Samacheer Guide 7th social science Guide term 1- lesson .9 அரசியல் கட்சிகள்

Samacheer Guide 7th social science Guide term 1- lesson .9 அரசியல் கட்சிகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Guide 7th social science Guide term 1- lesson .9 அரசியல் கட்சிகள் Questions and Answers, Summary, Notes.

பாடம்.9 அரசியல் கட்சிகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. இரு கட்சி முறை என்பது

  1. இரண்டு கட்சிகள் அரசாங்கத்தை நடத்துவது
  2. இரண்டு உறுப்பினர் ஒரு கட்சியை நடத்துவது.
  3. இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது.
  4. இவற்றுள் எதுவும் இல்லை.

விடை : 1.இரண்டு கட்சிகள் அரசாங்கத்தை நடத்துவது

2. இந்தியாவில் காணப்படும் கட்சி முறை

  1. ஒரு கட்சி முறை
  2. இரு கட்சி முறை
  3. பல கட்சி முறை
  4. இவற்றுள் எதுவுமில்லை

விடை : 3.பல கட்சி முறை

3. அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கும் அமைப்பு

  1. தேர்தல் ஆணையம்
  2. குடியரசுத் தலைவர்
  3. உச்ச நீதிமன்றம்
  4. ஒரு குழு

விடை : 1.தேர்தல் ஆணையம்

4. அரசியல் கட்சிகள் பொதுவாக எதன் அடிப்படையில் தோற்றுவிக்கப்படுகின்றன?

  1. சமயக் கொள்கைகள்
  2. பொது நலன்
  3. பொருளாதார கோட்பாடுகள்
  4. சாதி

விடை : 2.பொது நலன்

5. ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில் உள்ளது?

  1. இந்தியா
  2. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
  3. பிரான்ஸ்
  4. சீனா

விடை : 4.சீனா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. மக்களாட்சியின் முதுகெலும்பாகத் திகழ்வது _______________

விடை : அரசியல் கட்சிகள்

2. நமது நாட்டின் ஒவ்வொரு கட்சியும்___________ என்ற அமைப்பில் பதிவு செய்தல் வேண்டும்.

விடை : தேர்தல் ஆணையம்

3. அரசியல் கட்சிகள் ____________ மற்றும் _____________ இடையே பாலமாக செயல்படுகின்றன.

விடை : குடிமக்களும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களும்

4. ஒரு பதிவு செய்யப்பட்ட ஆனால் ______________________அரசியல் கட்சி தேர்தலில் தனது சின்னத்தில் போட்டியிட இயலாது.

விடை : அங்கீகரிக்கப்படாதா

5. எதிர்க்கட்சித் தலைவர்____________ அந்தஸ்தில் இருப்பார்.

விடை : கேபினட் அமைச்சர்

III. பொருத்துக

1. மக்களாட்சி அரசின் கொள்கைகளை விமர்சிப்பது

2. தேர்தல் ஆணையம் அரசாங்கத்தை அமைப்பது

3. பெரும்பான்மைக் கட்சி மக்களின் ஆட்சி

4. எதிர்க்கட்சி சுதந்திரமான நியாயமான தேர்தல்

விடை: 1-இ, 2-ஈ, 3-ஆ, 4-அ

IV. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்வு செய்து பொருத்தமான விடையை தேர்வு செய்

1. பின்வரும் கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க

  1. நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
  2. தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளையும் சமமாக நடத்துகிறது.
  3. தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தனி சின்னத்தை ஒதுக்குகிறது.
  4. இவை அனைத்தும்.

விடை :4. இவை அனைத்தும்.

2. கூற்று : பெரும்பான்மை கட்சி ஒரு நாட்டின் சட்டங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

காரணம் : தேர்தலில் பிற கட்சிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆகும்.

  1. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
  2. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
  3. காரணம் தவறு, கூற்று சரி
  4. கூற்று, காரணம் இரண்டும் தவறு.

விடை :1. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

V. ஓரிரு வாக்கியங்களில் விடைகளை எழுதுக.

1. ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை கூறுகள் எவை?

  • எந்த ஒரு அரசியல் கட்சியும் பின்வரும் மூன்று கூறுகளைக் கொண்டிருக்கும்.

  1. தலைவர்
  2. செயல் உறுப்பினர்கள்
  3. தொண்டர்

2. மூன்று வகை கட்சி முறைகளைக் குறிப்பிடுக.

  • ஒரு கட்சி முறை
  • இரு கட்சி முறை
  • பல கட்சி முறை

3. இரு கட்சி முறை காணப்படும் நாடுகளின் பெயர்களை எழுதுக.

  • இருகட்சி முறை பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் காணப்படுகின்றன.

4. குறிப்பு வரைக : கூட்டணி அரசாங்கம்.

  • பல கட்சி அமைப்பில் சில நேரங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி பெறுவதில்லை. இது பாேன்ற நேர்வில் சில கட்சிகள இணைந்து அரசாங்கத்தை அமைக்கின்றன. இது கூட்டணி அரசாங்கம் என அழைக்கப்படுகிறது.

VI. பின்வருவனவற்றிற்கு விடை அளிக்கவும்

1. அரசியல் கட்சியின் செயல்பாடுகளில் ஏதேனும் நான்கினை எழுதுக.

வழங்குதல்

  • நேர்மையான எதிர்ப்பு, பொறுப்புடைமை, ஸ்திரத்தன்மை வழங்கதல்

பரிந்துரைத்தல்

  • தேநர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகத்திற்கு தனி நபரை பரிந்துரைத்தல்

ஏற்பாடு செய்தல்

  • அரசியல் பிரச்சாரம், பேரணி ஆகியவற்றை எற்பாடு செய்தல், தேர்தலில் பெற தேர்தல் அறிக்கையை வெளியிடுதல்

ஊக்குவித்தல்

  • மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் முன்வைத்தல்

ஒருங்கிணைத்தல்

  • சமுதாயத்தையும், அரசையும் இணைத்தல், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை ஒருங்கிணைத்தல்

ஆட்சியமைத்தல்

  • அரசாங்கத்தை ஏற்படுத்தில் இயக்குதல், பொதுவான கொள்கையை உருவாக்குதல்

2. ஒரு அரசியல் கட்சி எப்போது தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுகிறது?

  • மக்களவைத் தேர்தலில் அல்லது மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் ஒரு கட்சி 6% வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.
  • ஒன்ற அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
  • இறுதியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில் 2% தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post