Samacheer Guide 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

Samacheer Guide 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

 Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 8.3 தொலைந்து போனவர்கள் Questions and Answers,

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

Samacheer Guide 11th Tamil Guide Chapter 8.3 தொலைந்து போனவர்கள்

குறுவினா

Question 1.

“கற்றேன் என்பாய் கற்றாயா?” என்று, அப்துல் ரகுமான் யாரிடம் கேட்கிறார்?

Answer:

  • நடக்காததை நடந்ததாகக் கருதிக்கொண்டு, மாயையில் சிக்குண்ட மக்களிடம் கேட்கிறார்.

கூடுதல் வினாக்கள்

Question 2.

எதனை உண்மையான விடியல் எனக் கவிஞர் கூறுகிறார்?

Answer:

  • வானம் வெளுப்பது விடியல் அன்று; வாழ்க்கை விடிய வேண்டும்.
  • அதுவே உண்மையான விடியலாகும் என்கிறார் கவிஞர்.

Question 3.

கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புகளுள் நான்கினைக் கூறுக.

Answer:

  • பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன், ஆலாபனை.

Question 4.

‘உண்மையான உடை’ என்று கவிக்கோ எதனைக் கூறுகிறார்?

Answer:

  • உடலை அலங்கரிக்க அணிவது உடையன்று. மனத்தை அலங்கரித்து அழகுபடுத்தும் நல்ல எண்ணமே, உண்மையான உடை எனக் கவிக்கோ கூறுகிறார்.

Question 5.

‘உண்மையான வெற்றி’ என்பது எதில் இருப்பதாகக் கவிக்கோ கூறுகிறார்?

Answer:

  • வென்று விட்டதாகக் கூறுவது, உண்மையான வெற்றி ஆகாது. உண்மையான வெற்றி என்பது, ஒருவன் மனிதனாக ஆவதில்தான் இருக்கிறது எனக் கவிக்கோ கூறுகிறார்.

Question 6.

பாரசீக ஞான காவியம் எது? அதனை எழுதியவர் யார்?

Answer:

  • ‘மஸ்னவி’ என்பது, உலகப் புகழ்பெற்ற பாரசீக ஞான காவியம்.
  • அதனை இயற்றியவர், ‘மௌலானா ரூமி’.
  • இவர், ஆப்கானிஸ்தானில் 1207இல் பிறந்தவர்.
  • தம் காவியத்தில் புல்லாங்குழலை ஆன்மாவாகக் குறியீடு செய்து, கவிதை படைத்துள்ளார்.

சிறுவினா

Question 1.

அப்துல் ரகுமானின் கவிதையிலிருந்து வினா – விடை வடிவத்திற்கு ஏற்ற அடிகளைத் தருக.

Answer:

கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்

காகிதம் தின்பது கல்வியில்லை.

பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்

பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல.

என்பன, வினா – விடை வடிவத்திற்கு ஏற்ற அடிகளாகும்.

கூடுதல் வினா

Question 2.

கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்து நீ அறிவன யாவை?

Answer:

  • கவிக்கோ அப்துல் ரகுமான், வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவர், ‘வானம்பாடி’க் கவிஞர்களுள் ஒருவர்.
  • புதுக்கவிதை, வசனகவிதை, மரபுக்கவிதை எனப் பல வடிவங்களில் கவிதைகளைப் படைத்துள்ளார்.
  • பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன், ஆலாபனை முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
  • பாரதிதாசன் விருது, தமிழன்னை விருது, சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.

நெடுவினா (கூடுதல்)

Question 1.

எவற்றையெல்லாம் மாயை என்று கவிக்கோ அப்துல் ரகுமான் கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட, அவர்கூறும் வழிமுறையை ஆராய்க.

Answer:

கவிக்கோ மாயை எனக் கருதுபவை :

  • நாள்தோறும் காலையில் விடிந்துவிட்டது எனக் கூறுவது, எடுத்த செயல் ஒன்று முடிந்துவிட்டதாகச் சொல்வது, சில நூல்களைப் படித்துவிட்டு அனைத்தையும் கற்றுவிட்டதாகக் கூறுவது, பிள்ளைகளைப் பெற்றேன் எனக் கூறுவது, காலம் காலமாய்த் தினமும் குளித்துவிட்டேன் எனச் சொல்லுவது, ‘இதைக் கொடுக்கின்றேன்’ என்று கூறி ஒன்றைக் கொடுப்பது, உடலை அலங்கரிப்பதாகக் கூறி உடைகளை அணிவது, விடை அறிந்துவிட்டேன் எனக் கூறுவது, ‘உண்டேன்’ எனக் கூறுவது, ‘வென்று விட்டேன்’ என்று சொல்லுவது ஆகிய எல்லாவற்றையும், கவிக்கோ மாயை என்று கூறுகிறார்.

மாயையிலிருந்து விடுபடக் கவிக்கோ கூறும் வழிமுறைகள் :

  • வாழ்க்கையில் விடிவு ஏற்படுவதுதான் உண்மையான விடியல்.
  • எந்தச் செயலும் முழுமையாய் முடிந்து விடுவதில்லை; செயலைத் தொடர்வதே நியதி.
  • வாழ்க்கையைப் படிப்பதுதான் உண்மையான கல்வி.
  • பெறுவது என்பது ஞானத்தைப் பெற்றதாக இருக்க வேண்டும்.
  • மன அழுக்குப் போகுமாறு குளிப்பதே உண்மைக் குளியலாகும்.
  • கொடுப்பவை எல்லாம் நம்முடையன அல்ல என, நினைவு கொள்ள வேண்டும்.
  • உள்ளத்தை அலங்கரிக்கும் நல்ல எண்ணமே நல்ல உடையாகும்.
  • உண்மையான வெற்றி என்பது, ஒருவன் மனிதனாக மாறுவதுதான்.
  • கேள்வியை ஒளியாக வைத்துக்கொண்டு தொலைந்து போன உன்னைத் தேடு கறு கவிக்கோ அப்துல் ரகுமான், மாயையில் இருந்து விடுபட வழிகாட்டுகிறார்.

இலக்கணக்குறிப்பு

  • கற்றேன், பெற்றேன், குளித்தேன், அளித்தேன், அணிந்தேன், தின்றேன் வென்றேன் – தன்மை ஒருமை வினைமுற்றுகள்.
  • உரைத்தாய், நிற்கின்றாய், என்பாய், பேசுகிறாய் – முன்னிலை ஒருமை வினைமுற்றுகள்.
  • உடை அணிந்தேன், காகிதம் தின்பது, பிள்ளைகள் பெறுவது – இரண்டாம் வேற்றுமைத்தொகை.

உறுப்பிலக்கணம்

1. வென்றேன் – வெல் (ன்) + ற் + ஏன்

  • வெல் – பகுதி, ‘ல்’, ‘ன்’ ஆனது விகாரம், ஸ் – இறந்தகால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று வித்தி!

2. நிற்கின்றாய் – நில் (ற்) + கின்று ஆய்

  • நில் – பகுதி, ல்’, ‘ற்’ ஆனது விகாரம், கின்று – நிகழ்கால இடைநிலை, ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

3. பெற்றேன் – பெறு (பெற்ற – என்

  • பெறு – பகுதி, ‘பெற்று என் ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

4. அணிந்தேன் – அணி + த் (ந்) + த் + ஏன்

  • அணி – பக்தி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

5. தோற்கின்றார் – தோல் (ற்) + கின்று + ஆர்

  • தோல் – பகுதி, ‘ல்’, ‘ற்’ ஆனது விகாரம், கின்று – நிகழ்கால இடைநிலை, ஆ – படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. கல்வியில்லை – கல்வி + இல்லை

  • “இ ஈ ஐ வழி யவ்வும்” (கல்வி + ய் + இல்லை )
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (கல்வியில்லை)

2. போகவில்லை – போக + இல்லை

  • “ஏனைஉயிர்வழி வவ்வும்” (போக + வ் + இல்லை )
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (போகவில்லை)

பலவுள் தெரிக

Question 1.

“கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்

காகிதம் தின்பது கல்வியில்லை” – இவ்வடிகளில் பயின்று வருவது ………………….

அ) அடி எதுகை, அடிமோனை

ஆ) சீர்மோனை, அடி எதுகை

இ) அடிமோனை, அடி இயைபு

ஈ) சீர்மோனை, அடி மோனை

Answer:

ஈ) சீர்மோனை (கற்றேன், கற்றாயா), அடிமோனை (கற்றேன், காகிதம்)

Question 2.

சொற்களை ஒழுங்குப்படுத்திச் சொற்றொடராக்குக.

அ) நான் எழுதுவதோடு இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகிறேன்.

ஆ) இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்.

இ) இலக்கிய மேடைகளிலும் இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகிறேன்.

ஈ) இதழ்களில் பேசுகிறேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு

Answer:

ஆ) இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகிறேன்.

கூடுதல் வினாக்கள்

Question 2.

“வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்

வெற்றி யில்தான் தோற்கின்றார்” – இவ்வடிகளில் பயின்று வருவது ………………

அ) அடி எதுகை, அடிமோனை

ஆ) சீர்மோனை, ஆடி எதுகை

இ) அடிமோனை, சீர் எதுகை

ஈ) சீர்மோனை சீர் எதுகை

Answer:

இ) அடிமோனை (வென்றேன், வெற்றியில்), சீர்எதுகை (வென்றேன், என்பர்)

Question 3.

‘உரைத்தாய்’ என்பது, ………………. வினைமுற்று.

அ) தன்மை ஒருமை

ஆ முன்னிலை ஒருமை

இ) முன்னிலைப் பன்மை

ஈ) தன்மைப் பன்மை

Answer:

ஆ) முன்னிலை ஒருமை

Question 4.

‘வானம்பாடி’ இயக்கக் கவிஞர்களுள் ஒருவர் ………………..

அ) பிரமிள்

ஆ) பானுசந்தான்

இ) அப்துல் ரகுமான்

ஈ) புதுமைப்பித்தன்

Answer:

இ) அப்துல் ரகுமான்

Question 5.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற அப்துல் ரகுமானின் கவிதைத் தொகுப்பு………………

அ) சுட்டுவிரல்

ஆ) பஸ்னவி

இ) ஆலாபனை

ஈ) நட்சத்திரவாசி

Answer:

இ) ஆலாபனை

Question 6.

அப்துல் ரகுமான் பெற்ற விருதுகள்………………

அ ) தமிழன்னை விருது, அண்ணா விருது

ஆ) தமிழன்னை விருது, பெரியார் விருது

இ) பாரதிதாசன் விருது, காமராஜர் விருது

ஈ) தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது

Answer:

தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post