியின் கவிதைத் தொகுப்புகள் யாவை?

Answer:

  • நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறுபயணம், வாசனைப்புல், உதய காலிருந்து, கொடிவிளக்கு என்பன, இரா. மீனாட்சியின் கவிதைத் தொகுப்புகளாகும்.

Question 3.

பிள்ளைகள் எவற்றினைப்போல் நடக்க, இசைக்க, பறக்கவேண்டுமெனப் பிள்ளைக்கூடக் கவிதை கூறுகிறது?

Answer:

  • பிள்ளைகள், காலையில் மயிலுடன் நடக்க வேண்டும்; மாமன் குயிலுடன் கூவி இசைக்க வேண்டும். வண்ணத்துப் பூச்சிகளுடன் பறக்கவேண்டுமெனப் பிள்ளைள்க்கூடக் கவிதை கூறுகிறது.

சிறுவினா (கூடுதல்)

Question 1.

இரா. மீனாட்சி குறித்துக் குறிப்பெழுதுக.

Answer:

  • புதுச்சேரியில் ‘ஆரோவில்’ என்னும் இடத்தில் இரா. மீனாட்சி வாழ்கிறார். ஆசிரியப் பணியிலும், கிராம மேம்பாட்டிலும் ஈடுபட்டுள்ளார். நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறுபயணம், வாசனைப் புல், உதயநகரிலிருந்து, கொடிவிளக்கு என்னும் கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார்.
  • பாடமாக அமைந்த கவிதை, கொடிவிளக்கு’ நூலிலிருந்து தேர்வு செய்யப் பெற்றுள்ளது. இயற்கையோடு இயைந்த கல்வியை வரவேற்று, அதனால் கிடைக்கும் மகிழ்வைக் கவிதையாக்கி அளித்துள்ளார்.

இலக்கணக்குறிப்பு

  • கற்பிக்கும் – பெயரொம்
  • பறந்து, நடக்க, இசைக்க, வீழ்ந்து – வினையெச்சங்கள்

உறுப்பிலக்கணம்

1. விழந்து – வீழ் + த் (ந்) + த் + உ

ஓழ் – பகுதி, 

  • த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், 
  • த் – இறந்தகால இடைநிலை,
  • ‘உ – வினையெச்ச விகுதி.

2. பறந்து – பற + த் (ந்) + த் + உ

  • பற – பகுதி, 
  • த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், 
  • த் – இறந்தகால இடைநிலை,
  • உ – வினையெச்ச விகுதி.

3. பயின்று – பயில் (ன்) +  + உ

  • பயில் – பகுதி, ‘ல்’ ‘ன்’ ஆனது விகாரம், 
  • உ – வினையெச்ச விகுதி.

4. விரும்புகின்றேன் – விரும்பு + கின்று + ஏன்

  • விரும்பு – பகுதி, 
  • கின்று – நிகழ்கால இடைநிலை,
  •  ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. பள்ளிக்கூடம் – பள்ளி + கூடம்

  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (பள்ளிக்கூடம்)

2. ஐம்பதாண்டு – ஐம்பது + ஆண்டு

  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (ஐம்பத் + ஆண்டு)
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (ஐம்பதாண்டு)
3. தட்டுக்கூடை – தட்டு + கூடை

  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசபத மிகும்” (தட்டுக்கூடை)

4. சர்க்கரைப் பண்டம் – சர்க்கரை + பண்டம்

  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (சர்க்கரைப்பண்டம்)

5. குறுஞ்செடி – குறுமை + செடி

  • “ஈறுபோதல்” (குறு + செடி); “இனமிகல்” (குறுஞ்செடி)

பலவுள் தெரிக (கூடுதல்)

Question 1.

கீழ்உள்ளவற்றைப் பொருத்தி விடை காண்க.

அ. கொட்டும் பூக்களை – 1. குறிக்கச் சொல்கிறார்கள்,

ஆ. தியானிக்கும் நேரத்தை – 2. ஓவியமாகத் தீட்டச் செய்கிறார்கள்

இ. எறும்புகளின் வேகத்தை – 3. கவிதை எழுதச் சொல்கிறார்கள்

ஈ. மழைத்துளிகளின் வடிவத்தை – 4. எண்ணச் சொல்கிறார்கள்

– 5. அளக்கச் சொல்கிறார்கள்

1. அ – 2, ஆ – 1, இ – 4, ஈ – 3.

2. அ – 1 , ஆ – 3, இ – 5, ஈ – 2.

3. அ – 3, ஆ – 2, இ – 1, ஈ – 5.

4. அ – 4, ஆ – 1, இ – 5, ஈ – 2.

Answer:

அ – 2, ஆ – 1, இ – 4, ஈ – 3.

Question 2.

சரியான விடையைத் தெரிவு செய்க

‘பிள்ளைக்கூடம்’ என்னும் கவிதை இடம்பெற்ற நூல்……………….

அ) சுடுபூக்கள்

ஆ) கொடிவிளக்கு

இ) மறு பயணம்

ஈ) வாசனைப்புல்

Answer:

ஆ) கொடிவிளத்து

Question 3.

பிள்ளைக்கூடம்’ என்னும் கவிதையை எழுதியவர் ………………..

அ) மீ. ராசேந்திரன்

ஆ) இரா. மீனாட்சி

இ) அழகிய பெரியவன்

ஈ) சு. வில்வரத்தினம்

Answer:

ஆ) இரம் மீனாட்சி

Share:

0 Comments:

Post a Comment

📣 Join WhatsApp Channel