தமிழகத்தில் 12th மதிப்பெண் வழங்கிய முறை மாணவர்கள் வரவேற்பு

தமிழகத்தில் 12th மதிப்பெண் வழங்கிய முறை மாணவர்கள் வரவேற்பு

தமிழகத்தில் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு நேற்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த மதிப்பெண் முறையில் திருப்தி இல்லை என்றால் தேர்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளதுதமிழகத்தில் 12th மதிப்பெண் வழங்கிய முறை மாணவர்கள் வரவேற்பு :

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மதிப்பெண்கள் முறைகளை தீர்மானிக்க அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரையின் பேரில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு ஜூலை 19ம் தேதியான நேற்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. இது குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

மேலும் நான் எதிர்பார்த்ததை விடவும் அதிக மதிப்பெண்கள் வந்திருக்கிறது. பள்ளிக்குச் செல்லாமல் இவ்வளவு மதிப்பெண்கள் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஒரு மாணவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு மத்தியில் மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்பதே பெரும்பாலான மாணவர்களின் கருத்தாக உள்ளது. இந்த மதிப்பெண்களை கொண்டு கவுன்சிலிங்கில் எப்படி விருப்பமான கல்லூரிகளையும், பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்வது என்பது பெரும் குழப்பமாக உள்ளது என்று சில மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

12th திருப்புதல் தேர்வுகளை அடிப்படையாக வைத்து மதிப்பெண்கள் வெளியிட்டிருந்தால் நாங்கள் இன்னும் அதிக மதிப்பெண் பெற்றிருக்க முடியும் என்றும் சிலர் கூறியுள்ளனர். பொதுத்தேர்வு வைத்திருந்தால் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்க முடியும் என்பதே அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவிகளின் கருத்தாக உள்ளது. மேற்படிப்புகளில் சேர 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம் என்பதால் முதல் முறையாக தசம எண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லை என்றால் தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Previous Post Next Post