Samacheer Book 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 1.1 யுகத்தின் பாடல் Questions and Answers,guide, Notes,book answers,unit Answers

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 1.1 யுகத்தின் பாடல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 1.

“கபாடபுரங்களைக் காவுகொண்டபின்னும்

காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்” – அடிமோனையைத் தெரிவு செய்க.

அ) கபாடபுரங்களை – காவுகொண்ட

ஆ) காகாலத்தால் – சாகாத

லத்தால் – கனிமங்கள்

இ) கபாடபுரங்களை – காலத்தால்

இ) கபாடபுரங்களை – காலத்தால்

குறுவினாக்கள்

Question 1.

என் அம்மை ஒற்றியெடுத்த

நெற்றிமண் அழகே!

வழிவழி நினதடி தொழுதவர்,

உழுதவர், விதைத்தவர்,

வியர்த்தவர்க்கெல்லாம்

நிறைமணி தந்தவளே! – இக்கவிதை அடிகளில் உள்ள வினையாலணையும் பெயர்களை எழுதுக.

Answer:

தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்.

Question 2.

இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.

Answer:

“தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம் கூடில்லாத பறவை”

கூடுதல் வினா

Question 3.

கவிஞர் சு. வில்வரத்தினம் குறித்து எழுதுக.

Answer:

கவிஞர் சு. வில்வரத்தினம், யாழ்ப்பாணம் புங்குடுத் தன் பிறந்தவர்.

கவிதைகள் இயற்றுவதிலும் சிறப்பாகப் பாடுவதிலும் திறனுடையவர்.

இவர் கவிதைகள், ‘உயிர்த்தெழும் காலத்துக்கள் என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

சிறுவினா

Question 1.

சு. வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்?

Answer:

  • பல தலைமுறை கடந்தும் தனது திவடிகளைத் தொழச் செய்தவள். தமிழ்ப்பயிர் தழைத்தோங்க காலந்தோறும் வியர்வை சிந்த உழைத்து, கலைச் செல்வங்களைப் படைக்கச் செய்து, நிறைமணி தந்தவள். தமிழ் மொழியாகிய யலினை அறிவு கொண்டு உழுது, நற்கருத்துகளை விளைவித்துத் தமிழ் நிலத்தில் ஊன்ற உருவியவள்.
  • ஒலிக்கும் கடலையும் நெருப்பாற்றையும், மலை உச்சிகளையும் காற்றில் ஏறிக் கடந்துசெல் என்னும் பாடலை தொன்மையான கபாடபுரங்களைப் பலிகொண்ட பிறகும், காலத்தால் அழியாத செல்வங்களின் வலிமை சேரச் செய்தவள். ஏடு தொடக்கி வைத்து, விரலால் மண்ணில் தீட்டித்தீட்டிஎழுதக் தற்பாத்தவள்.
  • ஆதலால் தமிழன்னை பல்லாயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் எனப் பாடத்தான் வேண்டும் என் கபார் சு. வில்வரத்தினம்.

கூடுதல் வினாக்கள்

Question 2.

வில்வரத்தினம் தமிழ்த்தாய்க்கு எவ்வாறு பல்லாண்டு பாடுகிறார் ?

Answer:

  • “என் அம்மையே” எனத் தமிழ்த்தாயை அழைத்து, “வழிவழி உனது அடியைத் தொழுதவர், உழுதவர், விதைத்தவர், உழைத்து வியர்த்தவர் என அனைவர்க்கும் நிறைமணி தந்தவளே, உனக்குப் பல்லாண்டு பாடத்தான் வேண்டும்” என்று, சு. வில்வரத்தினம் பாடுகிறார்.

Question 3.

சு. வில்வரத்தினம் தமிழன்னையை எவ்வாறு பாடவேண்டுமென்கிறார்?

Answer:

  • சுழன்றடிக்கும் காற்றையும், வீசும் அலைகடலையும், எழும் நெருப்பையும், மலையளவு எழும் பகை யையும் வென்று, தமிழ்த்தாயின் தொன்மத்தைக் காலத்தால் அழியாவகையில் வலிமை சேர்க்கப் பாட வேண்டுமென சு. வில்வரத்தினம் வேண்டுகிறார்.

இலக்கணக் குறிப்பு

  • வழிவழி, தீட்டித்தீட்டி – அடுக்குத்தொடர்கள்
  • தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர் – வினையாலணையும் பெயர்கள்
  • நிறைமணி, கனைகடல் – வினைத்தொகைகள்
  • சாகாத, எழுகின்ற – பெயரெச்சங்கள்
  • உரமெலாம் (உரமெல்லாம்) – தொகுத்தல் விகாரம்
  • மலைமுகடு (மலையின்கண் உள்ள முகடு) – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
  • விரல்முனை (விரலினது முனை) – ஆறாம் வேற்றுமைத் தொகை

உறுப்பிலக்கணம்

1. தீட்டி – தீட்டு + இ

  • தீட்டு – பகுதி, 
  • இ – வினையெச்ச விகுதி.

2. எழுகின்ற – எழு + கின்று + அ

  • எழு – பகுதி, 
  • கின்று – நிகழ்கால இடைநிலை, 
  • அ – பெயரெச்ச விகுதி

புணர்ச்சி விதிகள்

1. ஒற்றியெடுத்த – ஒற்றி + எடுத்த

  • “இ ஈ ஐ வழி யவ்வும்” (ஒற்றி + ய் + எடுத்த )
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (ஒற்றியெடுத்து)

2. காற்றிலேறி – காற்றில் + ஏறி

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (காற் லேறி)

3. பல்லாண்டு – பல + ஆண்டு

  • “பல சில எனும் இவைமுன் பிறவரின் அகரம் ஏகலும்” (பல் + ஆண்டு )
  • “தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இருட்டும் (பல்ல் + ஆண்டு)
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (பல்லாண்டு)

4. உரமெலாம் – உரம் + எலாம்

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (உரமெலாம்)

5. சுவரெலாம் – சுவர் + எலாம்

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (சுவரெலாம்)

பலவுள் தெரிக

கூடுதல் வினாக்கள்

Question 2.

கவிஞர் சு. வில்வரத்தினத்தின் கவிதைத் தொகுப்பு………………..

அ) பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்

ஆ) தமிழனின் கவிதை இயல்

இ) புல்லின் இதழ்கள்

ஈ) உயிர்த்தெழும் காலத்துக்காக

Answer:

ஈ) உயிர்த்தெழும் காலத்துக்காக

Question 3.

கவிஞர் சு. வில்வரத்தினம் பிறந்த புங்குடுத்தீவு, …………………உள்ளது.

அ) அமெரிக்காவில்

ஆ) கனடாவில்

இ) இந்தியாவில்

ஈ) யாழ்ப்பாணத்தில்

Answer:

ஈ) யாழ்ப்பாணத்தில்

Post a Comment

கல்விகவி வலைப்பூ நண்பர்களே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் கருத்தையும் ,study Mateials தேவையை சுதந்திரமாக பகிரலாம். நண்பர்களுக்கு Share செய்யலாம்.

குறிப்பு:

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. kalvikavi வலைப்பக்கங்கள்பூ இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விகவி குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் KALVIAVI வலைப்பூ ( Join our telegram & WhatsApp Get instant Study Materials & கல்விச்செய்திகள் )

Previous Post Next Post